CMD உடன் சந்திப்பு
நமது BSNL நிறுவனத்தில் உள்ள அணைத்து சங்கங்களின் மையக் குழு இன்று (22-07-2013) CMD அவர்களை சந்தித்து கீழ் கண்ட பிரச்சனைகளை விவாதித்து உள்ளது .
1. டவர் பராமரிப்பு பகுதியில் டீசல் மற்றும் மின்சார பிரச்சனையால் அடிக்கடி பழுது ஏற்படுவதால் நமது சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது .
2. தேவையற்ற பொருட்களை ஏலம் விட தாமதம் செய்வதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது .
3. காலியாக உள்ள நமது அலுவலகங்கள் , குடியிருப்புகள ,பயிற்சி மையங்கள் ஆகியவற்றை வாடகை மற்றும் ஒத்தி அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களுக்கு விடுவது .
4. டெலிகாம் தொழிற்சாலைகளை நவீனப்படுத்தி புதிய பொறியாளர்களை தேர்ந்து எடுத்து புதிய கருவிகளை உற்பத்தி செய்யவேண்டும் .1000 க்கும் மேற்பட்ட டவர்கள் உற்பத்தி செய்யப்பட்டு தொழிற்சாலைகளில் கையிருப்பாக இருக்கும் போது பல SSA ல் தனியாரிடம் இருந்து டவர்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் .
5. மார்க்கெட்டிங் பகுதியில் மேலும் கூடுதலாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வலிமைப்படுத்த வேண்டும் ..
6. போதுமான உபகரணங்களை (கேபிள், டெலிபோன் ) உடனடியாக வாங்க வேண்டும் .
7. வொர்க் கமிட்டி ஐ குறிபிட்ட தேதிகளில் நடத்தி அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க வேண்டும் .நமது CMD மேற்கூறிய பிரச்சனைகளை கவனிப்பதாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment