Friday 29 November 2013

லோகம் மௌனமாயிருக்குமா?லோகம் மௌனமாயிருக்குமா?

மின்னஞ்சல்அச்சிடுக

தண்டத்தை விட்டு விட்டு
தலைக்காவிரிக்குப் போனவரை
சிபிஐ தேடிப்பிடிக்க
லோ குரு
பின்பு லோக குருவானார்.
வேலைக்குப் போகும்
பொம்மனாட்டிக
மோசமானவா என
முணங்கிய
சங்கர மடத்து சன்னியாசியின்
'துறவு' நிலை குறித்து
பதறப் பதற எழுதினார்
எழுத்தாளர் அனுராதா ரமணன்.
உடல் அவயங்கள்
எங்கெங்கு இருக்குதோ
அங்கங்கு இருப்பது போல
தலித்துகள்
எங்கிருக்கிறார்களோ
அங்கேயே இருக்கணும் என்ற
சங்கராச்சாரி
கொலை வழக்கில் இருந்து விடுதலை.
சங்கர மடத்தின்
ஆசார  அனுஷ்டானங்கள்
காற்றில் பறக்கிறதென்று
கடிதம் எழுதியவரின்  உயிர்
காற்றில் கரைந்தது.
சோமசேகர கனபாடிகள்
கடிதங்களுக்கு
பதில் எழுதுவதற்குப் பதில்
அவருக்கு
இரங்கற்பா எழுதப்பட்டது.
வரதராஜப் பெருமாள்
கோயிலில் பூஜைக்குப் பதில்
அன்று பலி நடந்தது;
வரதராஜரா வந்து
சாட்சி சொல்லமுடியும்?
தாதா அப்பு
மாட்டு பாஸ்கர்
குருவி ரவி
தில் பாண்டியன்
சில்வர் ஸ்டாலின்
லோக குருக்களின்
லோக்கல் குழுக்கள் இவை.
கேடிகளையும்
கோடிகளையும்
நீதிமன்றங்கள்
கழட்டி விட
கவரிமான்கள் என
காஞ்சி மடத்து கன்றுக்குட்டிகள்
சில துள்ளிக் குதிக்கின்றன.
எட்டு ஆண்டுகள்
ஏறாத படிக்கட்டுக்கள் ஏறி
மாநிலம் விட்டு
மாநிலம் போய்
வாங்கிய தீர்ப்பன்று
மௌனவிரதம்.
சந்தர்ப்ப சாட்சியங்கள்
ராமபக்தனுக்கு
அருளவில்லை.
அவர் மகன் கேட்கிறான்
“என் தந்தை தானே
வெட்டிக் கொண்டு இறந்தாரா?"
லோககுரு மௌன விரதமிருக்கலாம்
லோகம் மௌனமாயிருக்குமா?
- ப.கவிதா குமார்

K.G.போஸ் நினைவுச்சிலை

Wednesday 27 November 2013

மோடிக்குமட்டும்மா

கோரிக்கையை வலியுறுத்தி நிர்வாகத்திற்கு கடிதம் .........


திருநெல்வேலி மாவட்த்தில் உள்ள வாடிக்கையாளர்கள் 

சேவை மையங்களில் {  CSR/CSC  } செல் போன் 

விண்ணப்பப்படிவங்களில் உள்ள SL.NO.30.31.& 34 காலங்கலில் 

Gr-c ஊழியர்கள் கையெலுத்திட வெண்டும்  என்று 

வற்புறுத்தலை. தளர்த்திடஉம்.SL.NO.34 ல் அதிகாரிகள் (CSC  

incharges)  கையெலுத்திட வெண்டும் என்றும்.

அதணல் VTM  பிரச்சனைகள் உருவாகாமல்

இருக்கும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நிர்வாகத்திற்கு 

கடிதம் கொடுக்கப்பட்டது         
                                                                                               இராஜகோபால்
    27/11/2013                                                                               மாவட்டச்செயலாலர்
                                                                                        திருநெல்வேலி


BSNL EMPLOYEES UNION
TIRUNELVELI DISTRICT

No.BSNLEU/2013-14/3                                                   dt. 28/11/2013

The General Manager ,
BSNL,
Tirunelveli-627 003
                   
Sir,
            Sub:  Verification of CAF application – reg.,

            Of late,   the administration has started troubling  the Customer Care Centre  Group C officials in the name of VTM  Cell.    In this connection, We wish to point out that in the Sl Nos. 30, 31 and 34 are signed by the Group C staff   working in respective CSCs /CSRs.  Even though all the CSC/CSR are controlled   by the  SDEs/JTOs, nobody is prepared to take the responsibility  for any discrepancy in the CAFs.

            On oral enquiry with the nearby SSAs like  Tuticorin and Nagercoil,  it is understood that the Sl.No 34 in the CAF is being signed by the respective incharges of the CSCs/CSRs.

            Had the application been verified and signed by the controlling officers, subsequent complaint from the VTM Cell could have been avoided.

            Hence,  it is hereby kindly requested to give an instruction   that the Sl.No.34 in the CAF is to be signed by the respective controlling officers only.
                                                                                                                        Yours Sincerely,
           

                                                                                                                                                                                                                                                                              R.RAJAGOPAL
                                                                                                                                                                                                                                                                      Distric  sechetary (Act)
                                                                                                                                                                                                                                                                                   Tirunelveli
ஊதிய தேக்கத்தை உடைக்க புது வழி......

அன்று குழந்தைத் தொழிலாளி... இன்று பள்ளி தலைமை ஆசிரியை!          அண்மையில் சென்னையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ஏ.ராஜேஸ்வரி. இவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அவரது தற்போதைய முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அவரைப் பாராட்டி கெளரவித்தது.
          ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஒன்றியம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுகிறார் ராஜேஸ்வரி. சாதாரண தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஏன் இந்த கௌரவம், பாராட்டு? என கேட்போருக்கு இவரது கடந்த காலம் குறித்து தெரிந்தால், முன்னுதாரணமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ராஜேஸ்வரி என்பது புரியும்.
          விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்தான் இவரது சொந்த ஊர். ராஜேஸ்வரியின் இளமைப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அதைப் பற்றி சொல்கிறார். ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்புக்குச் சென்றேன். அந்த நேரத்தில் வீட்டில் ரொம்ப வறுமை. அதனால் படிப்பைத் தொடர முடியவில்லை. குடும்பத்தாருடன் சேர்ந்து தீப்பெட்டிகளுக்கு லேபிள் ஒட்டும் வேலையை நானும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்புறம் படிப்பே மறந்துபோய்விட்டது. தீப்பெட்டி ஆலையில் முழுநேர தொழிலாளியாகிவிட்டேன்.அந்த நேரத்தில் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், எனது பெற்றோரை அணுகினர். படிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினர். அதனால் மனம் மாறிய எனது பெற்றோர், குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிக்கு என்னை அனுப்பி வைத்தனர். 1989 முதல் 1991-ம் ஆண்டு வரை சிறப்புப் பள்ளியில் பயின்றேன்.
          அதன்பிறகு வழக்கமானப் பள்ளியில் என்னை 6-ம் வகுப்பு சேர்த்தனர். ஏற்கெனவே என்னோடு 5-ம் வகுப்பு படித்தவர்கள், அப்போது 10-ம் வகுப்புக்குச் சென்றுவிட்டார்கள். அந்த வயதில் 6-ம் வகுப்பு என்பது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. விடுமுறை நாள்களில் எனது வகுப்புத் தோழர்கள் எல்லாம் தங்கள் பாட்டி வீடு, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் நான் மட்டும் தீப்பெட்டி ஆலைக்குச் செல்வேன். எனது படிப்புச் செலவுகளை ஈடுகட்ட வேலைக்கு செல்வது கட்டாயமாக இருந்தது.
          இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி படித்ததால் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர முடிந்தது. அதன் பின் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். பதவி உயர்வு பெற்று தற்போது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்".
          நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் ராஜேஸ்வரி. வாழ்க்கை, லட்சியம் என்று ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டால், “பள்ளியில் இடையில் நிற்கும் குழந்தைகளுக்கெல்லாம் எனது வாழ்க்கை அனுபவங்களையே முன்னுதாரணமாகக் கூறி கல்வியின் அவசியத்தை உணர்த்த வேண்டும். இதற்காக சிவகாசி செல்லும்போதெல்லாம் குழந்தைத் தொழிலாளர்களுக்காக நடைபெறும் பள்ளிகளுக்குச் சென்று எனது அனுபவங்கள் பற்றி மாணவர்களுடன் பேசி வருகிறேன்என்றார் ராஜேஸ்வரி.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்ட மாநில ஆலோசகர் யோ.ஜெயப்பிரகாஷ் கூறுகையில், “இந்தியாவிலேயே முதல்முறையாக சிவகாசியில்தான் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் 1987-ம் ஆண்டு சிறப்புப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பள்ளிகள் அளித்த பலனை இப்போது ராஜேஸ்வரி போன்றவர்கள் மூலம் பார்க்கிறோம்என்றார்.
நன்றி :- தி ஹிந்து 


Monday 25 November 2013

TTA தேர்வு,
புதிய டெலிகாம் டெக்னிசியன்
 நியமன விசயமாக
நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட
 வரைவு திட்டத்தில் நமது
 அனைதிந்திய சங்கம்
 கீழ கண்ட மாற்றங்கள்
 செய்ய பரிந்துரைகளை
அளித்துள்ளது .
1. டெலிகாம் ஸ்டோர் இல்
பணி புரியும் ஊழியர்களும்
 தேர்வில் பங்கேற்க
அனுமதிக்க வேண்டும் .


2. 10+2 தகுதி உடைய 3
ஆண்டுகள் சேவை
முடித்த அனைத்து
non  executive
கேடர்களும் அனுமதிக்கப் 
 படவேண்டும்
3. 9020-17430 scale இல்
உள்ள non executive
கேடரில்  10+2 தகுதி
பெறாத ஊழியர்களுக்கு ஒரு
தகுதி தேர்வு நடத்தி
அதில் தேர்வு பெற்றவர்களும்
 இந்த போட்டி தேர்வில்
பங்கேற்க அனுமதிக்கப்படவேண்டும்.
நமது மத்திய சங்கம்
நிர்வாகத்திற்கு அளித்துள்ள
 கடிதம் படிக்க :Click Here


Saturday 23 November 2013

ஏஐடியுசி மூத்த தலைவர் தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன் காலமானார்Top of Form
ஏஐடியுசி மூத்த தலைவர் தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன் காலமானார்


சென்னை, நவ. 23-
தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஏஐடியுசியின் அகில இந்திய துணைத் தலைவரும், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப் பினருமான தோழர்எஸ்.எஸ்.தியாகராஜன் சனிக் கிழமை காலமானார்.
அவ ருக்கு வயது 74.சென்னையில் லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தோழர் தியாகராஜன் காலமானார். சமீப காலமாக அவர் உடல்நலம் குன்றி யிருந்தார். ஏஐடியுசியின் மாநிலபொதுச் செயலாளராக வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்த தோழர் தியாகராஜன், முதுமை காரணமாக அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட் டிருந்தார்..
இன்று இறுதி நிகழ்ச்சிதோழர் தியாகராஜன் உடல், அஞ்சலிக்காக சென்னை சிந்தாதிரிப் பேட்டை யில் உள்ள ஏஐடியுசிமாநில தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாலை 4 மணியளவில் கண்ணம்மா பேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப் படுகிறது.
சிபிஎம் இரங்கல் : தோழர் எஸ்.எஸ். தியாகராஜன் மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் களில் ஒருவரும், ஏஐடியுசி யின் மூத்த தலைவருமான தோழர் எஸ்.எஸ்.தியாக ராஜன் மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும், இதயப்பூர்வமான அஞ்சலியையும் தெரிவித்துக்கொள் கிறது. அவரது குடும்பத்தின ருக்கும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் ஏஐ டியுசி தோழர்களுக்கும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தனது ஆறுதலைத் தெரி வித்துக்கொள்கிறது.
தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்காக பல் வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்திய தோழர் தியாகராஜனின் மறைவு ஏஐடியுசி மற்றும் சிபிஐக்கு மட்டுமின்றி, தமிழக தொழிலாளர் வர்க் கத்திற்கும் இடதுசாரி இயக்கத்திற்கும் பேரிழப்பு ஆகும்.இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

சிஐடியு இரங்கல் : தோழர் எஸ்.எஸ்.தியாக ராஜன் மறைவுக்கு இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். தோழர் தியாகராஜன் மறைவு தமிழகத் தொழிற்சங்க இயக்கத்திற்கு பேரிழப்பு என்று அவர்கள் குறிப்பிட் டுள்ளனர்.

மத்திய சங்க செய்திகள்மத்திய சங்க செய்திகள்- சுற்றறிக்கை எண்: 92-CHQ News.
Read | Download
சேவைத்தரம் முன்னேற CMDக்கு கடிதம்
Read | Download

Wednesday 20 November 2013

செய்தி .துளிகள்

செய்தி .துளிகள்

மத்திய  அரசு இனி BSNL மற்றும் MTNL தொடர்புகளையேபயன்படுத்த வேண்டும்--மத்திய அரசு முடிவு
    செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொலைதொடர்பு துறைசெய்தி தொடர்பாளர் இனி மத்திய அரசு அலுவலகங்களில் BSNLமற்றும்  MTNL லேண்டலைன் பிராட்பேண்டுகளை பயன்படுத்தவேண்டுமென அரசு  முடிவு செய்துள்ளதுபொதுத்துறைநிறுவனங்களான BSNL மற்றும்  MTNL நிறுவனங்களை  சரிவிலிருந்துமீட்கவே இந்த முடிவு என்றார்இதற்கான அமைச்சரவை முடிவு கூடியசீக்கிரம் வெளியிடப்படும்இதுவரை மத்திய அரசு நிறுவனங்கள் மற்றதனியார் AIRTEL & VODAFONE  இணைப்புகளை பயன்படுத்திக்கொண்டிருந்தால் அவை உடனடியாக சரண்டர் செய்யப்பட வேண்டும்என வலியுறுத்தப்பட்டுள்ளது.  இதே போல மாநில அரசும்செயல்படுத்தும் என எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி கூறினார் . BSNLமற்றும் MTNL-ஐ மேம்படுத்த அமைச்சர்கள் குழுஅமைக்கப்பட்டிருப்பதை  அனைவரும் அறிவோம்அதன் தலைவராகமத்திய அரசின் நிதி அமைச்சர் .சிதம்பரம் இருக்கிறார்அவரின்கவனத்திற்கும் இந்த முடிவு கொண்டு செல்லப்படும்.


7 வது அனைத்திந்திய மாநாடு

       நமது BSNL ஊழியர் சங்கத்தின்  7 வது அனைத்திந்திய மாநாடு வரும் நவம்பர் 2014-லில் கொல்கத்தா நகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக நமது மத்திய சங்கம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம்,கொல்கத்தா டெலிபோன்ஸ்,டெலிகாம் பாக்டரி மற்றும் டெலிகாம் ஸ்டோர் ஆகிய மாநிலங்கள் இணைந்து அனைத்திந்திய மாநாட்டை நடத்தும் .

TTA ஆளெடுப்பு விதிகள் மாற்றம்

கார்போரட் நிர்வாகம் TTA ஆளெடுப்பு விதிகளுக்கான வரைவை வெளியிட்டு உள்ளது . வரைவை  பார்க்க :-Click Here