Monday 8 July 2013

நெய்வேலி போராட்டம் தொடரும்


நெய்வேலி போராட்டம் தொடரும்
முதலாவது சுரங்கத்தில் இன்று முற்றுகை : என்எல்சி தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
கடலூர், ஜூலை 8-7வது நாளாக தொடர் ந்து வேலைநிறுத்தம் மேற் கொண்டு வரும் என்எல்சி தொழிலாளர்கள் முதலா வது சுரங்கத்தை முற்றுகை யிடுகிறார்கள்.என்எல்சி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. ஆனால், என்எல்சி-க்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த சென் னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித் தது. இந்த தடையையும் மீறி 17 தொழிற்சங்கத்தை சேர்ந் தவர்கள் கடந்த 3-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு, மின் உற்பத்தியும் குறைந் துள்ளது.
இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தொழிற் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்களன்று (ஜுலை9) மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே. அகர்வால், நீதிபதி சத்ய நாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலை நிறுத்த போராட்டத்திற்கு விதிக்கப் பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டனர். மேலும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை யையும் நீதிபதிகள் நிராகரித் தனர்.இதனையடுத்து, நெய் வேலியில் தொழிற்சங்க கூட் டமைப்பு சார்பில் அடுத்தக் கட்ட ஆலோச னைக் கூட் டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலைநிறுத் தப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதுகுறித்து விரிவாக விவாதிக் கப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து சங்கத் தலைவர்களும் முன் னணி நிர்வாகளும் தொழி லாளர்களும் திரளாக பங் கேற்றனர்.பின்னர், செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி யில், என்எல்சி நிறுவனத் தை பாதுகாக்கும் இந்த தேசபக்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்துள்ள தாக தெரிவித்தனர்.இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக, செவ் வாய்க்கிழமை (ஜுலை 9) காலை 7 மணிக்கு முதல் சுரங்கத்தை முற்றுகையிடப் போதாகவும் கூறினர்.
மத்திய தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு : நாடு முழுவதும் போராட அழைப்பு
புதுதில்லி, ஜூலை 8-பங்குகள் தனியார்மயத்திற்கு எதிராக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள் நடத்தி வரும் வரலாற் றுச் சிறப்புமிக்க மாபெரும் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் பேராதரவு தெரிவித்துள்ளன.
தலைநகர் தில்லியில் திங்களன்று பிஎம்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்க கூட் டத்தில் ஐஎன்டியுசி தலைவர் டாக்டர் சஞ்சீவ ரெட்டி எம்.பி., பிஎம்எஸ் தலை வர் வைத்தியநாத் ராய், எச்எம்எஸ் சார் பில் எஸ்.எச்.சித்து, சிஐடியு தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச்செயலாளர் தபன்சென் எம்பி., ஸ்வதேஷ் தேவ் ராய், ஏஐடியுசி தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா எம்.பி., தொமுச தலைவர் எம். சண்முகம் மற்றும் ஏஐயுடியுசி, ஏஐசி சிடியு, யுடியுசி, டியுசிசி, சேவா ஆகிய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்குப்பின்னர் இவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக் கையில், என்எல்சியின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர் கள் உட்பட 26 ஆயிரத்திற்கும் மேற் பட்ட தொழிலாளர்களைக் களமிறக்கி மிகப்பிரம்மாண்டமான - ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி வரும் அனைத்து 16 சங்கங்களையும் மத்திய தொழிற்சங்கங்கள் பாராட்டுகின்றன எனக்கூறியுள்ளனர்.
நிலக்கரி, மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட நாட்டின் கேந்திரமான துறைகளில் நிதி ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் மிகவும் அற்புதமாக செயல்பட்டுக்கொண்டிருக் கும் மாபெரும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையெல்லாம் அடுத்தடுத்து தனியாருக்கு தாரை வார்ப் பது என்ற மத்திய அரசின் நடவடிக்கை யை கடுமையாக கண்டித்துள்ளனர். நிலக்கரித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற என்எல்சி நிறுவனம் நாட்டின் நவரத்தின பொதுத்துறை நிறுவ னங்களில் ஒன்றாகும். பழுப்பு நிலக் கரியை வெட்டி எடுப்பதிலும், மின்சா ரத்தை உற்பத்தி செய்வதிலும் நிர்ணயிக் கப்பட்ட இலக்குகளையும் தாண்டி மிகப்பெரும் உற்பத்தியை எட்டி சாத னை படைத்துள்ள நிறுவனம் என் எல்சி. 2011-12ம் நிதியாண்டில் என்எல்சி நிறுவ னம், அரசாங்கத்திற்கு அளித்த பங்கா தாயத்தொகை ரூ.1116.53 கோடி ஆகும். வரிகள், தீர்வைகள் உள்ளிட்ட அனைத் தையும் சேர்த்து நிகர லாபம் ரூ.1411.33 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள், பொதுத் துறை நிறுவன பங்குகள் தனியார்மய மாக்கலை எதிர்த்து அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் அதிகரித் துள்ளது என்றும், என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட்டு சுமூகமான நிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.அதே நேரத்தில் அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள என்எல்சி தொழிலாளர்களுக்கு நாட் டின் ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்க மும் முழு ஆதரவு அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், காலவரை யற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட் டுள்ள என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் நாடு முழுவதுமுள்ள தொழிலாளர்கள் மாபெ ரும் போராட்ட இயக்கத்தில் ஈடுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment