Tuesday 27 September 2016

TNTCWU ஆர்ப்பாட்டம்.
TNTCWU ஆர்ப்பாட்டம்.

27 09 2016 அன்று திருநெல்வேலியில் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  மாவட்டதலைவர் தோழர்k.செல்வராஜ்  .BSNLEUவின் மாவட்டதலைவர்தோழர் S. .இராஜகோபால் தலைமைதாங்கினார்கள் . கோரிக்கைகளை விழக்கி BSNLEUவின் மாவட்டபோருளாளர் தோழர் p.இராஜகோபால்.மற்றும் தோழர்கள்RS சுப்ரமணியம்.நாகராஜன்.சிதாலட்சுமி பேசினார்கள்.ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  மாவட்டசெயலளர்தோழர் S.முருகன் நண்றி கூற னார்
நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கோரிக்கைகள் :-
*விடுபட்ட காசுவல் ஊழியர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரப் படுத்து. !
*சம வேலைக்கு சம சம்பளம் உறுதிப்படுத்து !
*உடனடியாக குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 18 000 வழங்கிடு !
*ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாதே !
*வேலை நீக்கம் செய்யப்பட்டதொழிலாளர்களுக்கு மறுபடியும் வேலை கொடு !
*பகுதி நேர ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்றிடு.!
அனைவருக்கும் கிராஜுட்டி, போனஸ் உறுதி செய்திடு !
*HRA, CCA, TA , போன்ற அலவன்சுகளை வழங்கிடு !
*EPF, ESI, Pension போன்ற சட்டபூர்வ விதிகளை உறுதி செய்திடு ! .
*விடுப்பு, வாராந்திர ஓய்வு, விடுமுறை .ஆகியவற்றை அமுல்படுத்து !

Monday 26 September 2016

USO நிதி 1250 கோடி - மத்திய அமைச்சரவை முடிவு..


USO நிதி 1250 கோடி - மத்திய அமைச்சரவை முடிவு...


                    அருமைத் தோழர்களே ! 01.04.2002 க்கு முன்பு நாம் வழங்கிய கிராமப்புற சேவைக்கானஇழப்பீடு தொகை ரூ.1250 கோடி (USO நிதிவழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதுநீண்ட நாட்களாகநிதி வழங்க கால தாமதம்செய்த மத்திய அரசு, FORUM அமைப்பின் தொடர் போராட்டங்களின் விளைவாகஇன்றுஇந்தமுடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2013-14ம்ஆண்டே,இந்ததொகைநமக்குவழங்கப்பட்டிருக்கவேண்டும்இனி,   USO நிதியிலிருந்துநிதி வழங்க இயலாது எனவும் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

Election of New Office Bearers

BSNL EMPLOYEES UNION
(Regd.No.4896)
District Union  Branch, Tirunelveli.
                                                                                                              Date: 22-09-2016.

To
                      The General Manager,
                      BSNL,
                      Tirunelveli-627003.
Sir,
                    Sub: Election of  New Office Bearers - Reg.

                   Our Union District Conference was held on 22-09-2016 at Valliyoor, under the presidentship of Sri.C.Swamigurunathan,OS.The following members have been elected as office bearers unanimously for the year 2016-2018.

Dist.President :Sri.S.Rajagopal,JE,Chettikulam.
Dist.Vice President :1. Sri.S.KMariappan,AOS(T),Puliangudi.
:2.Sri.A.Nagarajan,AOS(T),GMO,TVL-3.
:3.Sri.K.Selvaraj,TT,Palayamkottai.
                                    :4.Sri.S.Ramasubbu,TT,Tenkasi.

Dist.Secretary :Sri.N.Soosai Maria Antony,TT,Surandai.
Asst.Dist.Secretary :1.Sri.E.Daniel Muthuraj,AOS(T),GMO,TVL-3.
:2.Sri.A.Pitchumani,JE,Valliyoor.
:3.Sri.S.Sankaranarayanan,TT,Palayamkottai.
:4.Sri.S.John Jeril,JE,Sankarnagar.

Dist.Treasurer :Sri.P.Rajagopal,JE,Tirunelveli.
Asst.Dist.Treasurer :Sri.T.S.Balasubramanian,TT,Ambasamudram.

Organizing Secretary:
                                    :1.Smt.J.Mariasundaram,OS(P),GMO, TVL-3.
                                    :2.Sri.S.Chelladurai,TT,Nanguneri.
                                    :3.Sri.P.Soosai,TT,Palayamkottai.
           :4.Sri.M.Murugesan,TT,Pavoorchatram.
:5.Sri.S.Kuthalingam,TT,Sankarankoil.
:6.Sri.S.G.Subramanian,TT,Ambasamudram.
:7.Sri.V.Sekar,TT,Valliyoor.


                  Necessary Trade Union facility may kindly be granted.

Thanking you,Sir

               
                                                                                                         Yours sincerely,
                                                                                 (N.SOOSAI MARIA ANTONY)
                                                                                                 Outgoing Dist. Secretary,
                                                                                              BSNL EMPLOYEES UNION,
                                                                                                   TIRUENLVELI .
          Copy to.

1.Genl.Secty,BSNLEU,CHQ,New Delhi.
2.Circle Secty,BSNLEU,Chennai.

Monday 19 September 2016

PLI ரூ 3000 - போராட்டம் தொடரும்


PLI ரூ 3000 - போராட்டம் தொடரும்

PLI குழுவிற்கான ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யூ, NFTE யின் பொதுச் செயலர் தோழர் சண்டேஸ்வர்சிங் ஆகியோர் CMD திரு அனுபம் ஸ்ரீவத்சவ் அவர்களைச் சந்தித்து PLI தொடர்பாக கலந்தாலோசித்தார்கள்.

CMD அவர்கள் 2014-15ஆம் ஆண்டிற்கான PLI ஆக ரூ. 3000 தர ஒப்புக் கொண்டுள்ளதையும், அதற்கான கோப்பு மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது நமது தொடர்ந்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி…
என்றபோதிலும்…
கோரிக்கைகள் 24ல் ஒன்றின் ஒரு பகுதிக்காக போராட்டம் நிறுத்தப்படமாட்டாது.

மூன்றாம் கட்டப் போராட்டமான
உண்ணாவிரதம்
நாளை (20-09-2016)

திட்டமிட்டபடி நடைபெறும்.

செப்டம்பர் 19 தியாகிகள் தினம் . . .

நினைவில் நிற்கும் செப்டம்பர் 19 தியாகிகள் தினம் . . .

அருமைத்தோழர்களே !

தபால் தந்திரயில்வேபாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் இணைந்து 1968,செப்டம்பர்  19 அன்று நடத்திய  
ஒரு நாள்வேலை நிறுத்தம்தான் தியாகிகள்தினமாகக் கொண்டாடப்படுகிறது.வரலாற்றுச் சிறப்புமிக்க
இவ்வேலைநிறுத்தத்தின் கோரிக்கைகள்
      *தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம் அளித்திட வேண்டும்.
      * கிராக்கிப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும்.
      *DA FORMULA மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இதைஅறிவித்து வேலைநிறுத்தம் துவங்குவதற்கு முன்னமேயே, தலைவர்களைக் கைது 
செய்யும்நடவடிக்கையை மத்திய அரசு துவக்கிவிட்டதுடெல்லியில் உள்ள அனைத்து
 P&T நிர்வாகபகுதிகளில்  18 ம் தேதிகாலை 11 மணிக்கே வேலை நிறுத்தம் துவங்கி விட்டது.
டெல்லியில்மட்டும் 1650 P & T ஊழியர்களும் 350 மற்ற பிரிவு ஊழியர்களும் கைது ஆனார்கள்.
 P &Tதோழர்கள்  4000 பேர் உள்ளிட்ட 10000 பேர் கைது செய்யப்பட்டனர்.  
வேலை நிறுத்தத்தில் 280000 பேர் கலந்து கொண்டனர் . 140000 ஊழியர்கள்.கைதாகினர்.  8700 
பேர்சஸ்பென்ட்செய்யப்பட்டனர்.இதில்P&Tதோழர்கள்3756பேர்.44000தற்காலிகஊழியர்களை
Termination செய்ய நோட்டிஸ்கொடுக்கப்பட்டதுஇப்படி பட்ட அடக்குமுறை எந்த ஒரு 
ஜனநாயகநாட்டிலும்  இது போன்ற கடுமையானபழிவாங்கல் நடவடிக்கை ஒரு நாள் 
வேலை நிறுத்தத்தில்நடைபெற்றதில்லை
பிகானிர்பதான்கோட்பொங்கைகான் ஆகியவிடங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு
 9 ரயில்வே தொழிலாளிகள்பலியானார்கள்பல இடங்களில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும்
வீசப்பட்டன.கூட்டு நடவடிக்கைக் குழு அரசிடம் பழிவாங்கலைக்கைவிடக்கோரியும் 
அசையாததால் விதிப்படி வேலை போராட்டத்தைதுவங்கியது.
இந்த எழுச்சிமிக்க போராட்டம் தொழிற்சங்கங்களை எல்லாம் ஒன்று படுத்தஉதவியதுதொழிலாளர்
சக்தியை அரசும் உணரத் துவங்கியது.எதிர்காலப்போராட்டங்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய
 செப் 19 போராட்டதியாகிகளுக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம்  வீர வணக்கத்தை
உரித்தாக்குகிறது.
செப் 19-போராட்ட தினமும் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் 48வது ஆண்டான 
இந்த செப்டம்பர்-19  காலகட்டத்தில் BSNL அழிக்க மத்திய BJP அரசும் கார்ப்பரேட் கம்பனிகளும் கைகோர்த்துள்ளன. என்வே FORUM மற்றும் JAC அமைப்புகள் பல போராட்ட அறைகூவல்களை விடுத்துள்ளன.செப்டம்பர்-19 தியாகிகளால் நம் இயக்கம் வளர்ந்துள்ளது 
எனபதை நினைவில்
கொண்டு நாமும் BSNL பாதுகாக்க போராட்ட பதாகையை உயர்த்திப் பிடிபோம்.
 ஒன்றுபடுவோம் ! போராடுவோம் !! வெற்றி பெறுவோம்!!!

Thursday 1 September 2016

செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.


மக்கள் விரோத தாராளமய கொள்கைகளை எதிர்த்து நடைபெறும் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
விலை வாசியை கட்டுப்படுத்து, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காதே/தனியார் மயமாக்காதே, குறைந்த பட்ச கூலியாக ரூ.18,000/- நிர்ணயம் செய்துவிடு என்பது உள்ளிட்ட இந்திய நாட்டு மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் தேசம் தழுவிய தேச பக்த போராட்டமான செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் பெரு வாரியாக பங்கேற்று வெற்றிகரமாக்குவோம்.

செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் வெல்லட்டும்