Wednesday, 10 July 2013

என்எல்சி நிறுவனத்தை தனியாருக்கு விற்க முயற்சிப்பதா? அனைத்துத் தொழிற்சங்கங்கள் கண்டனம் - ஆர்ப்பாட்டம்


என்எல்சி நிறுவனத்தை தனியாருக்கு விற்க முயற்சிப்பதா?
அனைத்துத் தொழிற்சங்கங்கள் கண்டனம் - ஆர்ப்பாட்டம்

திருச்சி/ஜெயங்கொண்டம்/தஞ்சாவூர்/நாகப்பட்டினம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 10 -நெய்வேலி நிலக்கரிக் கழக நிறுவனத்தின் பங்கு களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, சிஐடியு உள் ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.
திருச்சிராப்பள்ளி
இதனொரு பகுதியாக உறையூர் குறத்தெருவில் செவ்வாயன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஐஎன்டியுசி நிர்வாகி கல்யாணராமன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்டத்தலைவர் சம்பத், எல்பிஎப் பொதுச்செயலா ளர் மாயழகு, டிஎன்எஸ் டிசி பொதுச்செயலாளர் பாரதிதாசன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மணி, மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ், பிஎம் எஸ் மாநிலச் செயலாளர் முரளிதரன், மாவட்டத் தலைவர் நம்பியார், எச்எம் எஸ் நிர்வாகி இளங்கோ வன் ஆகியோர் போராட் டத்தை விளக்கிப் பேசினர்.சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.சி. பாண்டியன், மாவட்டப் பொருளாளர் ரங்கராஜன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் நடராஜன், மின்வாரிய கோட்டச் செயலாளர் பன் னீர்செல்வம், ‘பெல்’ சிஐ டியு தலைவர் சம்பத், சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராமர், சிஐடியு அலுவலக செயலாளர் வி.கே. ராஜேந் திரன், டிசிடிசி சங்க துணைச் செயலாளர் அசோகன், எல்பிஎப் துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், அலு வலக செயலாளர் பன்னீர், நல்வரதன், கோட்டச் செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளைச்செயலாளர்கள் முத்துக்கருப்பன், குமார்,ஏஐ டியுசி தொழிற்சங்க கட்டு மான சங்க செயலாளர் துரைராஜ், அரசுப் போக்கு வரத்து கழக செயலாளர் அன்பழகன், அதிகாரிகள் சங்க அமைப்பு செயலாளர் காமராஜ், புதுகை அரசு போக்குவரத்து வேங்கூர் மணி, ரயில்வே லோக நாதன், பிஎம்எஸ், எச்எம் எஸ் சங்கங்களை சேர்ந்த கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொண் டனர்.
கும்பகோணம்
என்எல்சி தொழிலா ளர்க்கு ஆதரவு தெரிவித் தும், தடையிலிருந்து மெல் லும் புகையிலைக்கு விலக்கு அளிக்கக் கோரியும் தஞ்சா வூர் மாவட்டம் கும்ப கோணத்தில், அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.மைதீன் புகையிலைத் தொழிலாளர் சங்க தலைவர் இஸ்மாயில் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் மனோகரன், மாவட்டச் செயலாளர் ஜெயபால், மாவட்டத் துணைத்தலைவர் வே.நட ராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் கண்ணன், சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட் டத் துணைத்தலைவர் பார்த்தசாரதி, சங்கப் பொரு ளாளர் ஜெயபால், செயலா ளர் வைரமுத்து, துணைத் தலைவர் கார்த்திக், இணைச் செயலாளர் அசோக் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.
ஜயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கைநெசவுத் தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.என். துரைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே.மகாராஜன் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தார். கைநெசவுத் தொழிலாளர் சங்க மாவட் டப் பொருளாளர் சேப் பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.மெய்யப் பன், வீரப்பன், சிஐடியு கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐஎன் டியுசி மாவட்டத் தலைவர் ஆர்.ராமச்சந்திரன் தலை மை வகித்தார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே. ராமன், தொமுச மாவட்டப் பொருளாளர் எம்.செல்வ குமார், ஐஎன்டியுசி மாவட் டப் பொதுச் செயலாளர் சி.அசோகன், ஏஐடியுசி சார் பில் தனிக்கொடி, சிஐடியு மாவட்டத் துணைச் செய லாளர் பி.நாகராஜன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.என்.ஆர்.சிவகுமார் சிறப்புரையாற்றினார்.பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த வி.ராமலிங் கம், பி.சுப்பையன், ஏ.டி. அன்பழகன், எஸ்.வி.செல்வ குமார், சீனிமணி, கே.ஜீவா னந்தம், கே.அய்யப்பன், வி. ராமலிங்கம், எஸ்.ஆர். ராஜேந்திரன், ஏ.சிவனருட் செல்வன், எல்.பி.வசந்தி, டி. ருத்ரா, எம்.முனுசாமி, டி. முனியாண்டி, பி.பாலசுப்பிர மணியன், ஏ.சொக்கலிங்கம், எம்.தாஸ், பி.கஸ்பார், வி.வி. ராஜா உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண் டனர். மகேந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment