Monday 19 October 2020

 இரங்கல் கூட்டம். 

----------------------------

நெல்லை மாவட்டம் 

--------------------------------

  19.10.2020  திங்கள்கிழமை, GM அலுவலகத்தில் வைத்து மதியம் 01.00 மணியளவில்,AIBDPA மாவட்ட செயலர் தோழர் D. கோபாலன்  அவர்களுக்கு BSNLEU  சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.


          BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் N. சூசை மரியஅந்தோணி தலைமை தாங்கினார்.


          நெல்லை மாவட்ட TDM  கலந்து கொண்டு தோழர்  D.கோபாலன் அவர்கள்  படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.அதைத்தொடர்ந்து அனைத்து தோழர்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


           நமது AIBDPA மாநில உதவி தலைவர் தோழர் V. S. வேம்புராஜா, BSNLEU மாநில அமைப்பு செயலாளர் தோழர் V. சீதாலட்சுமி, TNTCWU மாவட்ட செயலாளர் தோழர் P. ராஜகோபால், அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல சங்க மாவட்ட செயலாளர் தோழர் பரமசிவன்,SNEA மாவட்ட செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், NFTE BSNL மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சாலன், TEPU  மாவட்ட செயலாளர் தோழர் சுகுமார் உட்பட பல மாவட்ட செயலாளர்கள் அஞ்சலி உரையாற்றினர். 


             நமது AIBDPA தோழர்கள் உட்பட பல அதிகாரிகள் ,ஊழியர்கள்,தோழமை சங்க தோழர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


             நிறைவாக AIBDPA  மாவட்ட தலைவர் தோழர் ச.முத்துசாமி அஞ்சலி நிறைவுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார். 






Saturday 17 October 2020

16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

 16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்திற்காக பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கிய போதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 15% சம்பளம் கூட கிடைக்க பெறவில்லை.. 22.09.2020 அன்று நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் பில் தொகைக்கான பணத்தை நிர்வாகம் தயாராக வைத்திருக்க வேண்டும்..இந்த தொகை நிலுவை சம்பளத்திற்கான தொகையை விட குறைவில்லாமல் இருக்க வேண்டும்..மறு உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கும் வரை ஒப்பந்தகாரர்களுக்கு பில் தொகை கொடுக்க கூடாது என்று சொல்லப்பட்ட பிறகும் கூட இன்றைய தேதி வரை நிர்வாகம் நிலுவை சம்பளத்தை கணக்கீடு செய்யவோ சொல்லப்பட்ட தேதியில் பணத்தை செலுத்தவோ முன்வரவில்லை..மீண்டும் இந்த முறையும் நிர்வாகம் 5 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்தார்கள்.. ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே வேலை செய்தமைக்கு சம்பளம் கிடைக்காமல் ஒப்பந்த தொழிலாளர்கள் மிக பெரிய துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.. சம்பள நிலுவை தொகை என்பது பல கோடி ரூபாய்களாக இருக்கிற காரணத்தால் ஒரு சிறப்பு எற்பாடு செய்து RLC நிலுவை தொகையை தொழிலாளர்களிடம் விசாரிக்க வேண்டும் அதற்கு பிறகு அந்த தொகையை நிர்வாகம் RLC யிடம் செலுத்த வேண்டும்.. முந்தைய இடைக்கால உத்தரவுகளும் தற்போதைய நிலைமைகளையும் கணக்கில் எடுத்து கொண்டு நிர்வாகம் நிலுவை தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மண்டல தொழிலாளர் ஆணையரிடம் செலுத்த வேண்டும்.. அதற்கு பிறகு அனைத்து தரப்பும் நிலுவை சம்பளத்தை பட்டுவாடா செய்வதற்கான செயல் முறையை கண்டறிய வேண்டும்.. இடைக்கால உத்தரவுகள் நிர்வாகம் அனைத்து ஒப்பந்தகாரர்களின் மொத்த பில் தொகையினை சரி பார்த்து அதில் 25% தொகையை மண்டல தொழிலாளர் ஆணையர் துவங்கப்பட வேண்டிய தனி வங்கி கணக்கான 'Contract Workers Wage Due WP 34513 ' என்ற வங்கி கணக்கில் 31.10.2020 குள் செலுத்த வேண்டும்.. மீதமுள்ள 25% நிலுவை தொகையை 20.11.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. 50% நிலுவை தொகையை 20.12.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. இந்த மாதம் இறுதிக்குள் செலுத்தப்படுகிற 25% நிலுவை தொகை என்பது தீபவளிக்கு முன்பு ஒரு பகுதி சம்பளத்தையாவது ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும்.. நிர்வாகம் நிலுவை தொகையை நீதிமன்றம் கொடுத்த கால கெடுவிற்குள் கறாராக செலுத்த வேண்டும்.. அடுத்த விசாரணை 05.11.2020 அன்று நடைபெறும்.. TNTCWU மாநில சங்கம்


இரங்கல் செய்தி.   
------------------------------        
          அருமைத் தோழரும்      AIBDPA வின் திருநெல்வேலி மாவட்டச் செயலருமான , தோழர் D.கோபாலன்அவர்கள்  திருநெல்வேலி
யில் இன்று (17-10-20 ) காலை காலமாகி விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

BSNLEU வின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், தற்போது பாரதிநகர் நலவாழ்வு சங்கத்தின் செயலாளராகவும் இருந்து திறம்பட செயலாற்றியவர். 

   அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

 அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 
02.00மணிக்கு சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து நடைபெற்றும்.

ஆழ்ந்த வருத்தத்துடன், 
P.ராஜகோபால் TNTCWU 
நெல்லை மாவட்டம்.

Friday 16 October 2020

தகவல் அறியும் உரிமைக்குழுவை

தகவல் அறியும் உரிமைக்குழுக்களை மத்திய மாநில சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என செப்டம்பரில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.   BSNL நிர்வாகத்திடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல்வேறு தகவல்களை பெறுவது தான் இந்தக் குழுக்களின் பணி.  அவ்வாறு பெறும் தகவல்கள் மூலம், நமது சங்கம், நிர்வாகத்திடமும், அரசாங்கத்திடமும், பிரச்சனைகளை வலுவாக எழுப்ப இயலும்.
மத்திய செயற்குழுவின் இந்த முடிவையொட்டி, 09.10.2020ல் கூடிய அகில இந்திய மையக்கூட்டம், கீழ்கண்ட தோழர்களை கொண்ட அகில இந்திய தகவல் அறியும் உரிமைக்குழுவை உருவாக்கியுள்ளது: –
 (1)   தோழர்C.K.குண்டண்ணா, முன்னாள் கர்நாடக மாநில செயலர்.
(2) தோழர் மிஹிர்தாஸ் முன்னாள் AGS.
(3) தோழர் M.K.தவே, மத்திய சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர்.
இந்தக்குழுவின் அமைப்பாளராக தோழர் C.K.குண்டண்ணா  செயல்படுவார்.
மாநில தகவல் அறியும் உரிமைக்குழுக்களை, அனைத்து மாநிலங்களும் உடனடியாக உருவாக்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தோழர் P.அபிமன்யு
பொதுச்செயலாளர்