என்எல்சி பங்கு விற்பனையை கைவிடுக! சிபிஎம்-சிபிஐ ஆர்ப்பாட்டம்
என்எல்சி பங்கு விற்பனையை கைவிடுக! சிபிஎம்-சிபிஐ ஆர்ப்பாட்டம்
-
என்எல்சி பங்கு விற்ப னையை கைவிட வேண் டும், இயற்கை எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், இடது சாரிகளின் மாற்றுக் கொள் கையை அமல்படுத்த வேண் டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் வியாழ னன்று (ஜூலை 11) அண் ணா சாலை தாரப்பூர் டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிபிஎம் மத்தியக்குழு உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., “காங்கிரஸ், பாஜக பின்பற்றுகிற பொருளாதார கொள்கைக்கு மாற்றான கொள்கைகளை வலியு றுத்தி, மக்களிடையே பிரச் சாரம் செய்து வருகிறோம். என்எல்சியின் 5விழுக்காடு பங்குகளை விற்பனை செய் வது சட்டவிரோதமானது; அதற்கு தொழிற்சங்கங்கள் சட்டப்பூர்வமான முறை யில் வேலை நிறுத்தம் மூலம் பதிலடி தருகின்றன. தொழி லாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று மத் திய அரசு பங்கு விற்பனை யை கைவிட வேண்டும்,” என்றார். 2014ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இயற்கை எரிவாயு என்ன விலைக்கு விற்க வேண்டுமென்று இப் போதே விலையை தீர்மா னித்துள்ளார்கள். அதனை கைவிட வேண்டும் என்றார். தர்மபுரியை அதர்மபுரி யாக மாற்றி 3 கிராம தலித் மக்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளனர். திவ்யா வின் தந்தை நாகராஜ், கண வர் இளவரசன் மரணம் தொடர்பாக உரிய விசா ரணை நடத்தி தமிழக அரசு உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஜி.பழனிச்சாமி குறிப்பிடுகையில், மத்திய அரசின் கொள்கை கார்ப் பரேட் கொள்கையாக உள் ளது. முகேஷ் அம்பானியை வளப்படுத்தும் இயற்கை எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப் பதே மத்திய அரசின் கொள் கையாக உள்ளது. அதனை எதிர்த்த இடதுசாரிகளின் போராட்டம் தொடரும் என்றார்.இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் எம்எல்ஏ, இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.எஸ்.தியாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் மு.சம்பத் (வடசென்னை), எஸ்.ஏழுமலை (தென்சென் னை) உள்ளிட்டோர் பேசி னர். சிபிஎம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் எம்.சிந்தன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment