என்எல்சி பேச்சுவார்த்தை தோல்வி இன்று முதல் தொழிலாளர் உண்ணாவிரதம்
பங்கு விற்பனையை எதிர்த்து என்எல்சி தொழிலா ளர்கள் நடத்தி வரும் போராட் டம் தீவிரமடைந்து வருகிறது. காவல்துறையின் தடையை மீறி சனிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட் டத்தை தொடங்க உள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத்துறை நிறுவன மான நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தின் (என்எல்சி) 5 விழுக் காடு பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்ததைத் அனைத்து தொழிற்சங்கங்களும் கடுமை யாக எதிர்த்தன. மத்திய அரசின் முடிவைக் கண்டித்து கடந்த 3 ம் தேதி இரவு முதல் அனைத்து தொழிற் சங்கத்தினரும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.என்எல்சி பங்குகளை தமி ழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்க வேண் டும் என மத்திய அரசுக்கு முதல் வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். பங்குகளை தமிழக அரசு வாங்க செபி அமைப்பு ஒப்புதல் அளித்தது. இதை யடுத்து தில்லியில் மத்திய நிதித்துறை அதிகாரிகளுடன் கடந்த 2 நாட்களாக தமிழக அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 10-வது நாளாக வேலைநிறுத் தம் தொடர்ந்து நடைபெற்றது. மத்திய அரசை நிர்பந்தம் செய்யும் வகையில் போராட் டத்தை தீவிரப்படுத்த தொழிற் சங்க கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். போராட்டத் தின் அடுத்தக்கட்ட நடவடிக் கை குறித்து முடிவு எடுக்க அனைத்து தொழிற்சங்க தலை மை நிர்வாகிகளும் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட் டம் நடைபெற்றது. பின்னர் வெளியே வந்த நிர் வாகிகள், பேச்சுவார்த்தை விவரங்களை அங்கு திரண்டி ருந்த தொழிலாளர்களுக்கு விளக்கினர். சிஐடியு பொதுச்செயலா ளர் ஏ.வேல்முருகன், பாட் டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் திலகர், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் உதய குமார் உள்ளிட்ட பலர் பேசி னர். கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளரும், தொமுச பொதுச் செயலாளருமான ராசவன்னியன் பேசியதாவது:-இதுவரை நமது போராட் டங்கள் அகிம்சை வழியி லேயே நடந்து வருகிறது. எந்த நிலையிலும் வன்முறையை அனுமதிக்கவில்லை. அடுத்த கட்ட போராட்டங்களும் காந் திய வழி அறப்போராட் டமாக இருக்கும். உற்பத்தி குறையாமல் உள் ளதால் மத்திய அரசு நம்மை கண்டுக் கொள்ளவில்லை.
எனவே, அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வோம். 13-ம் தேதி சனிக்கிழமை முதல் மத்திய அரசின் கவனத்தை மட்டும் அல்லாமல் அகில இந் தியாவின் கவனத்தையே ஈர்க் கும் வகையில் தொழிற் சங்க தலைமை நிர்வாகிகள் ஸ்கியூ பாலம் அருகே சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்த உள்ளோம்.பொதுத்துறை நிறுவன மான என்எல்சியை பாதுகாக்க நம்மை நாம் களப்பலியாக்க தயங்க மாட்டோம். காவல் துறை அனுமதி மறுத்துவிட் டது. ஆனாலும் இந்த தடை களையும் மீறி தலைமை நிர் வாகிகள் உண்ணாவிரதத்தை மேற்கொள்வோம்.இவ்வாறு தெரிவித்தார். இந்நிலையில் வெள்ளி யன்று மாலை காவல்துறை யினர், உண்ணாவிரதப் பந்த லை அராஜகமான முறையில் சிதைத்தனர். இதையடுத்து நெய்வேலியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
இதற்கிடையே, போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னையில் வெள்ளிக் கிழமை மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சென்னையில் உள்ள என்எல்சி இல்லத்தில் மதியம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் என்எல்சி நிர்வாகம், உதவி தொழிலாளர் நல அலுவலர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பிலும் ஒரு தலைமை நிர்வாகி கலந்து கொண்டனர்.இதில், வேலைநிறுத்தத்தை விலக்கிகொள்ள வேண்டும் என்று என்எல்சி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு எட்டப்படும் வரை எங்கள் போராட்டம் தொட ரும் என்று தொழிற் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்டமாக, வரும் 16 ந்தேதி புதுச்சேரியில் உள்ள அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment