காயமடைந்திருப்பதாகவும் செய்தி கள் வந்த வண்ணம் உள்ளன.
மீண்டும் எழும் எகிப்துஎகிப்தில் ராணுவம் மீண்டும் பயங்கரத்தை அரங்கேற்றத் துவங்கியிருக்கிறது.கண்மூடித் திறப்பதற்குள் ஆட்சி அதிகாரத் தைக் கைப்பற்றிவிட்ட ராணுவம், அதற்கு எதி ராகப் போராடும் மக்கள் மீது கண்மூடித்தன மாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 54 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாகவும் 450க் கும் மேற்பட்டோர் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துக் தங்களது வாழ்வை வளமாக்குவார்கள் என்று நம்பி வாக்களித்த மக்களை கடந்த ஓராண்டு காலமாக ஏமாற்றிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி முகமது முர்சி. மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றாதது மட்டுமின்றி, எந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 2011ம் ஆண்டில் மிகப்பிரம்மாண்டமான எழுச்சி யை நடத்தி எகிப்து மக்கள் வரலாறு படைத் தார்களோ அதே ஏகாதிபத்தியத்திற்கு ஆதர வான கொள்கைகளை அமல்படுத்தினார் முர்சி.
முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவ ரான இவர், மதச்சார்பற்ற எகிப்து தேசத்தை மத வெறிப் பாதையிலும் அழைத்துச் செல்ல முயன் றார். இதற்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழுந்தது எகிப்து தேசம். சுதந்திரச் சதுக்கம் என்று அழைக்கப்படும் கெய்ரோ மாநகரின் தஹ்ரீர் சதுக்கம் மட்டுமின்றி நாடு முழுவதும் லட் சோப லட்சம் மக்கள் முர்சி அரசுக்கு எதிராக வீதியில் திரண்டனர். முர்சிக்கு எதிராக எழுந்த இந்த மாபெரும் எழுச்சியை, ஆயுத பலம் கொண்ட ராணுவம் தனக்குச் சாதகமாக பயன் படுத்திக்கொண்டது. 2011ல் மக்களின் மாபெரும் போராட்டத்தால் எகிப்தின் எதேச்சதிகாரி ஹோஸ்னி முபாரக் ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கியெறியப்பட் டாலும், ராணுவத்தின் முக்கியப் பொறுப்புகளில் அவருக்கு ஆதரவானவர்களும், அமெரிக்கா வுக்கு ஆதரவானவர்களுமே இருக்கிறார்கள். இவர்கள் முர்சியை கைதியாக்கிவிட்டு, அதிகா ரத்தை கைப்பற்றிவிட்டார்கள். முர்சிக்கு எதிராக வீதிகளில் திரண்ட மக் கள் வெள்ளம், இப்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக திரண்டிருக்கிறது. இடைவிடாமல் தொடர்கிறது எகிப்திய இளைஞர்களின் போராட் டம். எங்களது ஆட்சியை வீழ்த்திவிட்டாயே என்ற ஆத்திரத்துடன் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக் கிறார்கள்.
ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்துக் கிடக்கிறது.போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிக் குண்டு களை ஏவியிருக்கிறது ராணுவ ஆட்சி. மேலும் மேலும் வீறு கொண்டு எழும் மக்கள் போராட் டத்தை முற்றிலும் ஒடுக்க அதி பயங்கரத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடும் அபாயமும் நிலவுகிறது. இதனிடையே, தங்களது நல்வாழ்வுக்கான போராட்டமாக மட்டுமல்ல, எகிப்தில் உண்மை யான ஜனநாயகம் மலரவேண்டும் என்ற முழக் கத்துடன் களத்தில் இறங்கியுள்ள மக்களை பிரித்தாள்வதற்கு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்புகளும் களமிறங்கியுள்ளன. ராணுவத்தின் கைகளில் சிக்கிவிட்ட அதி காரத்தை ராணுவத்தின் கைகளிலேயே தக்க வைத்துக்கொள்ள தேவையான ‘தலையீடு களை’ செய்யத் துவங்கிவிட்டது அமெரிக்க ஏகாதிபத்தியம். மீண்டும் எழுந்துள்ள எகிப்து, ஜனநாயகத் தை மீட்க இந்த உலகமே ஆதரவு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment