Tuesday 29 November 2016

சிறப்பு கருத்தரங்கம்

அண்ணாச்சியும், அம்பானியும்
அண்ணாச்சியும்,  அம்பானியும்
~~~~~~~~~
வழக்கம்போல் ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன்.இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர்,
" சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க "

" ரெண்டாயிரம் நோட்டா இருக்க அதையாவது வாங்கிக்குவீங்களா ? "

" சில்லற இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணா சேஞ்ச்க்கு ட்ரை பண்றேன். இல்லனா பொருட்கள அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க "

எனக்கு பின்னால் நின்ற பெரியவர்,
" சார் என்கிட்ட பழைய 500 ரூவா நோட்டு இருக்கு அதையாவது வாங்கிக்குவீங்களா "

" இல்ல சார் அதெல்லாம் வாங்கமாட்டம்னு என்ட்ரன்ஸ்லேயே போர்டு வச்சிருக்கோமே பாக்கலியா "

மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும். நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு. வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத சில்லறை இப்போது மட்டும் கிடைத்து விடவா போகிறது.

 வீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை.
 இருந்த போதிலும் ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்ற முடிவு செய்து அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.

இரண்டாயிரம் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

" ரெண்டாயிரத்துக்கெல்லாம் சில்றை இல்ல சார். வேண்ணா பழைய 500 ரூவா நோட்டுக்கூட குடுங்க வாங்கிக்கிறேன். "

" சரி பராவாயில்ல அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல.இந்தாங்க இந்த பொருள எடுத்துக்கங்க "

" ஏன் சார் அப்டி சொல்லுதிய ?
நீங்க மொதத்தெருல நாலாவது ப்ளாட்லதான இருக்கிய.வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஒடி வேல செய்தியளே. இந்தாங்க பிடிங்க எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க.அப்புறமா பணத்த குடுங்க.நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊரவிட்டா ஓடிப்போகப்போறிய. அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா ? நூறு எரநூறு வேணும்னா நா தரவா ? வாங்கிக்கங்க அப்புறமா குடுங்க சார் "

தயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவுடன் மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன்
Thank you for using Debit Card ending xxxx for Rs.475.04 in CHENNAI at Reliance Fresh .......

வாங்காத பொருளுக்கு என் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த அம்பானி எங்கே! !

வாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி  எங்கே! !..

அனைவரும் இனிமேல் பணமில்லாத பரிவர்த்தனைக்கு
(Cash less Transaction) மாறுங்கள் என்று அண்ணாச்சி கடைகளை ஒழித்து, அம்பானி கடைகளை அதிகரிக்கத் துடிக்கும் அம்பானியின் அல்லக்கை மோடிக்குத் தெரியுமா??

அம்பானி கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்.

ஆனால்  அண்ணாச்சி கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி,  வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு  இருக்கும் என்பது.

26-11-16,மக்கள் தலைவர் காஸ்ட்ரோ-மறைந்தார்...

26-11-16,மக்கள் தலைவர் காஸ்ட்ரோ-மறைந்தார்...ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்குதலைமை தாங்கி நடத்தியும்விடுதலைப் பெற்றநாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்புவேலைகளிலிருந்து காத்தும் 33 ஆண்டு காலமாகஈடுஇணையில்லாத தொண்டாற்றியபெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ.சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகாரஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல்காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன்சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமானஇடத்தை பெற்றுள்ளனர்காஸ்ட்ரோவின்ஆட்சியை கவிழ்க்கவும்அவரைப் படுகொலைசெய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாதுமுயற்சி செய்ததுஉலக வல்லரசானஅமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல்காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார்இதன்விளைவாக நடுநிலை நாடுகளின் நாயகராகப்போற்றப்பட்டார்கியூபாவின் அதிபராகஆனபின்னும் எளிமையான மக்கள்தொண்டராகத்தான் அவர் திகழ்ந்தார்இவருடையவழிகாட்டலில் இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்கள்விழிப்புணர்வைப் பெற்றனர்அதன் விளைவாகஇந்நாடுகளில் இருந்த பிற்போக்கு ஆட்சிகளுக்குஎதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிஜனநாயக அரசுகளை அமைத்துக்கொண்டனர்.கியூபா நாட்டின் அதிபர் பதவியில் சுமார் 50 ஆண்டு காலம் இருந்த பிறகு தாமாகவே முன்வந்து பதவியைத்துறந்ததின் மூலம் அவருடைய புகழ் மேலும் பலமடங்கு உயர்ந்துள்ளதுதென்ஆப்பிரிக்க நாட்டின்விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய நெல்சன் மண்டேலா அந்த நாட்டின் முதல்குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்ஆனாலும் மறுமுறை அந்தப் பதவியை வகிக்க விரும்பவில்லை.தாமாகவே முன்வந்து பதவியைத் துறந்த அவரை இன்னமும் தென்னாப்பிரிக்க மக்கள் தங்களின்பாசத்திற்குரிய தேசத் தந்தையாகப் போற்றுகிறார்கள்பிடல் காஸ்ட்ரோவின் இந்தப் பதவி துறப்பு உலகநாடுகளில் உள்ள பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும் என நம்புகிறோம்.எத்தனை வயதானாலும் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடமறுக்கும் இன்றைய தலைவர்கள்பலருக்கு நடுவில் பிடல் காஸ்ட்ரோ இமயம் போல் உயர்ந்து நிற்கிறார். அன்புத் தலைவனுக்கு செவ்வணக்கம் 


Monday 21 November 2016

வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

Read | Download

வெற்றி! வெற்றி!! வெற்றி!!! ஒன்று பட்ட போராட்டம், ஒன்றே நமது துயரோட்டும் என்ற போராட்ட வரிகளை நிதர்சனமாக்கியுள்ள இந்த போராட்டம் தமிழக தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் இயக்கத்தின் ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது

Saturday 19 November 2016chennai18

முற்றுகை போராட்ட காட்சிகள்


முற்றுகை போராட்ட காட்சிகள்

நேற்று தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்ட காட்சிகள்
அநீதி களைய ஆர்ப்பரித்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள்..


தமிழ்நாடு BSNL. தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 11 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநீக்கம்செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கக் கோரியும் ஊழியர்களின் பெருந்திரள்ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று (நவ. 18) நடைபெற்றது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள்.உயர்நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப 2009ம் ஆண்டு மே மாதம் முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப் படவேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குதல், BSNL. கார்ப்பரேட் அலுவலகஉத்தரவுப்படி ESI,EPF விதிகளை கறாராக அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக் கைகளும் முன்வைக்கப்பட்டன.
BSNL. ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் இணைந்து சென்னையில்தலைமை பொது மேலாளர் அலுவலக வாயிலில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின .மாநிலத் தலைவர்S.செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்தியதுணைச் செயலாளர் பழனிச்சாமி, மாநில தலைவர் M.முருகையா, மாநிலச் செயலாளர் C.வினோத்குமார், ஊழியர்சங்க மாநிலச் செயலாளர் A.பாபு ராதாகிருஷ்ணன்,.    ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப்பேசினர்.போராட்டத்தில் மாநிலம் முழுவதிலும்  ஊழியர் சங்க நிர்வாகிகள், ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். நமது  திருநெல்வேலி மாவட்டத்தி சார்பாக 40 க்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறையில் மாநிலம் முழுவதும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இங்கு பழைய நிறுவனத்திடம்ஒப்பந்தம் முடிந்தவுடன் புதிய நிறுவனத்திற்கு ஒப் பந்தம் மாறும்.ஆனால் பழைய ஒப்பந்தத் தொழிலாளர்கள்புதிய ஒப்பந்த நிறுவனத்திடம் தொடர்ந்து வேலை செய்து வருவார்கள். இதுதான் பல்லாண்டு காலமாககடைப்பிடிக்கப்படும் நடைமுறை.இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் ஒப்பந்த நிறுவனத்தின்ஒப்பந்தம் முடிந்தது. அக்டோபர் 1ம் தேதி முதல் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருந்தது.தொலைத் தொடர்புத் துறை நிர்வாகம், ஊழியர் சங்கத்திடம் அந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில்இருப்பார்கள் என உறுதி அளித்தது.
ஆனால் புதிய ஒப்பந்த நிறுவனம் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா,ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் உள் ளிட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து விட்டது  எனவே, அநீதி களைய 18-11-16 காலை முதல் நடைபெற்ற போராட்டத்திற்கு பின் மாநில நிர்வாகம் நமது தலைவர்களை அழைத்து பேசியது. அதன் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 11 பேருக்கும் மீண்டும் பணி வழங்க மாநில நிர்வாகம் ஏற்றுக்கொண்டுதான் அடிப்படையில் மாலையில் போராட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது.