மத்திய செயற்குழு முடிவுகள்
:
நமது மத்திய சங்கத்தின் செயற்குழு கூட்டம்
கொல்கத்தா நகரில் கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தோழர்
நம்பூதிரி தலைமையில் சீரும் சிறப்புமாக நடந்தேறி உள்ளது. இச்செயற்குழு தீர்வுக்காக
உள்ள பிரச்சனைகள் குறித்து (PENDING DEMANDS) மிகவும் கூர்மையாக
விவாதித்து பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. கிட்ட தட்ட 28 கோரிக்கைகளுக்காக மூன்று
கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமான சிலவற்றை கீழே
தந்துள்ளோம்.
போராட்ட அறைகூவல் :
1.
NEPP -ல்
இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை
களைவது;
2.
நீண்ட
நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
3.
RM மற்றும்
Gr.
D கேடரில்
ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
4.
கேடர்களின்
பெயர் மாற்றம்;
5.
1.10.2000-ற்கு
முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த
INCREMENT
தேதியில் விருப்பம்
தெரிவித்தவர்கள் பிரச்சனை;
6.
நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள BONUS,
LTC, மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப
பெறுதல்;
7.
பல்வேறு
ALLOWANCE
மாற்றி அமைப்பது;
8.
STOA / TM கேடர்களின்
உயர் ஊதிய பிரச்சனை;
9.
TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை
தளர்த்துவது;
10.
காலியாக
உள்ள SC /
ST பதவிகளை நிரப்புவது;
11.
வாரத்தில்
5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
12.
BSNL-ல்
நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
13.
1.1.2007-ல்
நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
14.
கருணை
அடிப்படையில் பணி
நியமனம் செய்வது;
15.
ஒப்பந்த
ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;
இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக கீழ்கண்ட மூன்று கட்ட போராட்டங்களை
நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.
·
19.07.2013 ....
ஆர்ப்பாட்டம்
·
ஆகஸ்ட் 21, 22 & 23 தேதிகளில் தர்ணா
·
4.9.2013 ஒரு நாள் வேலைநிறுத்தம்
என்றும்
தோழமையுடன்,
C.சுவாமி குருநாதன் - மாவட்ட செயலர்
No comments:
Post a Comment