Sunday 3 September 2023

விடுபட்ட கேடர்களின் பெயர் மாற்றம்

விடுபட்ட கேடர்களின் பெயர் மாற்றம்
விடுபட்ட கேடர்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே கோரி வந்துக் கொண்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என நிர்வாகத்திற்கு தொடர்ச்சியான கடிதங்களையும் எழுதி வந்துக் கொண்டுள்ளது.

29.08.2023 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, RESTRUCTURING பிரிவையும் கூடுதலாக கவனிக்கும் திருமிகு அனிதா ஜோஹ்ரி, PGM(SR) அவர்களை சந்தித்து, விடுபட்ட கேடர்களின் பெயர் மாற்றும் பணியினை உடனடியாக துவக்கி, விரைவில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

BSNL WWCC METTING

2 நாட்கள் நடைபெறும் BSNL WWCCயின் விரிவடைந்த கூட்டம், புது டெல்லியில், 02.09.2023 அன்று துவங்கியது.
2 நாட்கள் நடைபெற உள்ள BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், 02.03.2023 அன்று காலை 11.00 மணிக்கு துவங்கியது. புதுடெல்லி K.G.போஸ் பவனில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, மத்திய சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் ரமா தேவி தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அகில இந்திய அமைப்பாளர் தோழர் K.N.ஜோதி லட்சுமி, வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்திய, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, ஊதிய மாற்றம், BSNLன் 4G / 5G துவக்குவதில் உள்ள கால தாமதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் நிலை பற்றி உரையாற்றினார். BSNL நிறுவனம், நஷ்டமையும் நிறுவனமாக மாறுவதற்கு காரணமான, BSNLஐ பாரபட்சமாக நடத்தும், அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாகவும் அவர் விரிவாக பேசினார்.

உணவு இடைவேளைக்கு பின், பங்கேற்ற தோழர்கள், தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

Wednesday 15 March 2023

சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள், இன்னமும் ஏன் வெளியிடப்படவில்லை?

 சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள், இன்னமும் ஏன் வெளியிடப்படவில்லை?

18.12.2022 அன்று நடைபெற்ற சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை, நீதிமன்றம் ஏற்கனவே விலக்கிக் கொண்டுள்ளது. ஆனாலும், நிர்வாகம் இன்னமும் முடிவுகளை வெளியிடவில்லை. முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படாததால், தேர்வு எழுதியவர்கள், கோபத்தில் உள்ளனர்.

தேர்வு முடிவுகளை வெளியிட வைப்பதற்கு, BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, 14.03.2023 அன்றும், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, திருமிகு சமிதா லுத்ரா GM (Rectt. & Trng.) அவர்களை சந்தித்து விவாதித்தார்.

நீதிமன்ற உத்தரவை அமலாக்குவதற்கு, பல தொகுக்கும் பணிகள் உள்ளதாக, GM (Rectt. & Trng.) பதிலளித்தார். மாற்று திறனாளிகளுக்கு, மொத்தமுள்ள 445 பதவிகளில், 4 சதவிகிதத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 4 சதவிகிதம் கணக்கிட்டால், அது 18 பதவிகள் என வருகிறது. இந்த 18 பதவிகளை, மாநிலங்களுக்கு எவ்வாறு பிரிப்பது என்பதுதான் தற்போதுள்ள கேள்வி?

உதாரணமாக, 4 ச்தவிகித பதவிகளை மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கினால், அங்கு OC பிரிவில் உள்ளவர் வெளியேற்றப்படுவார். அவர், இரண்டாவது விருப்பமாக தமிழ்நாட்டினை தெரிவித்திருந்து, அவருக்கு தமிழ்நாடு மாநிலம் ஒதுக்கப்பட்டால், தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும்.

மாற்று திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு செய்வதில், புதிய சட்ட பிரச்சனைகள் எதுவும் வந்து விடக் கூடாது என்பதற்காக, கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள RECRUITMENT மற்றும் ESTABLISHMENT பிரிவுகள், பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, GM (Rectt. & Trng.) தெரிவித்தார். இந்த பிரச்சனைக்கு, மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, விரைவில் தீர்வு காண்பதற்கு கார்ப்பரேட் அலுவலகம் பணியாற்றி வருவதாகவும், GM (Rectt. & Trng.) கூறினார்.

சிறப்பு JTO தேர்வு எழுதியுள்ள தோழர்கள், அமைதி காக்கவும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண BSNL ஊழியர் சங்கம் கடுமையான முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு JTO இலாகா தேர்வு

 சிறப்பு JTO இலாகா தேர்வு முடிவுகள், இன்னமும் ஏன் வெளியிடப்படவில்லை ?

 தோழர் P. அபிமன்யு 

 பொதுச் செயலாளர்

BSNLEU AIBDPA TN BSNLEU TCWU ஒருங்கிணைப்பு குழு

 BSNLEU AIBDPA TN  BSNLEU TCWU ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக 
ஏப்ரல் 5 டெல்லியில் நடைபெறும் விவசாய தொழிலாளி பேரணி பற்றிய கருத்தரங்கம்  நெல்லையில் G.M. அலுவலக மாநாட்டு அரங்கில் எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் 
AIBDPA  மாவட்ட செயலர் தோழர் S.முத்துசாமி அவர்கள் தலைமையில் தொடங்கியது.

 கலந்து கொண்ட தோழர்கள் அனைவரையும் BSNLEU நெல்லை மாவட்ட செயலர் தோழர்
N. சூசை மரிய அந்தோணி  அவர்கள்  உற்சாகமாக வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்கள். 

தொடக்க உரையை BSNLEU மாநில உதவி செயலர்  தோழியர்  S.அழகுநாச்சியார் அவர்களும், விளக்க உரையை AIBDPA அகில இந்திய உதவிப் பொருளாளர் தோழியர் V. சீதாலட்சுமி அவர்களும் பேரணியின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 

BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் P.ராஜகோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கருத்தரங்கிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக BSNLEU மாநில உதவி தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் கலந்து கொண்டு நெல்லை மாவட்டம் சங்கம் மற்றும் மாவட்ட செயலரின் செயல்பாடுகள் குறித்தும் பேரணியின் அவசியம் குறித்தும் எழுச்சியுரை ஆற்றினார்கள். 

சிறப்புரையாக AGS BSNL CCWF, TNTCWU மாநில தலைவர் தோழர்
 C.பழனிச்சாமி அவர்கள் பல்வேறு கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள் அதிக எண்ணிக்கையில் தோழர்களை திரட்டிய ஒருங்கிணைப்பு குழுவிற்கும், சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய நெல்லை மாவட்ட செயலருக்கும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட பெண் தோழியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். 

தோழர்கள்  அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

கலந்து கொண்ட பெண் தோழியர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 

TNTCWU மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்  S.முருகன் அவர்கள் நன்றி உரையுடன் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு சர்க்கரை பொங்கலுடன்  வழங்கப்பட்டு கருத்தரங்கம் இனிதே நிறைவு பெற்றது. 

அதன் பின் நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் மாவட்ட மட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, WWCC மாவட்ட கன்வீனர் தோழியர் S.சுகந்தி பானு அவர்கள் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது. 

கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்.
BSNLEU - 49
AIBDPA - 34
TNTCWU -15. 
மொத்தம்  98 தோழர்கள்.

கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்.🙏

நி.சூசை மரிய அந்தோணி, 
மாவட்ட செயலர்,
BSNLEU, நெல்லை.