Thursday, 31 July 2014

கருத்தரங்கம்


கருத்தரங்கம்

வாழ்த்துவோம்வாழ்த்துவோம்

            தமிழ் மாநில சங்க உதவி செயலரும் , 
               நமது திருநெல்வேலி மாவட்ட சங்க வளர்ச்சியில் 
               பெரும் பங்கு 
             வகித்தவரும் ,ஒப்பந்த ஊழியர் சங்க செயல்பாட்டிற்கு
               உரிய வழிகாட்டியாக திகழ்ந்தவரும் ஆன
                                    தோழர் C பழனிச்சாமி 
               அவர்கள் இன்று (31-07-2014)பணி ஓய்வு பெறுகிறார் .
                           

             அவரது பணி ஓய்வு காலம் சிறக்க திருநெல்வேலி
                    மாவட்ட சங்கம் தன்
         தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
  

Sunday, 27 July 2014

07.08.14அனைத்து சங்கங்களின் JAC சார்பாக"கோரிக்கை நாள்"
07.08.14அனைத்து சங்கங்களின் JAC சார்பாக"கோரிக்கை நாள்"

அருமைத் தோழர்களே! நமது BSNL-லில் உள்ள  அனைத்து NON-EXECUTIVE சங்கங்களின் JAC சார்பாக எதிர்வரும் 07.08.14 "கோரிக்கை நாள்"கடைபிடித்து மதிய உணவு இடைவேளையில்  கோரிக்கை அட்டை அணிந்து "ஆர்ப்பாட்டம் "நடத்திட நமது BSNLEU பொதுச் செயலர் தோழர் பி.அபிமன்யு அறைகூவல் விடுத்துள்ளார்.

Friday, 25 July 2014

காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு

புவனேஷ்வரில் பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் மத்திய செயற்குழு கூட்டம் 18-01-2014 மற்றும் 19-01-2014 தேதிகளில் நடைபெற்றது . அக் கூட்டத்தில் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு ஒரு போராட்ட திட்டம் உருவாக்க பட்டுள்ளது. நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் பிப்ரவரி மாதம் நடைபெற்ற  ராஜ்கோட் மத்திய  செயற்குழு பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட்ஊழியர் சம்மேளனத்தின் அறைகூவலை வெற்றிகரமாக்க கேட்டு கொண்டது .அந்த அடிப்படையில் தற்போது போராட்ட  அறைகூவல்   விடப்பட்டுள்ளது .

26-08-2014 அன்று மாவட்ட தலைநகரங்களில்  தர்ணா போராட்டம்
25-09-2014 அன்று மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் நோக்கி பேரணி 
15-10-2014 அன்று CMD அலுவலகம் நோக்கி பேரணி 
பிரச்சனைகள் தீராவிட்டால் ஒரு நாள் வேலை நிறுத்தம் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
கோரிக்கைகள் :-
விடுபட்ட ஒப்பந்த/காசுவல் ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்
EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.
வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  அனைத்திந்திய மகாநாட்டை தமிழ் மாநில சங்கம் வரும் டிசம்பர் மாதம் நடத்த உள்ளது .


Wednesday, 23 July 2014

GPFGPF

           "GPF" என்ற இந்த சொல் இன்று அதிகம் பேசக்கூடிய சொல்லாகிவிட்டது . இது வருமா ! வராதா ! வந்தால் எத்தனை சதவிகிதம் .இது விசயமாக நேற்று நமது CMD அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா அவர்களுடன் மூத்த பொது மேலாளர் (BFCI) அவர்களை இன்று (23-07-2014) சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது  GPF payment தாமதம் ஆவதற்கு கார்போரேட் அலுவலகத்தில் பணமே இல்லையாம் (NIL Balance). வரும்  வெள்ளிகிழமைக்குள் நிதி சேர்ந்தால் போதிய ஒதுக்கீடு செய்யப்படுமாம் . அது சாத்தியம் இல்லை என்றால் வரும்  சம்பளத்திற்கான   நிதி ஒதுக்கீட்டுடன்  "GPF" க்கும்   சேர்ந்து நிதி ஒதுக்கீடு வரும்  என அவர் கூறியுள்ளார் . 

கேடர் பெயர் மாற்றம்
கேடர் பெயர் மாற்றம்

  கேடர் பெயர் மாற்றத்திற்கான  கமிட்டியின் கூட்டம் இன்று (23-07-2014) நடைபெற்றது . நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு ,நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி ,நமது துணை பொது செயலர் தோழர் .அனிமேஷ் மித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர் . நிர்வாகத்தின் தரப்பில் கலந்து கொண்ட  திருமதி மது அரோரா மூத்த பொது மேலாளர் (மறு சீரமைப்பு ) கூறியதாவது . டெலிகாம் மெக்கானிக் மற்றும் RM கேடருக்கான பெயர் மாற்றத்தில் ஏற்கனவே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும் அதன் படி டெலிகாம் மெக்கானிக் ஊழியர்கள் டெலிகாம் டெக்னீசியன்  என்றும் RM ஊழியர்கள் டெலிகாம் உதவியாளர் (Telecom Assistant) என்றும் அழைக்கப்  படுவர். சீனியர் TOA மற்றும் TTA  கேடருக்கான பெயர்களை 
Sr. TOA------------------ Telecom Office Associate என்றும் TTA வை ------- Telecom Engineering Associate என்றும் நிர்வாகம் முன்மொழிந்ததை நமது சங்கம் ஏற்று கொள்ளவில்லை   
Sr.TOA கேடரை டெலிகாம் அசோசியேட்  ஆபீசர் என்றும் TTA கேடரை ஜூனியர் இஞ்சினியர் என்றும் மாற்றம் செய்ய நமது BSNLEU சங்கம் வலியுறுத்தி உள்ளது .  இது விசயமாக  முடிவுகள் எட்டப்படவில்லை 

மத்திய செயலக முடிவுகள்
Read | Download

சுற்றறிக்கை எண்:158 - மத்திய செயலக முடிவுகள்

Monday, 21 July 2014

ஒரு நல்ல செய்திஒரு நல்ல செய்தி

       நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் நெடு நாள் கோரிக்கையான TSM சேவையை கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும் என்பதை கார்போரேட்  அலுவலகம் ஏற்று கொண்டு உத்தரவை வெளியிட்டு விட்டது .இவ் உத்தரவு படி சர்வீஸ் புக் மற்றும் HRMS இல் TSM சேவை பதிவு செய்யப்படும்.பணி ஓய்வு  பெறும்  போது பென்ஷன் கணக்கிடுவதில் TSM  சேவையில் 50% எடுத்து கொள்ளப்படும் .உத்தரவு படிக்க :-Click Here

BSNL-MTNL இணைப்பு தொடர்பான BSNL ஊழியர் சங்க கூட்ட முடிவுகளும், FORUM கூட்ட முடிவுகளும்.
Read | Download

BSNL-MTNL இணைப்பு தொடர்பான BSNL ஊழியர் சங்க கூட்ட முடிவுகளும், FORUM கூட்ட முடிவுகளும்.

JAC போராட்ட அறைகூவல்
Read | Download

 JAC போராட்ட அறைகூவல்

Saturday, 19 July 2014

உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு ......Read | Download

சுற்றறிக்கை எண்:156- JAC போராட்ட அறைகூவல்

Read | Download

தமிழ்நாடு BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு மாநிலக் குழு கூட்ட முடிவுகள்

MRS Committee Meeting - Joint Circular
Read | Download

17-7-14 MRS Committee Meeting - Joint Circular

Wednesday, 9 July 2014

சில மத்திய சங்க செய்திகள்
Read | Download

சுற்றறிக்கை எண்:154 -தலையில்லா பொதுத்துறை நிறுவனங்களும் ஒரு சில மத்திய சங்க செய்திகளும்

போராட்டத்திற்கு வெற்றி -11.07.14 தர்ணா ஒத்திவைப்பு....


அருமைத் தோழர்களே! நமது மாவட்ட,மாநில சங்கங்களின் 

அறைகூவலுக்கினங்க கடந்த 04.07.14 அன்று மிக சக்திவாய்ந்த 

ஆர்ப்பாட்டத்தை நாம் நடத்தினோம் அதன் பயனாக 09.07.14 அன்று 

மதியம் CGMஅவர்களிடம் நமது மாநில சங்கம் நடத்திய 

பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்த படியால் 11.07.14 

அன்று நாம் நடத்த இருந்த தர்ணாவை நமது மாநில சங்கம் 

ஒத்திவைத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில்  சிறப்பாக கலந்து கொண்ட 

 அனைவருக்கும் ,  போராட்ட திட்டத்தை கையில் எடுத்த நமது 

BSNLEU மாநில சங்கத்திற்கும், நமது நியாமான உணர்வுகளை 

 புரிந்து கொண்டு  பிரச்சனை தீர்விற்கு வழிவகுத்த மாநில 

நிர்வாகத்திற்கும் நமது பாராட்டுக்களை உரித்தாக்குகிறோம். 

வெற்றிக்கு உழைத்திட்ட அனைவருக்கும் நமது திருநெல்வேலி 

BSNLEU மாவட்ட சங்கம்  உளப் பூர்வமான  நன்றியை 

உரித்தாக்குகிறது.
                  ----என்றும் தோழமையுடன்....... ..                                                                   C.சுவாமிகுருநாதன்,
.                             ----D/S-BSNLEU.


Tuesday, 8 July 2014

நமது போராட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை.Tuesday, 08 July, 2014Read | Download

11.07.2014 அன்று நாம் நடத்த இருக்கின்ற தர்ணா போராட்டத்தை கைவிடக் கோரி மாநில நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும் நமது போராட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

மாநிலச் சங்க செய்தி ..........


மாநிலச் சங்க செய்தி ..........


11.07.2014 அன்று நாம் நடத்த இருக்கின்ற தர்ணா போராட்டத்தை கைவிடக் கோரி மாநில நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனினும் நமது போராட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

Tuesday, 08 July, 2014Read | Downlo6.7.14 - தமிழ் மாநில சங்கத்தின் செயலக கூட்ட முடிவு ...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் செயலக கூட்டம் கடந்த 06.07.14 அன்று சென்னையில் மாநில உதவித் தலைவர் தோழியர்.டி.பிரேமா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


RM/GR.D கேடரிலிருந்து TM பதவி உயர்வு தேர்வு...அருமைத்தோழர்களே! RM/GR.D கேடரிலிருந்து TM பதவி உயர்வு2013ம் ஆண்டிற்கான தேர்வு அறிவிக்கை ஏற்கனவே மாநிலநிர்வாகத்தால் வெளியிடபட்டதுஅதில் மாநிலம் முழுவதும்1413 காலி பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, நமது சங்கத்தின் தொடர் முயற்ச்சியின் பலனாக இப் பிரச்சனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதை சம்பந்தப்பட்ட தோழர்கள் பயனடைய ஸ்தல மட்டத்தில் நமது கிளைச் செயலர்களும்,மாவட்ட நிர்வாகிகளும் கவனமாக கையாண்டு TM தேர்வு எழுதும் தோழர்களுக்கு உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
TM தேர்வு குறித்த மிக்கிய தகவல்கள் 
·                     தேர்வு நடைபெறும் நாள்: 28/09/2014 
·                     காலை 10 - 12.30 - இரண்டரை மணி நேரம் 
·                     இரண்டு பிரிவுகள் கொண்ட ஒரு தேர்வுத்தாள் - SECTION -I & SECTION-II 
·                     எளிய முறைத்தேர்வு - OBJECTIVE TYPE  
·                     100 மதிப்பெண்கள்
·                     தவறான பதிலுக்கு 25 சத மதிப்பெண் கழிக்கப்படும். NEGATIVE MARKS
·                     பொதுப்பிரிவு தோழர்கள் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள்37ம் பெற வேண்டும்.
·                     SC/ST தோழர்கள் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்களும் கூட்டு மதிப்பெண்கள் 30ம்பெற வேண்டும்.
·                     கல்வித்தகுதி: 10ம் வகுப்புத்தேர்ச்சி
·                     வயது: 01/07/2013 அன்று பொதுப்பிரிவு=40  OBC=43 SC=45 ST =45
  • தகுதியுள்ளோர்: TMAN/GRD/RM/TSM தோழர்கள். வெற்றிவாழ்த்துக்களுடன் -----என்றும் தோழமையுடன் ...                   C.சுவாமிகுருநாதன்,

·                        மாவட்ட  செயலர்BSNLE U.