கிரீஸில் மீண்டும் 25 ஆயிரம் அரசு ஊழியர்களை வெறியேற்ற முடிவு - அரசிற்கெதிராக தொடர் போராட்டம்
ஏதென்ஸ், ஜூலை 18-கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டில் பணிபுரியும் 25 ஆயிரம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இது குறித்த மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 293 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 153 பேரின் ஆதரவுடன் அரசு நிறைவேற்றியுள்ளது. கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்நாடு மீள முடியாமல் திணறி வருகிறது. இதனால் அந்நாட்டில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஏற்கனவே பொதுநிதி வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் எதிர்பார்த்த அளவில் பொருளாதார மீட்சி ஏற்பட வில்லை. இந்நிலையில் மேலும் அந்நாடு நெருக்கடியில் மூழ்காமல் தவிரிக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 700 கோடி யூரோ கடனாக கிரீஸ் நாடு கோரியிருக்கிறது. இதனை பெற வேண்டும் என்றால் நாட்டின் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களில் மேலும் 25 ஆயிரம் பேரை வெளியேற்ற வேண்டும் என ஐஎம்எப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்து இருந்து.
இந்நிலையில், புதனன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புதியதாக ஒரு சிக்கன நடவடிக்கை மசோதா முன்வைக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக இந்தாண்டில் மட்டும் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 4 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் சுமார் 25 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தில் 75 சதவிகிதத்தை மட்டும் வழங்கி, அவர்களுக்கு பணி ஒதுக்காமல் நிறுத்தி வைப்பது. எதிர்காலத்தில், இவர்களை வீட்டுக்கு அனுப்புவது என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டின் பிரதமர் அன்தோனி சமரஸ் தனது மூன்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இந்த மசோதவை நிறைவேற்றினார்.
போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் வெளியே பல்லாயிரக்கணக்கானனோர் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக அரசின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில், புதிய சிக்கன நடவடிக்கை மசோத நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில் அரசிற்கெதிரான போராட்டம் மேலும் தீவிரமடையும் என அந்நாட்டின் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளன
No comments:
Post a Comment