Thursday 27 February 2014

ஆர்ப்பாட்டம்            புவனேஷ்வரில் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மத்தியசெயற்குழுவின் முடிவின் படியும் , நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் ராஜ்கோட் மத்திய செயற்குழுவின் அறைகூவலின்படியும்   கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 

*விடுபட்ட ஒப்பந்த/காசுவல்ஊழியர்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
*அரசாங்கத்தின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கிட வேண்டும்.
*சமுதாய பாதுகாப்பு அம்சங்கள் ஆன EPF/ESI/போனஸ்/கிராஜூவிட்டி ஆகியவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
*பி எஸ் என் எல் நிர்வாகமே அடையாள அட்டை வழங்கிட வேண்டும்.
*சமவேலைக்கு சமஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். 

*EPF கணக்கை நிர்வாகமே தொடங்க வேண்டும்.

*வீட்டு வாடகை படி மற்றும் நிர்வாக குடியிருப்புகளை ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
*பழி வாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.
*பி எஸ் என் எல் காசுவல் மற்றும் காண்ட்ராக்ட் ஊழியர் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் தரப்பட வேண்டும்.
       இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ தலைமையில் நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முருகன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார் .மாவட்ட செயலர் தோழர்C.சுவாமிகுருநாதன் மற்றும் மாநில அமைப்பு செயலர்  தோழர் D.கோபாலன் அவர்கள் போராட்டத்தை வாழ்த்தி பேசினர்  .தோழர் P.இராஜகோபால் நன்றி கூறினார்.

Tuesday 25 February 2014

மாவட்ட செயற்குழு கூட்டம்

    BSNL ஊழியர் சங்கம்
     திருநெல்வேலி மாவட்டம்
     மாவட்ட செயற்குழு கூட்டம்
 தலைமை:தோழர் N.சூசை மரிய அந்தோணி மாவட்ட தலைவர்
நாள்: 01.03.2014.சனிகிழமை காலை 10.மணி
இடம்:வைகை ஓட்டுநர்பயிற்சி மையம்(opp.Hed.post office)
97 பெருமாள் கோவில் தெரு. தென்காசி.
வரவேற்புரை:தோழர்.K.கணேசன் மாவட்டஅமைபப்பு
 செயலர்
வாழ்துரை: தோழர்.து.கோபாலன்.மாநில                          அமைபப்பு செயலர்       
சிறப்புரை;தோழர்.C.பழனிச்சாமி மாநில உதவிச்
செயலர்.
பொருள்;;;
1.சொசைட்டி தேர்தல்
2. மத்திய சங்க செயற்குழுவின் முடிவுகள்
3. சங்க அமைப்பு தினம்
௪.இன்ன பிற தலைவர் அனுமதியுடன்

நன்றியுரை: தோழர்.sஇராமசுப்பு கிளைச் செயலர்.
தென்காசி. E.C மேம்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்
                      C.சுவாமிகுருநாதன் 
                                        மாவட்ட செயலர்        
                                        BSNLEU திருநெல்வேலி


 our .  Email ID bsnleutvl@gmail.com


7 வது அனைத்திந்திய மகாநாட்டிற்கு வரவேற்பு குழு7 வது அனைத்திந்திய மகாநாட்டிற்கு வரவேற்பு குழு

          22 ஆம் தேதி கொல்கத்தா CTO வில் தோழர் சைபால் சென்குப்தா ,உதவி பொது செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 7 வது அனைத்திந்திய மகாநாட்டிற்கு வரவேற்பு குழு உருவாகப்பட்டு விட்டது . இக் கூட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட தோழர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர் .அதில் கலந்து கொண்டு பேசிய நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் வர உள்ள அனைத்திந்திய மகாநாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார் .தோழர் சிசிர் பட்டாச்சார்ஜி .அவர்கள் வரவேற்பு குழு தலைவராகவும் ,தோழர் அதிர் குமார் சென் அவர்கள் செயல் தலைவராகவும்,அனிமேஷ் மித்ரா மற்றும் சைபால் சென்குப்தா அவர்கள் இணை பொது செயலராகவும் ,தோழர் ஓம் பிரகாஷ் சிங் பொருளாளர் ஆகவும் செயல்படுவர் .மேலும் செய்திகளுக்கு :Click Here

Saturday 22 February 2014

வெண்மணி நினைவாலய திறப்பு விழாவெண்மணி நினைவாலய திறப்பு விழா

25 ஆயிரம் பேரைத் திரட்ட விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவுதஞ்சாவூர்:வெண்மணி நினைவாலயத் திறப்பு விழாவிற்கு, 25 ஆயிரம் பேரைத் திரட்டுவது என விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 16ம் தேதி தஞ்சையில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. ஜி.மணி, எஸ்.திருநாவுக்கரசு, வி.அமிர்தலிங்கம், கே.பக்கிரிசாமி உட்பட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:
மனிதர்களாக வாழ வேண்டும், உரிமை வேண்டுமென செங்கொடியின் கீழ் அணிதிரண்டு போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது நிலப்பிரபுக்கள் கொடூரமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டனர். குண்டர்களின் தாக்குதல், பொய்வழக்குகள், சிறை தண்டணையை விவசாயக்கூலிகள் சந்தித்தனர். போராடிய முன்னணித் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போதும் போராட்ட அலையை அடக்க முடியாததால், 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கீழ்வெண்மணி கிராமத்தில் ஒரு சிறு குடிசைக்குள் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 44 பேரை தீயிட்டு கொளுத்தினார்கள். ரத்த வெறிபிடித்த நிலப்பிரபுக்களும் அவர்களின் அடியாட்களும்!உரிமைக்காக, செங்கொடியைக் காப்பதற்காகப் போராடி பலியான 44 தோழர்களின் நினைவாக பிரம்மாண்டமான நினைவாலயம் வெண்மணி கிராமத்தில் சி.ஐ.டி.யு வின் முன் முயற்சியால் எழுப்பப்பட்டுள்ளது. மார்ச் 9ல் வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழா நாகை மாவட்டம் வெண்மணியில் நடைபெறுகின்றது. சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் தோழர்.பிரகாஷ்காரத் திறந்து வைக்கிறார். சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ தலைமையேற்கிறார்.25000 விவசாயத் தொழிலாளர்களை திரட்டி கீழ்வேளூரில் இருந்து ஊர்வலமாக கொடிகளுடன் சென்று அஞ்சலி செலுத்தி திறப்பு விழாவில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வெண்மணியில் உயிரோடு எரிக்கப்பட்ட 44 தியாகிகளை நினைவு கூரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் 44 புதிய கிராம கிளை அமைப்புகளை நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்வது, மாவட்டங்கள்தோறும் விழாவினை விளம்பரப்படுத்துவது, கிராமம் கிராமமாக சென்று நோட்டீஸ் வினியோகம் செய்து விவசாயத் தொழிலாளர்களை திரட்டுவது, என மாநில நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது. இம்முடிவினை சிறப்போடு நிறைவேற்றிட வேண்டுமென மாவட்டக்குழு இடைக்குழு கிளை நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறோம்.

சொசைட்டி லோன்-ECS Payment சம்பந்தமாகசொசைட்டி லோன்-ECS Payment சம்பந்தமாக
Read | Download

Friday 21 February 2014

திருமண வரவேற்புமணமக்கள் எல்லா நலனும் பெற்று ,பல்லாண்டு,பல்லாண்டு வாழ்க,என நமது BSNLEU  திருநெல்வேலி மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது....


--என்றும் தோழமையுடன் C.சுவாமிகுருநாதன்.D.S-BSNLEU 
Tuesday 18 February 2014

மத்திய பட்ஜெட்மத்திய பட்ஜெட்மத்திய இடைக்கால பட்ஜெட் மற்றும் மத்திய நிதியமைச்சர் .சிதம்பரம்
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

வருமானவரி விகிதத்தில் மாற்றம் இல்லை.
ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.
ரூ.10 கோடி வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு 3 சதவீத கூடுதல் வரி.
* 2013-14 நிதியாண்டில் உணவுப் பயிர் உற்பத்தி 263 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2013-14-ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 4.6 சதவீதம்இதுஅடுத்த ஆண்டில் 4.1 சதவீதம்வருவாய் பற்றாக்குறை 2013-14-ல் 3சதவீதம்.
* 2012-13-ல் 88 பில்லியன் டாலர்களாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தற்போது 45 பில்லியன் டாலர்களாக உள்ளது.
சிறிய கார்கள்மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு உற்பத்தி வரி 12-ல் இருந்து 8 சதவீதமாக குறைப்பு.
எஸ்.யு.விவாகனங்களுக்கு உற்பத்தி வரி 30-ல் இருந்து 24 சதவீதமாக குறைப்பு.
பெரிய மற்றும் நடுத்தர கார்களுக்கு உற்பத்தி வரி 27-ல் இருந்து 24 சதவீதமாகவும், 24-ல் இருந்து 20 சதவீதமாகவும் குறைப்பு.
மொபைல் போன்களுக்கான உற்பத்தி வரி 6 சதவீதமாக குறைப்பு.
மூலதனப் பொருள்கள் மீதான உற்பத்தி வரி 12-ல் இருந்து 10 சதவீதமாக குறைப்பு.
மார்ச் 31, 2009-க்கு முந்தைய மாணவர்களின் கல்விக் கடன்களுக்கான வட்டி செலுத்துவதில் சலுகைஇதன்மூலம் 9 லட்சம்பேர் பயனடைவர்அதாவது, 9 லட்சம் மாணவர்களின் கல்விக் கடன் வட்டியை அரசே செலுத்தும்.
அன்னியச் செலாவணியில் 2013-14-ல் கூடுதலாக 15 பில்லியன் டாலர்கள். | 67 இந்தியர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குவிவரங்கள் சேகரிப்பு.
நடப்பு நிதியாண்டில் ரூ.40,000 கோடியில் இருந்து ரூ.16,027 கோடியாக முதலீடு விலக்கல் இலக்கு (Disinvestment target) குறைப்பு.அடுத்த ஆண்டில் ரூ.36,925 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு.
நிர்பயா நிதிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
ஜனவரி இறுதி வரை 296 முதலீடுகளுக்கு ரூ.6.6. லட்சம் அனுமதி.
* 2013-14-ன் 3-வது மற்றும் 4-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 சதவீதம். | அரசுக் கடன் ரூ.4.57 லட்சம் கோடி.
* 2014-15 நிதியாண்டில் திட்ட செலவு ரூ.5.55 லட்சம் கோடிதிட்டமிடப்படாத செலவு ரூ.12.08 லட்சம் கோடி.
அடுத்த நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.11,200 கோடி வழங்க ஒப்புதல்.
பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து ரூ.88,188 கோடி பங்கினைப் பெறுகிறது அரசு. | அரசு பங்குகளை பொதுமக்களுக்குவிற்பதன் மூலம் 2013-14-ம் ஆண்டில் 40,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.16,027 கோடி மட்டுமேதிரட்டப்பட்டது. 2014-15-ம் ஆண்டில் ரூ.36,925 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2013- 14-ல் பொதுத் துறை நிறுவனங்களால் ரூ.2.57 லட்சம் கோடி அளவில் முதலீட்டுச் செலவு.
கல்பாக்கம் அணு உலையில் விரைவில் 500 மேகாவாட் மின் உற்பத்திநாட்டில் புதிதாக 7 அணு உலைகள் அமைக்கப்பட்டுவருகிறது.
* 2014-15-ல் தேசிய சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் 4 மிகப் பெரிய மின் திட்டங்கள்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதியாக ரூ.1,200 கோடி.
இதுவரை 57 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதுஆதார் திட்டம் நிறைவேற அரசு உறுதிதற்போதைக்குமானிய சிலிண்டர் பெற ஆதார் கட்டாயம் என்ற திட்டம் நிறுத்தி வைப்பு.
உணவுஉரம் மற்றும் எரிவாயு மானியத்துக்கு ரூ.2,46,397 கோடி.  மாநில அரசுகளுக்கான மத்திய அரசின் நிதி உதவி ரூ.3.38லட்சம் கோடியாக அதிகரிப்பு.
பாதுகாப்புத் துறைக்கு 10 சதவீதம் உயர்த்திரூ.2.24 லட்சம் கோடியாக ஒதுக்கீடு. | ஆயுத போலீஸ் படையை வலுப்படுத்தரூ.11,009 கோடி ஒதுக்கீடு.
ராணுவத்தினருக்கு 2014—15 ஒரே பிரிவு - ஒரே ஓய்வூதியம் (ஒன் ரேங்க் - ஒன் பென்ஷன்அறிமுகம்இதற்கு ரூ.500 கோடிகணக்கிடப்பட்டுள்ளது.
* 2014 நிதியாண்டின் ஏற்றுமதி இலக்கு 326 பில்லியன் அமெரிக்க டாலர்கள்இது, 6.3 சதவீத உயர்வு.
சிறுபான்மையினருக்கான வங்கிக் கணக்கு எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் 14,15,000-ல் இருந்து 43,53,000 ஆக உயர்வு.
கடன் மேலாண்மை அலுவலகம் அமைக்க அரசு பரிந்துரைஇதுஅடுத்த நிதியாண்டில் இருந்து இயங்கும்.
சேவை வரி விதிக்கும் வேளாண் பொருட்கள் பட்டியலில் இருந்து அரிசிக்கு விலக்குஅதாவதுஅரசி மீதான சேவை வரி ரத்து.
ரத்த சேமிப்பு வங்கிகளுக்கு சேவை வரியில் இருந்து முழு விலக்கு.
தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நேரடி மானியத் திட்டத்தில் உள்ள குறைபாடு நீக்கப்பட்டு மீண்டும் நடைமுறைக்குவரும்.
சமூக நீதி அமைச்சகத்துக்கு ரூ.6730 கோடி ஒதுக்கீடு.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு.
நாட்டில் 14 கோடி மக்கள் வறுமை கோட்டில் இருந்து நிலை மேம்படுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு ரூ.33,725 கோடி.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு ரூ.67,398 கோடி.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு ரூ.6730 கோடி.
குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகத்துக்கு ரூ.15,260 கோடி ஒதுக்கீடு.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.21,000 கோடி ஒதுக்கீடு.
வீட்டு வசதித் துறை அமைச்சகத்துக்கு ரூ.6000 கோடி.
ரயில்வே துறைக்கான ஒதுக்கீடுரூ.29,000 கோடியாக உயர்வு.
உணவு மானியத்துக்கு ரூ.1,16,000 கோடி ஒதுக்கீடு.
மானியங்களுக்கு ரூ.2,46,397 கோடி ஒதுக்கீடு.
தேசிய திறன் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு கூடுதலாக ரூ.1000 கோடி.
தேசிய வேளாண் - வனக் கொள்கைக்கு அரசு ஒப்புதல்.
தற்போது நாட்டில் 3.9 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகள் உள்ளன.
கல்விக்கு ரூ.79,541 கோடியை அரசு செலவிட்டுள்ளது.
* 236 மில்லியன் டன் உணவுப் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 554 மில்லியன் டன் நிலக்கிரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 67 சதவீத மக்கள் பயனடைகின்றனர்.
உலகின் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போதுஇந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.