Saturday 6 July 2013

ஜூலை 9 தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கப் போராட்டம்

நெய்வேலி தொழிலாளரின் வீரம்செறிந்த போராட்டத்தை அனைத்துப் பொதுமக்களும் ஆதரிப்பீர்!
ஜூலை 9 தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கப் போராட்டம்
சென்னை, ஜூலை 5 -நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழி லாளர்களின் போராட்டத்தை ஆதரித்து ஜூலை 9 செவ்வாயன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள எச் எம்எஸ் தொழிற்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வெள்ளியன்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட் டம் நடைபெற்றது.
எச்எம்எஸ் பொதுச் செயலாளர் க.அ.ராஜா ஸ்ரீதர் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிஐ டியு தலைவர்கள் அ.சவுந்தரராசன் எம் எல்ஏ, ஜி.சுகுமாறன், ஏஐடியுசி தலைவர் கள் டி.எம்.மூர்த்தி, ஜே.லட்சுமணன், எல்.பி.எப். சார்பில் மு.சண்முகம், ஆ.நட ராசன், ஏடிபி சார்பில் தாடி.ம.இராசு, எ.சோமசங்கரன், ஐஎன்டியுசி சார்பில் ஆர்.பி.கே.முருகேசன், பி.எம்.எஸ். சார்பில் க.பழனிச்சாமி, எச்.எம்.எஸ். சார் பில் எம்.சுப்பிரமணியபிள்ளை, ஏஐசிசி டியு சார்பில் என்.குமரேஷ், எஸ்.ஜவ ஹர், ஏஐயுடிசி சார்பில் வி.சிவக்குமார், எஸ்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஐந்து சதமான பங்குகளை தனியா ருக்கு தாரைவார்க்கும் முடிவினை எதிர்த்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் சங்கங் களும், அதிகாரிகள், பொறியாளர்களின் கூட்டமைப்புகள் ஒருங்கிணைந்து ஓர் போராட்டத்தில் இறங்கினர்.
அதனடிப் படையில் வாயிற்கூட்டங்கள், உண் ணாவிரத போராட்டங்கள் முடிவுற்று 3.7.2013 இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறி விக்கயிருந்த நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஓர் தடை உத்தரவை பெற்றுள்ளது. இருப்பினும் தொழிலாளர் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமின்றி, மத்திய அரசு பங்கு விற்பனை கைவிடும் வரை வேலைநிறுத்தம் செய்வதென நெய்வேலி அனைத்து தொழிலாளர் சங் கங்களும் முடிவு செய்ததை வரவேற் கிறோம். இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆதரித்து வரும் 9ம்தேதி தமிழகம் தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்களும் மாநிலம் தழுவிய அளவில் இணைந்து போராட்டம் நடத்து வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.நெய்வேலி வரலாற்றில் அதிகாரி களும், பொறியாளர்களும், தொழிலாளர் களும் ஒருங்கிணைந்து போராடி பல சாதனைகளைப் படைத்த வரலாறு உண்டு என்பதை நினைவுபடுத்தி, பல் வேறு அச்சுறுத்தல்கள், நிர்ப்பந்தங்களி னால் பணிக்கு சென்றிருந்தாலும், அதி காரிகளும், பொறியாளர்களும் தங்கள் முழு ஆதரவை இப்போராட்டத்திற்கு அளித்து நெய்வேலி நிறுவனத்தை தனியார் மயத்திலிருந்து காப்பாற்றிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் அந்த அமைப்புகளுக்கு வைப்பதென் றும் தீர்மானிக்கப்படுகிறது.
வேலைநிறுத்தம் என்பது தொழி லாளர்களின் கடைசி ஆயுதம் என்ற நிலையில், நீதிமன்றம் இந்த பிரச்சனை களை பேசி முடிக்க வேண்டுமென்ற ஆலோசனைகளை வழங்குவதற்கு பதிலாக வேலை நிறுத்தத்தை தடை விதிப்பதை இக்கூட்டம் தொழிலாளர் களின் சார்பில் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கருதுகிறது.நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை பொதுமக்களும், அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஆதரவு அளிக்க வேண்டுமென அனைத்து தொழிற்சங்கங்களின் கூட் டமைப்பு கேட்டுக் கொள்கிறது.நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து அனைத்து தொழிற்சங்கங் களும் இணைந்து மாவட்டத் தலை நகரங்களில் 9.7.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவ தென தீர்மானிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment