Thursday, 11 July 2013

அந்நிய மூலதனம் தேவையா?


இன்சூரன்சில் அந்நிய மூலதனம் தேவையா?

இன்சூரன்ஸ் துறையை தனியாருக்குத் திறந்து விட்டால் அந்நிய மூலதனம் வந்து கொட்டும் என்று அன்றைய நிதி அமைச் சரும், இன்றைய பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் அன்றும் இன்றும் கூறி வருகிறார். நிதி அமைச்சர் சிதம்பரமும், அந்நிய முதலீட்டை மையமாக வைத்து, இன்சூரன்ஸ் துறையில் அதை 26 சதவீதத்திலிருந்து, 49 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மீண் டும் மீண்டும் கூறி வருகிறார். இதற்கான சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் நிலுவையில் நிற் கிறது. உடனடியாக 75 பில்லியன் டாலர் இல் லாமல், நாட்டின் இன்றைய நடப்புக் கணக் கினைத் தீர்ப்பதற்கு வேறு வழி இல்லை என்று தனது பட்ஜெட் உரையில் கூறிய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டினை அதிகரிப் பதன் மூலம் நடப்புக் கணக்கினைச் சரி செய்து விட முடியும் என்று, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முனைகிறார்.
ஆனால், இன்சூரன்ஸ் துறையைத் திறந்து விட்டு 12 ஆண்டுக் காலம் முடிந்து விட்ட போதும், 2011 மார்ச் வரை, இந்தியாவிற்குள் அந்நிய இன்சூரன்ஸ் கம்பெனிகள் கொண்டு வந்திருக்கும் மூலதனத்தின் அளவு, ஐ.ஆர். டி.ஏ-வின் 2010-11- ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கையின் படி ரூ. 6650.99 கோடி மட்டுமே. இந்தக் கணக்குகள் எல்லாம் ஒரு புறமிருக்க, ஒரு முக்கியமான கேள்வி இங்கு விடை தேடி நிற்கிறது. அடிப்படையான கேள்வி!இன்சூரன்சில் அந்நிய மூலதனம் தேவையா, இல்லையா என்ற இரண்டு கேள்விகளைத் தாண்டி, மூன்றாவது கேள்வி ஒன்றும் உண்டு. அது மிக அடிப்படையான கேள்வியும் கூட. இன்சூரன்சில் மூலதனமே தேவையா என்பதே அக்கேள்வி. இக்கேள்வி சற்று குதர்க்கமாகக் கூடத் தெரியலாம். அதற் கான பதில் உங்களை மேலும் வியப்புக்கு உள் ளாக்கக் கூடும். ஆம், இன்சூரன்சில் மூல தனம் தேவையில்லை என்பதே அந்தப் பதில். இன்சூரன்ஸ் கம்பெனியை மூலதனம் இல் லாமல் நடத்த முடியுமா? முடியும். அத்தகைய கம்பெனிகள் பல கடந்த காலத்தில் செயல்பட் டிருக்கின்றன. பரஸ்பர நல இன்சூரன்ஸ் கம் பெனிகள் (ஆரவரயட ஐளேரசயnஉந ஊடிஅயீயnநைள) குறித்து நீங்கள் இப்போதும் கூட விக்கிப்பீடியா வில் பார்க்கலாம். இந்தக் கம்பெனிகள் முழுக்க முழுக்க பாலிசிதாரர்களுக்குச் சொந்தமான வை. இதில் வரக்கூடிய லாபம், ஒன்று பாலிசி தாரர்களுக்கு டிவிடெண்ட்களாகக் கொடுக் கப்படும் அல்லது வருங்காலப் பிரீமியங்களின் அளவு குறைக்கப்படும். ஆனால், பிற இன் சூரன்ஸ் கம்பெனிகள் லாபத்தை பங்குதாரர் களுக்கு மட்டுமே பிரித்துக் கொடுக்கும். இதில் பாலிசிதாரர்களுக்குப் பயன் எதுவும் கிடைக்காது. பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் !ரூ.5 கோடி மூலதனத்தில் தொடங்கப் பட்ட நிறுவனம் எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் துறை திறந்து விடப்பட்டதை அடுத்து தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் அந்த மூல தனம் ரூ. 100 கோடியாக உயர்த்தப்பட்டிருக் கிறது. தவிர அதன் ஆயுள் நிதியம் (டுகைந குரனே) மட்டுமே ரூ. 15 லட்சம் கோடி. உரிமங்களுக் கான இருப்புத் தொகை (ளுடிடஎநnஉல சுநளநசஎந) ரு.65,000 கோடி. இது தவிர மத்திய அரசுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.1000 கோடி வரை டிவிடெண்டாக எல்.ஐ.சி அளித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தொகை கூடிக் கொண்டே வருகிறது. இது தவிர நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக குறைந்த வட்டி யில் மத்திய - மாநில அரசுகளுக்கு கொடுத்து உதவி வருகிறது.
அதாவது மக்களின் பணத் தை மக்களுக்கே பயன்படுத்தும் பணியில் முன்னணியில் நிற்கும் பொதுத்துறை நிறு வனம் எல்.ஐ.சி. அதே போன்று, ஜி.ஐ.சி மற் றும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங் களும், ரூ. 1 லட்சம் கோடி அளவில் முதலீடு களும், ரூ.30,000 கோடி ரிசர்வ் நிதியும் கொண்டிருக்கின்றன. மூலதனம் இன்சூரன்சில் தேவையா?ஆயுள் இன்சூரன்சைப் பொறுத்த அள வில், மூலதனம் ஒரு பொருட்டே அல்ல. கம் பெனியின் மூலதனத்தின் அளவிற்கும், அதன் நடவடிக்கைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. நடவடிக்கை என்பது திட்டமிடல் மற்றும் செயல்திறன் குறித்தது தான். கனரகத் தொழில்களுக்குத் தேவைப்படும் பெரிய கட்டிடங்களோ, எந்திரங்களோ அதற்குத் தேவையில்லை. ஒரு வாடகைக் கட்டிடமும், சில கம்ப்யூட்டர்களும், சில ஊழியர்களும் இருந்தால் போதும். ஒரு ஆயுள் இன்சூரன்ஸ் அலுவலகத்தைத் தொடங்கி விடலாம். கணிச மான எண்ணிக்கையில் விற்பனையில் தேர்ச்சி பெற்ற முகவர்கள் தான் தொழிற்சாலை களுக்கு முக்கியமாகத் தேவைப்படும் கச்சாப் பொருள் போன்றவர்கள். அவர்களுக்கு அளிக் கும் பயிற்சி மிக முக்கியமானது. அவர்கள் பொதுவாக வெகு நேரம் விற்பனைக் களத் திலேயே இருப்பதால் அலுவலகத்தில் அவர்களுக்கு இடத்திற்கான தேவை கூட மிகக் குறைவு. ஊழியர்கள், விற்பனை, கணக்கு வழக்குகள் தொடர்பான நிர்வாக அதிகாரிகள், இன்சூரன்ஸ் துறை வல்லுநர் (ஹஉவரயசல) ஒருவர் என ஒருங்கிணைந்த நிர் வாகத்திற்குத் தேவையான ஒரு குழு இருந் தால் போதுமானது. இதில் பெரிய அளவில் மூலதனத்திற்கான தேவை வருவதில்லை. ஒரு ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனி நடத்த, ரூ.25 கோடி மூலதனம் இருந்தாலே போதும். பங்கு மூலதனம் எல்லாம் தேவையில்லை. வீணடிக்கப்படும் மூலதனம் !2012 மார்ச் 31 கணக்கின் படி, இந்தியாவில் இன்று இயங்கி வரும் 22 தனியார் ஆயுள் இன் சூரன்ஸ் கம்பெனிகளின் மூலதனம் மற்றும் ரிசர்வ் நிதி ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.37,658. இதன் மூலம் இவை பெற்றிருக்கும் முதலாண்டு பிரீமிய வருமானம் அதில் 85.2 சதவீதம். மறுபுறத்தில் எல்.ஐ.சியின் மூல தனம் மற்றும் ரிசர்வ் நிதியின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி மட்டுமே. ஆனால் எல்.ஐ.சி ஈட் டும் முதலாண்டு பிரீமிய வருமானம் 81.862 சத வீதம். என்ன தலை சுற்றுகிறதா? ஆனால், இது தான் ஆயுள் இன்சூரன்ஸ் துறையில் இன் றைய எதார்த்தம். காரணம் எல்.ஐ.சி 1956 முதல் ஒவ்வொரு செங்கல்லாக எடுத்துக் கட் டப்பட்ட நிறுவனம். அதனால் தான் அது சாத் தியமாகிறது. அத்தகைய சாத்தியங்கள் இல் லாத புதிய தனியார் கம்பெனிகளை எல்.ஐ.சி யின் வலிமை பெரிதும் மிரட்டியிருக்கும் நிலை யில், அவர்கள் பெரும் எண்ணிக்கையில் புதிய அலுவலகங்கள், முகவர்கள், மெகா விளம்பரங்கள் என கட்டமைப்பினை உரு வாக்கினார்கள். உடனடி லாபம் பெற வேண்டும் என்பதற் காக அவர்கள் தேர்ந்தெடுத்த வடிவங்கள் மோசமானவை. பங்குச் சந்தையுடன் இணைந்த (ருnவை டுiமேநன ஐளேரசயnஉந ஞடிடiஉநைள - ருடுஐஞ) பாலிசிகளில் அவர்கள் ஆர்வம் காட்டி னார்கள். (இந்த ருடுஐஞ பாலிசிகள் உண்மையில் இன்சூரன்ஸ் பண்டங்கள் அல்ல, மாறாக, மியூச்சுவல் ஃபண்ட் சம்பந்தப்பட்டவை ) இந்தியப் பங்குச் சந்தை லாபகரமாக இயங்கிய வரை இது அவர்களுக்கு உதவியது. அடுத்த கட்டத்தில் அதுவே காலை வாரி விட்டது. 2008ல் அமெரிக்காவில் தோன்றிய நிதி நெருக்கடி இந்தியப் பங்குச் சந்தையினைப் பதம் பார்த்த நிலையில், ருடுஐஞ பாலிசிகள் லாபம் இழந்தன. இதனால் பாலிசிகள் சரண்டர் செய் யப்பட்டன. பாலிசிகள் புதுப்பிப்பது குறைந்து கொண்டே சென்றது. ருடுஐஞ பாலிசிகளையே விற்றுப் பழகியிருந்த தனியார் கம்பெனி முக வர்கள் ஆர்வமிழந்து ஒதுங்கிக் கொண்டனர். மொத்தத்தில், அதன் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், தனியார் இன் சூரன்ஸ் கம்பெனிகளின் 1500 கிளைகள் மூடப் பட்டு விட்டன. மூலதனம் என்பது ஒரு அரிதான பண்டம்.
ஆனால், தனியாரின் உடனடி லாப வெறி காரணமாக நமது நாட்டின் இன்சூரன்ஸ் துறை யில் மூலதனம் இப்படி வீணடிக்கப்படுவது குறித்து வருந்துவதற்குப் பதிலாக, அதைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, வீணடிப்பதற்கு மென் மேலும் அது தேவை என்ற கருத்தினைப் பரப் புவது எவ்வளவு வேடிக்கையானது என்பதை இந்த ஒரு எடுத்துக்காட்டின் மூலம் தெளி வாகப் புரிந்து கொள்ள முடியும். மேற்கண்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, எல்.ஐ.சியில் முதன்மை ஆக்சுவரி நிபுணராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற (சுநவசைநன ஊhநைக ஹஉவரயசல டிக டுஐஊ டிக ஐனேயை) திரு. ஆர். ராமகிருஷ்ணன், தனது இணைய தளத்தில், எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நீண்ட கட்டுரை ஒன்றி னை வெளியிட்டிருக்கிறார். யாருக்குத் தேவை ?மூலதனமே பெருமளவில் தேவைப்படாத இன்சூரன்ஸ் துறையில், அந்நிய மூலதனத்திற் கான தேவை கிஞ்சித்தும் இல்லை. இந்திய நாட்டின் உள்நாட்டுச் சேமிப்பினைக் கொள் ளையடித்து லாபம் ஈட்டும் வகையில், அந்நிய முதலாளிகளுக்கு அதற்கான தேவை உள் ளது.
பிற துறைகளில் வரத் தயங்கும் அந்நிய மூலதனம் இன்சூரன்ஸ் துறைக்கு மட்டும் வருவதற்குக் ஆர்வம் காட்டுவதற்கு இதுவே காரணம். தவறான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அந்நியச் செலாவணி என பல நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், எந்த வடிவத்திலாவது அந்நிய மூலதனம் வந்து விடாதா என்று ஏங்கும் ஐ.மு.கூட்டணி அரசிற்கு அத்தகைய தேவை உள்ளது. இவர்களின் ஏக்கமும், ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் நிர்ப்பந்தமும் இணை கின்ற மையப் புள்ளியிலிருந்து தான் இன் சூரன்ஸ் துறையில் அந்நிய மூலதனம் என்ற கருத்தோட்டம் மேலெழுந்து வருகிறது என் பதை இங்கு மறக்கலாகாது. இந்தக் கருத்தோட்டத்திற்கு எதிரான வலுவான போராட்டத்தினை, நவீன தாராள வாதக் கொள்கைகளுக்கு எதிரான போராட் டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைமையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று நடத்தி வரு கின்றனர். ஆகஸ்ட் 3-6 சென்னையில் நடை பெறவிருக்கும் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மாநாட்டிற்கு முன் னோட்டமாக தமிழகம், கேரளம், புதுவை மாநி லங்களில் நடைபெறும் பிரச்சார;ப பயணத் தில் இக்கேள்வி முதன்மைப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட உள்ளது.
கட்டுரையாளர் : மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர்.   by theekkathir

No comments:

Post a Comment