Friday 12 July 2013

முடிகிறது’ தந்தி சேவை


‘முடிகிறது’ தந்தி சேவை


துரித வகையில் செய்தி பரி மாற்றம் செய்வதற்கு ஏராளமான மின்னணு சேவைகள் உருவாகி விட்ட சூழலில் தனித்துவமான தும், தொன்மை கால சேவை யான தந்தி சேவை ஜூலை 15 அன்று இந்தியாவில் மூடப்படு கிறது. தந்தி சேவையை கடைசி யாக பயன்படுத்த விழைவோர் ஜூலை 14 தேதி இரவு 7 மணிக் குள் தங்களது ஆசையை தீர்த் துக் கொள்ளலாம். ஒரு காலகட்டத்தில் இன் றைய இணையதளங்கள், செல் போன்கள் இல்லாத காலங்களில் பல தகவல்களை உடனடியாக தெரிவிக்க தந்தி சேவை தான் பயன்பட்டது. போதுவாக தந்தி என்று சொன்னால் மக்கள் அஞ் சிய காலம் அது. வேலை நிய மனத்துக்கு தந்தி வந்தால் கூட அது என்னவென்று தெரியாமல் அழுது புரண்ட காலமும் உண்டு. காலமானார் என்ற செய்தியை அனுப்பவே பெரும்பாலும் தந்தி பயன்பட்டதால் இந்த அவலம் நடந்தது. உங்களால் ஒரு திரு மணத்துக்கு செல்ல முடியவில்லை என்றால் வாழ்த்துச் செய்தியை தந்தி மூலம் அனுப்பி விடலாம். இன்றும் கூட அந்த நடைமுறை உள்ளது. தந்தி சேவை நட்டத் தில் ஓடுவதால் அதை மூடுவ தாக பாரதிய சஞ்சார் நிகாம் லிமி டெட் கூறுகிறது. தந்தி சேவை யை நிறுத்துவதற்கு ஊழியர் சங் கங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதி லும் அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ள தயாராயில்லை. வழக்க றிஞர்கள் சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
1844ம் ஆண்டில் சாமுவேல் மோர்ஸ் தந்தி அனுப்பும் முறை யைக் கண்டு பிடித்தார். அவர் அவ்வாண்டில் மே 24ந்தேதி யன்று முதல் தந்தியை அனுப்பி னார் என்று கருதப்படுகிறது. அவர் ஆல்பிரட் வைல் என்பவ ருக்கு அனுப்பிய தந்தியில் “கட வுள் எப்படி செய்து விட்டார்” என்று செய்தி அனுப்பியுள்ளார். முதலாம் உலக போரில் தந்தி சேவை முக்கியமான பங்கை வகித் துள்ளது. பாகிஸ்தான் காஷ்மீ ரின் மீது 1947ம் ஆண்டில் படை யெடுத்த போது இந்திய பிரதமர் நேரு உதவி கேட்டு பிரிட்டிஷ் பிரதமர் கிளமண்ட் அட்லிக்கு தந்தி அனுப்பினார். பிரபல எழுத் தாளர் மார்க் ட்வெய்ன் 1897ம் ஆண்டில் லண்டனில் இருந்த போது அவர் இறந்து விட்டார் என்று அமெரிக்காவில் ஒரு பத் திரிகையில் செய்தி வெளியிடப் பட்டது. லண்டனில் இருந்து மார்க் ட்வெயின் அனுப்பிய தந்தி யில் “எனது இறப்பு செய்தி மிக வும் மிகைப்படுத்தப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
0ம் ஆண்டில் தொடங்கியது. முதலாவது சோதனை சேவை கொல்கத்தாவுக்கும் அதிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள டயமண்ட் ஹார்பருக்கு இடை யில் நடத்தப்பட்டது. தொடக்க காலத்தில் தந்தி சேவை கிழக் கிந்திய கம்பெனி மட்டுமே சொந் தமாக இருந்தது. 1853ம் ஆண் டுக்குள் இந்தியாவில் கொல் கத்தா தந்தி மூலமாக பெஷாவர், ஆக்ரா, மும்பை, சென்னை, பெங் களூர், உதகமண்டலம் ஆகிய ஊர்களுடன் இணைக்கப்பட் டது. இதற்காக 6400 கி.மீ. நீளத் துக்கு தந்திக்கம்பிகள் போடப் பட்டன. இந்தப் பணியை திறம் பட நிறைவேற்றியவர் ஒரு பொறி யாளர் அல்ல என்பது குறிப்பிட த்தக்கது. மருத்துவராக பணியாற்றி வந்த வில்லியம் ஓ’ சாக்னெஸ்ஸி என்பவரிடம் இப்பணையை கிழக் கிந்திய கம்பெனி ஒப்படைத் திருந்தது. 1854ம் ஆண்டில் தந்தி சேவை மக்களுக்காக திறந்து விடப்பட்டது. அதற்கென தனி துறையும் உருவாக்கப்பட்டது.
மனிதன் தகவல்களைப் பரி மாறிக் கொள்வதற்கு பலவழி களைக் கண்டு பிடித்து வந்துள் ளான். தொடக்க காலத்தில் புகை யை பயன்படுத்தி தகவல்களை அனுப்பியுள்ளான். இன்றும் போப் தேர்தலை புகை மூலமாக அறி விப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். 1792ம் ஆண்டில் செம போர்ஸ் லைன் என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கொடி களை அசைப்பதன் மூலம் கப் பல்களுக்கு இடையே, தொலை வில் உள்ள கட்டிடங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடந் துள்ளது.1832ம் ஆண்டில் சில் லிங் என்பவரால் முதல் மின் சக்தி மூலமாக தந்தி அனுப்பும் முறை கண்டுபிடிக்கப்பட்டது என்று சாமுவேல் மோர்ஸ் கூறு கிறார். முதலில் கூறிய இரண்டு முறைகளையும் அவர் தந்தி என்று அடையாளம் கூற முடி யாது என்று கூறுகிறார். மோர்சும் அவருடைய நண்பர் ஆல்பிரட் வைலும் மோர்ஸ் குறிகள் மூல மாக தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்தனர்.

1866ம் ஆண்டில் அட்லாண் டிக் கடலடியில் கேபிள்கள் அமைக் கப்பட்டு தந்தி சேவை தொடங் கப்பட்டது.பிரிட்டனும் இந்தியா வும் தந்தி மூலம் 1870ம் ஆண் டில் இணைக்கப்பட்டன.1872ம் ஆண்டில் ஆஸ்திரேலியா இணைக் கப்பட்டது. 1902ம் ஆண்டில் பசி பிக் கடல்வழியே தந்தி சேவை தொடங்கியது. தந்தி சேவையை அடுத்து டெலிபிரிண்டர்கள் உரு வாக்கப்பட்டன. பின்னர் தொலை பேசி பழக்கத்துக்கு வந்தது. அது முதல் தந்தி சேவை தனது முக் கியத்துவத்தை இழக்கத் தொடங் கியது. வானொலி வந்த பின் கம் பியில்லா சேவைகள் தொடங் கின. கணினி காலம் தொடங்கி யவுடன், இமெயில் உருவாக்கப் பட்ட பின் அதன் பயன்பாடு மிக வும் குறையத்தொடங்கியது. செல் போன்கள் பயனுக்கு வந்த பின், உலகில் 80 விழுக்காட்டினர் அதன் வலையில் சிக்கிய பின் தந்தி சேவை தேவையற்றதாக மாறிவிட்டது. அதனால் தந்தி சேவை மூடப்படுவதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment