Tuesday, 9 July 2013

என்எல்சி தொழிலாளர்கள் கைது


அனல்மின் நிலையம் முற்றுகை
என்எல்சி தொழிலாளர்கள் கைது

அனல்மின் நிலையத்தை முற்றுகையிட அணிவகுத்த என்எல்சி தொழிலாளர்கள். (படம்: க.சிவபாலன்)
கடலூர், ஜூலை 9-
பங்கு விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனல்மின்நிலையத்தை முற்றுகையிட்ட என்எல்சி தொழிலா ளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.என்எல்சி நிறுவனத்தின் 5 விழுக் காடு பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளதை எதிர்த்து என்எல்சி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 3ந் தேதி தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க் கிழமையும் நீடித்தது.இந்த போராட்டத்தை ஆதரித்து மாநில மற்றும் மத்திய தொழிற்சங்கங் களும் மாநிலம் முழுவதும் போராடி வருகின்றன.இதற்கிடையில், என்எல்சி-யின் 5 விழுக்காடு பங்குகளை தமிழக அர சுக்கு விற்பனை செய்ய பங்கு பரிவர்த் தனை வாரியம் (செபி) சம்மதம் தெரி வித்துள்ளது.
இது குறித்து நடை பெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு விற்பனையை கை விடும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வது என்று முடிவு செய்தனர்.காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை நெய்வேலியிலுள்ள முதல் அனல்மின் நிலையத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர்.அதன்படி, காலை 6 மணி முதலே நெய்வேலி ஸ்கீயூ பாலம் அருகே தொழிலாளர்கள் குவியத் தொடங்கி னர். 9 மணிக்கு 5 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் அங்கு குவிந் தனர்.அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் முதல் அனல்மின் நிலையம் உள்ளது. அதை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஸ்கீயூ பாலத்திலிருந்து ஊர் வலம் புறப்பட்டு அனல் மின் நிலை யத்தை நோக்கி முன்னேறியது. 500 மீட்டருக்கு அப்பால் தொழிலாளர் களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்து காவல்துறை மற்றும் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்த மான பேருந்துகளில் ஏற்றிச் சென்று பள்ளிகளில் தங்க வைத்தனர்.
இந்த முற்றுகை போராட்டத் திற்கு தலைமை தாங்கிய அதொமுச செயலாளர் உதயகுமார், தொமுச பொதுச் செயலாளர் ராசவன்னியன், தலைவர் திருமால் வளவன், பொரு ளாளர் அண்ணாதுரை, சிஐடியு பொதுச் செயலாளர் ஏ.வேல்முருகன், தலைவர் ஜி.குப்புசாமி, பொருளாளர் அரிராமன், நிர்வாகிகள் மீனாட்சி நாதன், திருஅரசு, ஜெயராமன், சீனு வாசன், அதொமுச தலைவர் அபு, பொருளாளர் தேவானந்தன், பாட் டாளி தொழிற்சங்க செயலாளர் தில கர், பிஎம்எஸ் செயலாளர் ராஜகோ பால், ஐஎன்யுசி தலைவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.தொழிலாளர்களின் போராட்டத் தையொட்டி கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராதிகா தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டி ருந்தனர். அனல் மின்நிலையம் நுழைவு வாயிலுக்கு முன்பு 2 இடங் களில் தடுப்பு வேலிகளாக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
தண்ணீர் தேங்கும் சுரங்கங்கள்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறு வனத்தில் 3 சுரங்கங்கள் உள்ளன. அதில் கசிந்து வரும் நிலத்தடி நீரை வெளியேற்றுவதற்காக 120க்கும் மேற் பட்ட ஊழியர்கள் பணியில் இருந்து வந்தனர். அவர்களுக்கு வேலை நிறுத் தத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந் தது. ஆனால் அவர்களும் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தத் தில் பங்கேற்றுள்ளனர்.தற்போது மூன்று சுரங்கங்களிலும் தேங்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரு கிறார்கள். அதுவும் முழுமையாக செய்யமுடியவில்லை. 500 மோட்டார் பயன்படுத்திய இடத்தில் ஓரிரு மோட்டார் மட்டுமே அதிகாரிகளால் இயக்கப்படுகிறது. இந்த பணியும் எந்த நேரத்திலும் நிறுத்தப்படும்.நாள் ஒன்றுக்கு 8.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படும். தற் போது அந்தப் பணி பாதிக்கப்பட் டுள்ளதால், சுரங்கத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி வருகிறது. சுரங் கங்களில் 2 மீட்டர் வரை தண்ணீர் தேங்கியிருக்கிறது.

இதனால் நிலக்கரி வெட்டி எடுக் கும் பணி முற்றிலுமாகப் பாதிக்கப்பட் டுள்ளது. மின்சார உற்பத்தியும் படிப் படியாக குறைந்து வருகிறது.இதுகுறித்து சிஐடியு சங்க பொதுச் செயலாளர் ஏ.வேல்முருகன் கூறுகை யில், பங்கு விற்பனையிலிருந்து மத்திய அரசு பின் வாங்கும் வரை போராட் டம் தொடரும். மத்திய தொழிற்சங்கங் களும் எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எங்களின் அடுத்தகட்ட போராட்ட நடவடிக் கைகள் குறித்து அனைத்து சங்கங்களும் கூடி முடிவெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment