Monday, 8 July 2013

விமானநிலையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பா?

விமானநிலையங்கள் தனியாரிடம் ஒப்படைப்பா?
சிஐடியு கடும் எதிர்ப்பு

புதுதில்லி, ஜூலை 7 -நாட்டின் 15 பெரும் விமான நிலையங் களை தனியார்மயமாக்கத் துடிக்கும் மத் திய அரசின் நடவடிக்கை தவறான செயல். இது ஒட்டுமொத்தமாக தீங்கு தரக்கூடியது என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) எச்சரிக்கை விடுத்துள்ளது.தனியாரின் கைகளில் விமானநிலையங் களை ஒப்படைக்கும் அரசின் நடவடிக் கையை கண்டித்து சிஐடியுவின் பொதுச் செயலாளர் தபன் சென் எம்.பி., அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:அரசு மற்றும் தனியார் பங்களிப்பு என நாட்டில் 15 விமானநிலையங்களை தனி யார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.இதுதொடர்பான செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஜூலை 4ம் தேதி யன்று வெளியாகியுள்ளது.
தனியார்மயத் திற்குத் தயாராகி இருக்கும் அரசு கொல் கத்தா, சென்னை, அகமதாபாத், ஜெய்ப் பூர், லக்னோ மற்றும் கவுகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களுக்கு உலகலாளவிய ஏலத்திற்கு அழைப்பு தருகிறது. துவக்கச் சுற்றில் அந்த விமான நிலையங்களை தனி யாரின் கையில் தருவதற்கு தேர்வு செய் கிறது. இந்த விமான நிலையங்கள் மிகச் சிறப்பான வர்த்தக செயல்பாட்டில் உள்ள வை ஆகும். மேலும் நல்ல வருவாயும் இவற்றின் மூலம் கிடைக்கின்றன.ஏற்கனவே இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூலம், மேற்கண்ட விமான நிலையங்களில் பெரும் முதலீடு கள் செய்யப்பட்டுள்ளன. புதுப்பிப்பு மற் றும் நவீனமயமாக்கல் பணிகளுக்காக இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.கொல்கத்தா மற்றும் சென்னை விமான நிலையங்கள் புதுப்பிப்புப் பணிக்கு மட்டும் ரூ.3ஆயிரத்து 700 கோடியை இந் திய விமான நிலைய ஆணையம் செலவு செய்துள்ளது. மேலும் இதர விமான நிலையங்களின் நவீனமயத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பொதுப் பணம் செலவிழக்கப்பட் டிருக்கிறது.
தற்போது அந்த விமான நிலை யங்களின்நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு தனியாரின் கைகளில் ஒப்படைக்கப்படு கிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவை உள்ள விமானநிலையங்களை தனியாரிடம் தர தீவிரப்பணி நடைபெறு கிறது. இதுபோன்று பொதுச் சொத்துக் களை தருவதற்கு அரசுக்கு உரிமை இருக் கிறதா?பத்திரிகைகளில் வெளியாகியுள்ள விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பு மிகவும் கேலிக்குரியது.பொதுத்துறைக்கு பின்னடைவை ஏற் படுத்தும் நடவடிக்கையாக, ஏற்கனவே நவீனமயமாக்கப்பட்ட விமான நிலை யங்கள்மற்றும் வருவாய் ஈட்டக்கூடிய விமான நிலையங்கள் தனியாரின் கைகளில் அளிக்கப்படுகிறது. இப்படி செய்வதால் விமான நிலையங் களின் நிர்வாகம் மேம்பாடு அடையும் என அமைச்சகம் கூறுகிறது. அந்த அறிவாளி கள் இந்திய விமான நிலைய ஆணையத் தைப்போல நாட்டில் வேறுஎந்த முகமை கூடுதல் நிர்வாக அனுபவம் பெற்றுள்ளது என்பதைச் சொல்வார்களா? தேசிய பாது காப்பு தொடர்புள்ள விமான நிலையங் களின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் தரும் செயல்போல முக்கிய கட்டமைப்பு களை ஒப்படைக்கும் ‘விளையாட்டு’ திட்டம் ஏதேனும் உள்ளதா? இந்தப் பணிகளை வேகமாக செய்வதற்கு தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பொதுச்சொத்தில் அதிகாரம் செலுத்தும் நிலையில் தனியார் உள்ளனர். அவர்கள் எந்த வித மூலதன முதலீடும் இல்லாம லேயே ஆதாயம் குவிக்கும்நிலை உள்ளது. இந்த நடவடிக்கை ஊழல், விளையாட்டு மேலும் தொடர்வதை வெளிப்படுத்து கிறது.அதிகாரிகள் குறுக்கீடு மூலம் இந்திய விமானநிலைய ஆணையச் செயல் பாட்டை தன்னிச்சையாக செயல்படுத்த அனுமதிக்க கூடாது. இந்த நடவடிக்கையை சிஐடியு கடுமை யாக எதிர்க்கிறது. தனியாரிடம் நிர்வாகப் பொறுப்பு செல்வதால் விமான நிலைய ஆணைய வாடகை வருவாயில் உரிமை இல்லாத நிலையை ஏற்படுத்தும். பொது-தனியார் பங்களிப்பு என விமான நிலை யங்களை தனியாரிடம் தரும் நடவடிக்கை யை அரசு நிறுத்த வேண்டும். அரசின் இந்த நடவடிக்கையை நாட் டின் அனைத்து சங்கங்களும் தொழி லாளர்களும் மக்கள் விமானப் போக்கு வரத்துத்துறையின் சங்கங்களும் ஒன்றி ணைந்து கடுமையாக எதிர்க்க வேண்டும் என சிஐடியு அழைப்பு விடுக்கிறது.

No comments:

Post a Comment