அவ்விரு தேசங்களுக்கு நேசப்பூர்வ வாழ்த்துக்கள்!
நமது நாட்காட்டியில் நகர்ந்து சென்ற ஜூலை 26, 27 தேதிகள் வழக்கமான நாட்களைப் போல் அல்லாமல்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை. இவ்வுலகையே அதிரச் செய்த குறிப் பிடத்தக்க நிகழ்வுகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில் கியூபாவிலும், வட கொரியாவிலும் அந்த வரலாறு நடந்தேறியது. சோசலிச கியூபாவின் புரட்சிக்கு வித்திட்ட `மன்காடா ராணுவ அரண் மீதான தாக்குதல்’ துவங்கிய நாள் 1953 ஜூலை 26. சோசலிச வடகொரியா மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொடூரமான யுத்தம் முறியடிக்கப்பட்ட நாள் 1953 ஜூலை 27.60ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்னும் ஏகாதிபத்தியம் தனது ஆக்டோபஸ் கரங்களால் இவ்விரு நாடுகளையும் அழித் தொழித்துவிட துடித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி யாக செயல்பட்டுக் கொண்டு, கியூப மக்களை நசுக்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரி பாடிஸ்டா வின் ஆட்சியை தூக்கியெறியும் நோக்கத்துடன் மகத்தான தலைவர் பிடல்காஸ்ட்ரோ தலைமை யில் ஒன்றிணைந்த இளந்தொழிலாளர்கள், மாணவர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் என சமூ கத்தின் அனைத்துத் தரப்பினரும் இணைந்து உருவாக்கிய புரட்சிகரக் குழு கியூபாவின் சாண்டியாகோ நகரில் உள்ள மன்காடா ராணுவ அரண் மீதும், பயாமோ நகரில் உள்ள கர்லோஸ் மனுவேல் ராணுவ அரண் மீதும் நடத்திய அந்த முதல் தாக்குதலின் உத்வேகம் இன்றும் கியூப இளைஞர்களிடையே, கியூபத் தொழிலாளர்களி டையே கனன்று கொண்டிருக்கிறது.
1945ல் உதயமான கொரிய மக்கள் ஜன நாயகக் குடியரசு(வடகொரியா) சோசலிசப் பாதையில் முன்னேறத் துவங்கியதைப் பொறுக்க முடியாமல் அந்த நாட்டின் மீது 1950ல் படை யெடுத்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம். வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே திட்டமிட்ட யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டது. மூன்றாண்டுகள் நடந்த கொரிய யுத்தத்தில் தனது கைக்கூலியான தென்கொரிய ராணு வத்திற்கு முழுமையாக ஆயுதம் சப்ளை செய்தது அமெரிக்கா. வடகொரியாவின் தலைநகர் பியாங் யாங்கில் மட்டும் 4லட்சத்து 28 ஆயிரத்து 748 குண்டுகளை வீசியது அமெரிக்கா. இந்தக் கொடிய யுத்தத்தில் 40லட்சத்திற்கும் அதிகமான தங்களது சகோதரர்களைப் பலி கொடுத்து, தங்கள் தேசத்தை மீட்கப் போராடினார்கள் வர லாற்றுச் சிறப்புமிக்க வடகொரிய மக்கள். சோசலிசப் புரட்சியின் தலைவர் தோழர் கிம் இல் சுங் தலைமையில் வடகொரிய மக்கள் வெளிப்படுத்திய அப்பழுக்கற்ற தேசபக்தியை மீறி அமெரிக்க ராணுவத்தால் மேலும் முன்னேற முடியவில்லை.
வேறு வழியின்றி 1953ம் ஆண்டு ஜூலை 27ந்தேதி போரை நிறுத்திக் கொள்வ தாக ஒரு ஒப்பந்தத்திற்கு வரவேண்டிய நிர்ப்பந் தம் ஏற்பட்டது. இன்னுயிரை ஈந்து வெற்றிகொண்ட புரட்சியை இன்றளவும் உறுதியோடு பாதுகாத்து வருகிறது வடகொரியத் தொழிலாளர் கட்சி.உலகையே விழுங்கத்துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, சின்னஞ்சிறிய நாடுகள் என்றபோதிலும், தங்கள் உயிரினும் மேலான சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடித்து பீடுநடை போடும் சோசலிச கியூபாவை யும், சோசலிச வடகொரியாவையும் உளப்பூர்வ மாக வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment