Friday 25 October 2019

மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்க திட்டத்தை........




மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்க திட்டத்தை, அனைத்து சங்க தலைவர்களுக்கும் நிர்வாகம் விளக்கம் கொடுத்தது
மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்கத் திட்டம் தொடர்பான ஒரு விளக்கத்தை 24.10.2019 அன்று BSNL நிர்வாகம் அனைத்து சங்கங்களுக்கும் வழங்கியது. BSNL CMDயுடன் அனைத்து இயக்குனர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றனர். 
BSNL CMDயும் மனித வள இயக்குனரும் விளக்கங்களை கொடுத்தனர். BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவது, விருப்ப ஓய்வு திட்டத்தை அமலாக்குவது, அரசாங்கத்தின் SOUVERIGN GUARANTEEயுடன் கூடிய 15,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் வெளியிடுவது, 20,000 கோடி ரூபாய்கள் அலவிற்கு BSNLன் நிலங்களை பணமாக்குவது, அந்த பணத்தை கடனை திருப்பிக் கட்ட பயன்படுத்துவது, MTNL நிறுவனத்தை BSNLஉடன் இணைப்பதன் மூலமாக அதனை BSNLன் துணை நிறுவனமாக மாற்றுவது உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தாக்க திட்டத்தை அவர்கள் விவரித்தனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. ஊக்கத்தொகையையும், ஓய்வூதியத்தையும் கூட்டினால் வரும் தொகை, மீதமுள்ள காலத்திர்கு பெற இருக்கும் ஊதியத்தில் 125%ஐ விஞ்சக்கூடாது. 
இந்த ஊக்கத்தொகை அரசாங்கத்தால் இரண்டு தவணையாக தரப்படும். இந்த நிதி ஆண்டான 2019-20ல் முதல் தவணையும், அடுத்த நிதி ஆண்டான 2020-21ல் இரண்டாவது தவணையும் பட்டுவாடா செய்யப்படும். உண்மையில் ஓய்வு பெறக்கூடிய தேதியில் தான், அதாவது 60 வயது நிறைவடைந்த பின் தான் GRATUITY மற்றும் PENSION COMMUTATION ஆகியவை வழங்கப்படும். 
தொலை தொடர்பு துறையில் இருந்து உத்தரவு வந்தவுடன் விருப்ப ஓய்வு திட்டம் அமலாக்கப்படுவதற்கான கால அட்டவணை வெளியிடப்படும். 



Wednesday 16 October 2019

BSNL ஊழியர்களிடையே மகத்தான ஒற்றுமை உருவாகியது-மேலும் பல





BSNL ஊழியர்களிடையே மகத்தான ஒற்றுமை உருவாகியது-மேலும் பல அமைப்புகள் AUABயில் இணந்துள்ளன
BSNLல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே ஊழியர்களிடையே பலத்த ஒற்றுமை கட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். BSNLல் ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் மட்டுமே, விரைவில் இந்த நிறுவனத்தின் பொருளாதார புத்தாக்கத்தை உறுதி செய்ய முடியும். கடந்த ஓரிரு வாரங்களாக, BSNLல் உள்ள அனைத்து முக்கியமான அமைப்புகளும் இந்த திசைவழியில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவற்றின் விளைவாக மகத்தான ஒற்றுமை உருவாகி உள்ளது. தற்போது மேலும் பல அமைப்புகள் AUABயில் இணைந்துள்ளது. இது 11.10.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் பிரதிபலித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, SEWA BSNL, BSNL MS, AIBSNLOA, TEPU, BSNLATM, BSNL OA, TOA BSNL மற்றும் BEA ஆகிய 13 அமைப்புகள் பங்கு பெற்றுள்ளன. அன்றைய கூட்டத்தில் கலந்துக் கொள்ள இயலாத இதர சங்கங்களையும், AUABக்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு அணுகுவது என்றும் அந்தக் கூட்டம் முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை தொடருவோம்.




Meeting between the AUAB and Shri Arvind Vadnerkar, Director (HR), to be held tomorrow the 17.10.2019.

The AUAB has issued notice for holding hunger strike at the Corporate Office, Circle and SSA levels on 18.10.2019. In this connection, Shri Arvind Vadnerkar, the Director (HR) has invited the AUAB for discussing the issues contained in the charter of demands. This meeting will take place at 10:00 am tomorrow the 17.10.2019. The General Secretaries of all the constituents of the AUAB will be attending this meeting.

[Date : 16 - Oct - 2019]