Showing posts with label CMD உடன் சந்திப்பு. Show all posts
Showing posts with label CMD உடன் சந்திப்பு. Show all posts

Monday, 22 July 2013

CMD உடன் சந்திப்பு

CMD உடன் சந்திப்பு


நமது BSNL நிறுவனத்தில் உள்ள அணைத்து சங்கங்களின் மையக் குழு இன்று (22-07-2013) CMD அவர்களை சந்தித்து கீழ் கண்ட பிரச்சனைகளை விவாதித்து உள்ளது .
1. டவர் பராமரிப்பு பகுதியில் டீசல் மற்றும் மின்சார பிரச்சனையால் அடிக்கடி பழுது ஏற்படுவதால் நமது சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது .
2. தேவையற்ற பொருட்களை ஏலம் விட தாமதம் செய்வதால் ஒவ்வொரு  மாவட்டத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது .
3. காலியாக உள்ள நமது அலுவலகங்கள் , குடியிருப்புகள ,பயிற்சி மையங்கள் ஆகியவற்றை வாடகை மற்றும் ஒத்தி அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களுக்கு விடுவது .
4. டெலிகாம் தொழிற்சாலைகளை நவீனப்படுத்தி புதிய பொறியாளர்களை தேர்ந்து  எடுத்து புதிய கருவிகளை உற்பத்தி செய்யவேண்டும் .1000 க்கும் மேற்பட்ட டவர்கள் உற்பத்தி செய்யப்பட்டு  தொழிற்சாலைகளில்  கையிருப்பாக இருக்கும் போது பல SSA ல் தனியாரிடம் இருந்து டவர்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் .
5. மார்க்கெட்டிங் பகுதியில்  மேலும் கூடுதலாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வலிமைப்படுத்த வேண்டும் ..
6. போதுமான உபகரணங்களை (கேபிள், டெலிபோன் ) உடனடியாக வாங்க வேண்டும் .
7. வொர்க் கமிட்டி ஐ குறிபிட்ட தேதிகளில் நடத்தி அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க வேண்டும் .நமது CMD மேற்கூறிய பிரச்சனைகளை கவனிப்பதாக கூறியுள்ளார்.