Sunday 26 October 2014

முதலாளிகள் நலத் துறை!


முதலாளிகள் நலத் துறை!


தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று

 கருதும் பிரதமர் நரேந்திர மோடி, ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய
 உழைப்பே வெல்லும்என்ற புதிய திட்டத்தைத் 
தொடங்கிவைத்திருக்கிறார்.
ஏனைய அரசியல் கட்சிகள், மத்திய தொழிற்சங்கங்கள் யாரையும் 
ஆலோசனை கலந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் 
தெரியவில்லை. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து 
டிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம்
 நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் 
அறிவித்திருக்கின்றன.
புதிய நடைமுறையின்படி தொழில் நிறுவனங்களே
 தங்களுடைய ஆலையில் உள்ள தொழிலாளர்கள்
 நிலைமை குறித்து, எளிமைப் படுத்தப்பட்ட 
விண்ணப்பங்களில் தகவல்களை நிரப்பி, தாங்களே 
ஆய்வுசெய்து அந்த அறிக்கையை உரிய துறைகளுக்கு
 அனுப்பி வைக்கலாம். அதேசமயம், தொழிற்சாலை
 ஆய்வாளர்கள் இனி எந்த ஆலைக்கு ஆய்வுக்குச்
 செல்வதாக இருந்தாலும் அதை எழுத்துபூர்வமாக
 முன்கூட்டியே தங்கள் அலுவலகங்களில் பதிவுசெய்ய
 வேண்டும். ஆலையில் ஆய்வுகளை முடித்த பிறகு
ஆய்வறிக்கையை 72 மணி நேரத்துக்குள் கணினியில்
 பதிவுசெய்துவிட வேண்டும். அதன் பிறகு அதில் மாறுதல்கள்

 எதையும் செய்ய முடியாது. அந்தப் பதிவை அந்தத்
 துறையின் அதிகாரிகள், ஆலையின் நிர்வாகம்,
தொழிலாளர்கள் தரப்பு என்று அனைவரும் பார்க்க 
முடியும். அரசின் இந்த முடிவைத் தொழில் துறையும் 
முதலாளிகளும் வ
வேற்கின்றனர்; தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் 
எதிர்க்கின்றனர்.
ஒரு தொழில்சாலையை நடத்த 
தொழிலதிபர்கள் தங்களுக்குத் தேவைப்படும் 
நிலம், மின்சாரம், தண்ணீர், மூலதனக் கடன்
 என எதையெல்லாம் சலுகையில் பெற முடியுமோ,
அதையெல்லாம் சலுகையில் பெறுகின்றனர்
புதிய நிறுவனங்களாக இருந்தால் முதலீட்டு 
மானியமும்
 பெறுகின்றனர்; முன்னுரிமை பெற்ற ஏற்றுமதித் துறையாக
 இருந்தால் ஏற்றுமதி மானியமும் பெறுகின்றனர்.
 நாடு வாரிக் கொடுக்கிறது. ஆனால்
தொழில் அதிபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் 
இப்படியெல்லாம் காட்டப்படும் சலுகையிலும்,
பரிவிலும் நூறில் ஒரு பங்குகூடத்
 தொழிலாளர்களுக்குக் காட்டப்படுவதில்லை. 
அவர்கள் வசம் மிச்சசொச்சம் இருக்கும் 
உரிமைகளையும் பறிக்க அரசே துணை போகும் என்றால்,
தொழிலாளர் நலத் துறையின் பெயரை
 முதலாளிகள் நலத் துறை என்று மாற்றிவிட்டு 
பகிரங்கமாக அதைச் செய்யட்டும்!

Monday 20 October 2014

தீபாவளி ....தேதி 23.10.14 என்றிருந்தது 22.10.14மாறிஉள்ளது....


தீபாவளி ....தேதி 23.10.14 என்றிருந்தது 22.10.14மாறிஉள்ளது....

அருமைத் தோழர்களே! நமது தமிழகத்தில்

  BSNL ஊழியர்களுக்கு  தீபாவளி விடுமுறை 

தேதி ஏற்கனவே  23.10.14 என்றிருந்தது

அதை  இப்போது BSNL தமிழ் மாநில நிர்வாகம்

 22.10.14 என மாற்றி  உள்ளது அதற்கான உத்தரவை

 CGM அலுவலக  BSNL நிர்வாகம் கீழ்க்கண்

 வாறு வெளியிட்டுள்ளது ....தீபாவளி வாழ்த்துக்கள்..


தீபாவளி வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் BSNLEU திருநெல்வேலி மாவட்ட சங்கம் தனது    தீபாவளி நல்  வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.   ...

Saturday 18 October 2014

7TH ALL INDIA CONFERENCE


7TH ALL INDIA CONFERENCE

7th All India Conference

அழைப்பிதழ்

சபாஷ் ! ஆந்திரா மாநில BSNL ஊழியர்கள்சபாஷ் ! ஆந்திரா மாநில BSNL ஊழியர்கள்

       ஹூத் ஹூத் புயலால் ஆந்திரா 
மாநில கடற்கரையோர பகுதிகளில் உள்கட்டமைப்பு
 சீர்குலைந்துள்ளது. அங்கு இன்னமும்
 தொலைத்தொடர்பு சேவைகள் சீரடையவில்லை.
இது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவன
 அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் 
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 
விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில்
 கோபமாகப் பேசிய சந்திரபாபு நாயுடு, தனியார்
 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வணிக 
நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகின்றன. 
மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை, 
தகவல் தொடர்பு சீரடையாததால் அரசின் 
நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, 
என்று கடிந்து கொண்டார்.இதே நேரத்தில் 
அரசுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம் 
தனது 85% நெட்வொர்க் ஐ சரிசெய்து உள்ளதை 
ஆந்திரா மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு
 சந்திரபாபு நாயுடு அவர்கள் பாராட்டி நமது 
ஆந்திரா மாநில தலைமை பொதுமேலாளர் 
உயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நமது சேவையை
 பாராட்டி உள்ளார் .நமது தொலை தொடர்பு 
சேவை விரைந்து சரி செய்யப்பட்டதால்
 மாநிலத்தில் நிவாரண பணிகளும் 
,புனரமைப்பு பணிகளும் விரைந்து செயல்பட 
உதவி புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது .ஊடகங்களும்
 நமது பணியை பாராட்டி உள்ளன.நாமும் பாராட்டுவோம்
 ஆந்திர மாநில BSNL ஊழியர்களை !.இது விசயமாக
 நமது ஆந்திரா மாநில செயலருக்கு 
அம் மாநில தலைமை பொது மேலாளர் அனுப்பிய  
 குறுந்தகவல் படிக்க :-Click Here

Thursday 16 October 2014

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்
மாநில சங்கத்தின் அறைகூவலின்படி போராடும் நெய்வேலி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாகவும் நோக்கியோ ஆலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் (16/10/2014)
Monday 13 October 2014

திருச்சி BSNLEU தமிழ் மாநில மாநாட்டு நிர்வாகிகள் . . .திருச்சி BSNLEU தமிழ் மாநில மாநாட்டு நிர்வாகிகள் . . .

அருமைத் தோழர்களே! திருச்சியில் கடந்த அக்டோபர் 11 , 12 & 13 ஆகிய மூன்று நாட்கள்  மிகவும் கம்பீரகமாக நடைபெற்ற நமது BSNLEU தமிழ்  மாநில மாநாட்டில்  ஒருமனதாக கீழ்கண்ட நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர் . . 


தொடரும் அறிக்கையின் மீதான கலந்துரையாடல்


Read | Download

தொடரும் அறிக்கையின் மீதான கலந்துரையாடல்
அறிக்கையின் மீதான கலந்துரையாடல் மாநாட்டின் மூன்றாம் நாளிலும் தொடர்ந்து நடைபெற்றது.

செயல்பாட்டறிக்கையின் மீதான கலந்துரையாடல்

Read | Download

செயல்பாட்டறிக்கையின் மீதான கலந்துரையாடல்
செயல்பாட்டறிக்கையின் மீதான தொடரும் கலந்துரையாடலின் காட்சிப் பதிவுகள்

மாநில மாநாடு நிகழ்வுகள்

Read | Download

மாநில மாநாடு நிகழ்வுகள்
மாநில மாநாடு நிகழ்வுகளில் சில

மாநில மாநாடு புகைப்படங்கள்

Read | Download

மாநில மாநாடு புகைப்படங்கள்
7வது மாநில மாநாடு நிகழ்வுகள்

Thursday 9 October 2014

BSNLEU CIRCLE CONFERNCE


BSNLEU CIRCLE CONFERNCE


BSNLEU CIRCLE CONFERNCE

நவம்பர்-27 ஒருநாள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்...நவம்பர்-27 ஒருநாள் நாடுதழுவிய வேலைநிறுத்தம்...

    அருமைத் தோழர்களே!
        07.10.2014-ல் டெல்லியில்  நடைபெற்ற JAC
      கூட்டமுடிவின்அடிப்படையில்நவம்பர்-27
   ஒருநாள்நாடுதழுவியவேலைநிறுத்தத்திற்கான
    முன்னறிவிப்புநோட்டிசை BSNL-CMD திரு.A.N.ராய் அவர்களிடம் 
    நமதுஅகில இந்திய கூட்டுப் 
    போராட்டக்குழு JAC - 08.10.2014 புதன் 
    அன்றுசமர்ப்பித்தது....

Saturday 4 October 2014

திருச்சி - நமது BSNLEU மாநில மாநாட்டிற்கு SPL.C.L...
திருச்சி - நமது BSNLEU மாநில மாநாட்டிற்கு SPL.C.L...

அருமைத் தோழர்களே! திருச்சியில் எதிர்வரும் 11,12&13 தேதிகளில் நடைபெற உள்ள  - நமது  BSNLEU  தமிழ் மாநில மாநாட்டிற்கு,(CGM-O) மாநில நிர்வாகம் அறிவித்துள்ள சிறப்பு விடுப்பு ( SPL.C.L ) கடிதம் கீழே தரப்பட்டுள்ளது ... 

Wednesday 1 October 2014

மாநில மாநாடு போஸ்டர்

             மாநில மாநாடு போஸ்டர்

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்

அக்டோபர் - 2 காந்தி ஜெயந்தி . . .


அக்டோபர்-2இந் நாளில் காந்தி அவர்களின் நினைவை 
போற்றுவோம். காந்திஜி அவர்களின்கொள்கைகளான,எளிமை,தூய்மை,உண்மை
ஆகியநற்பண்புகளை, காந்தி ஜெயந்தி நாளான 
இன்று நினைவு கூறுவோம். . . .25.09.2014 - தேசிய கவுன்சில் (NJCM) கூட்டம்.


அருமைத் தோழர்களே! டெல்லியில் கடந்த 25.09.2014 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் - தேசிய கவுன்சில் (NJCM) கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மிக அதிமுக்கிய ஊழியர்களின் கோரிக்கை குறித்து மிக விரிவாக விவத்திக்கப்பட்டது. அதன் விபரங்களை நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 


அனைவருக்கும் ....நன்றியும் - பாராட்டும் . . .

அருமைத்தோழர்களே!நமதுJACஅறை
 கூவலை ஏற்று30.09.2014அன்று2மணிநேரவெளிநடப்பு
போராட்டத்தில்,பங்கேற்றஅனைவருக்கும்நமதுநன்றியும்-பாராட்டும்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
திருநெல்வேலிமாவட்டJACசார்பாகவும் நமதுBSNLEUமாவட்டசங்கம்சார்பாகவும் மனமார்ந்தபாராட்டுக்களைஉரித்தாக்குகிறோம். 

      --என்றும் தோழமையுடன்      
                  ,Nசூசைமரிய அந்தோணி..D/S-BSNLEU.