Wednesday 26 March 2014

இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. காலமானார்
இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. காலமானார்

          தி.க.சி. என அனைவராலும் அறியப்படும் இலக்கியத் திறனாய்வாளர் தி.க. சிவசங்கரன் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 89.
          சிறிது நாள்கள் உடல்நலமின்றி திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.க.சி.யின் உயிர் இரவு 10.30 மணிக்கு பிரிந்தது.

          மூத்த இலக்கியச் செயற்பாட்டாளரும், முற்போக்கு இலக்கியவாதிகளின் வழிகாட்டியாகவும் விளங்கிய இவர், திருநெல்வேலியில் 1925ஆம் ஆண்டு மார்ச் 30-ல் கணபதியப்பன், பர்வதம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது 11ஆவது வயது முதலே "தன்னை செதுக்கிய சிற்பி மகாகவி பாரதி' என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நினைவுகூர்ந்தவர்.
          1941 ஜூன் மாதம் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்தார். 1945 முதல் 1964ஆம் ஆண்டு வரை வங்கி ஊழியராகவும், தொழிற்சங்கவாதியாகவும் தமிழகத்திலும், கேரளத்திலும் இவர் பெற்ற அனுபவங்களை ஒரு நாவலாக சித்தரிக்க வேண்டும் என்பதே இவரது பேராசை. அது நிறைவேறாமலேயே போனது.
          1941ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எழுத்தாளர் வ.ரா.வின் பாணியில் நடைச் சித்திரங்கள் எழுதப் பழகி, பிறகு கதாசிரியராக மாறினார். கவிஞர், நாடகாசிரியர், சினிமா விமர்சகர், இலக்கிய விமர்சகர், பத்திரிகையாளர், திறனாய்வாளர், இலக்கியச் செயற்பாட்டாளர் என பல்வேறு தளங்களில் பரிணமித்தவர்.
          இவரது "விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்' என்ற நூலுக்காக 2000-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் இலக்கிய விருது, பாரதிய இலக்கிய விருது, லில்லி தேவசகாயம் இலக்கிய அறக்கட்டளை விருது, தமிழ்ச் சான்றோர் பேரவை விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
          இன்றளவும் திறனாய்வாளர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் பிரேம்சந்த், முல்கராஜ் ஆனந்த், சஜ்ஜாத் ஜாகிர் ஆகியோரால் தொடங்கப்பட்டு, நேரு, சரோஜினி நாயுடு, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்தில் வரவேற்று வளர்த்த முதன்மையானவர்களில் ஒருவர்.
          72 ஆண்டு கால இலக்கிய அனுபவத்தைக் கொண்டிருந்தார். கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிரம்பியவர்கள்கூட தி.க.சியை உணர்வுபூர்வமாக நேசித்து வந்ததே இவரது ஆளுமையின் தனித்த வெளிப்பாடுக்கு கிடைத்த சான்றாக உள்ளது. இவரது இலக்கியப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட படைப்பாளிகளே இன்றைய தலைமுறை எழுத்தாளர்களாக தமிழிலக்கிய உலகில் ஜொலித்துக் கொண்டுள்ளனர். இவருக்கு கணபதி, வண்ணதாசன், சேது என்ற மகன்களும், ஜெயலட்சுமி, பருவதகுமாரி, கௌரி என்ற மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 97916 17421.
        இளம் தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்திற்கு உந்து சக்தியாக இருந்து பலரையும் எழுத்தாளர்களாக்கிய தோழரின் மறைவிற்கு நமது மாவட்டச் சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது.

RGB தேர்தல் சுவரொட்டி 1.2.RGB தேர்தல் வழிகாட்டுதல்கள்சொசைட்டி தேர்தலை முன்னிட்டு சென்னை தொலைபேசியில் BSNL ஊழிர்சங்கம் வெளியிட்டுள்ள சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு-1Read | Download

சொசைட்டி தேர்தலை முன்னிட்டு சென்னை தொலைபேசியில் BSNL ஊழிர்சங்கம் வெளியிட்டுள்ள சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு-2
Read | Download
RGB தேர்தல் வழிகாட்டுதல்கள்Read | Download

Tuesday 25 March 2014

அம்பானியின் கஜானாவும் விவசாயிகளின் கல்லறையும்அம்பானியின் கஜானாவும் விவசாயிகளின் கல்லறையும்

இந்தியாவில் எல்லா துறைகளும் தனியாருக்குத் திறந்து விடப்பட்டால் நுகர்வோருக்கே ஆதாயம் என நவீன தாராளவாத கொள்கைகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் தனியாரின் லாப நோக்கத்திற்கு தீனி போடுவதாக இருக்குமேயன்றி நுகர்வோருக்கு எவ்வித பலனையும் அளிக்காது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணா-கோதாவரி படுகையில் முகேஷ்அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்திடும் இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்கான விலையை அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலையின் அடிப்படையில் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு நடப்பிலுள்ள ஐந்தாண்டு ஒப்பந்தம் வருகின்ற மார்ச் 31ல் முடிவடைகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனமானது, புதிய ஒப்பந்தத்திற்கான முன்மொழிவில் இயற்கை எரிவாயுவின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இந்த விலை அனுமதிக்கப்பட்டால் இயற்கை எரிவாயுவின் விலை, ஏற்கனவே அரசின் அனுமதியுடன் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையான எம்எம்பிடியு ஒன்றுக்கு8.3 டாலர் என்பதனை விட 10 சதவீதம் கூடுதலாக இருக்கும். இத்தகைய அதிரடியான விலையேற்றம் ஏன் என்ற கேள்விக்கு விடை தேடும்பொழுது உண்மை அம்பலமாகிறது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தில் எரிவாயுவின் நிகர கலோரி மதிப்பின் மீது அரசு நிர்ணயம் செய்த விலையில் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால், புதிதாகக் கையெழுத்திடப்படவேண்டிய ஒப்பந்தத்தில் மொத்த கலோரி மதிப்பின் மீதான கணக்கீடாக இது தன்னிச்சையாக ரிலையன்ஸ் நிறுவனத்தால் மாற்றப்பட்டுள்ளது. ரிலையன்சின் இத்தகைய அதிரடி அறிவிப்பு மத்திய உர அமைச்சகத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உர குழுமம் தனது கவலைகளை தெரிவித்து உர அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. யூரியா உரத்தின் உற்பத்தி விலையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் எரிவாயுவின் விலையாகும். இந்நிலையில் ஒரு எம்எம்பிடியு எரிவாயுவின் விலை ஒரு டாலர் அதிகரிக்கும்போது யூரியாவின் உற்பத்தி விலை ஒரு டன்னுக்கு ரூ.1,369 அதிகரித்திடும்.
அப்படியானால், எரிவாயுவை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 18 மில்லியன் டன் யூரியாவிற்கான உற்பத்திச் செலவு ரூ.2,465.1 கோடி அதிகரித்திடும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதே எரிவாயு வணிகத்தில் பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி நிறுவனமும், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றன. எரிவாயுவின் நிகர கலோரிமதிப்பின் மீதே இவை கட்டணத்தை நிர்ணயம்செய்கின்றன. இவை இரண்டும் பொதுத்துறை நிறுவனங்களாக இருப்பதால் இது தொடர்பானஅரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகின்றன. ஆக, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுயநலமே இந்த விலையேற்றத்திற்கு காரணமாகும். இந்த விலையேற்றத்தால் அம்பானியின் கஜானா நிறையும். ஆனால், ஏற்கனவே விதைக்கும், இடுபொருட்களுக்கும் செலவு செய்த தொகை கூட விளைவித்த பொருளுக்கு விலையாகக் கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் கழுத்துச் சுருக்கை மேலும் இறுக்குவதாகவே ரிலையன்சின் இந்த விலையேற்றம் இருக்கும்.


Sunday 23 March 2014

SOCIETY RGB ELECTION AGENT/COUNTING AGENT FORMATSOCIETY RGB ELECTION AGENT/COUNTING AGENT FORMAT
Read | Download

பாளையங்கோட்டை கிளை

BSNL ஊழியர் சங்கம்
      பாளையங்கோட்டை கிளை
ஆண்டு தோறும் சங்கஅமைப்பு தினம்..மாவீரன் பகத்சிங் நினைவு .தினம்..கிளை மாநாடு எண முப்பெரும் விழாவாக 12 ஆண்டுகல் தொடர்ந்து நடதுகின்ரனர்.  22/03/2014 அன்று ..கிளை மாநாடு நடைபெற்றது அதில் ....சிறப்புரை. வாழ்த்துரை வழங்கிய தோழர்கள்........மாவீரன் பகத்சிங் நினைவு தினம்
மார்ச் 23, 2014
டங்க மறு , அத்து மீறு இன்று அரசியலில் எல்லோரும் அறிந்த பிரபலமானவாசகம். இதை இந்தியாவிற்கு முதலில் சொன்ன மாவீரன் பகத் சிங் . இன்றுஅவன் தூக்கிலிடப்பட்ட நாள் .இந்திய விடுதலைப் போராட்டம்என்கிற மாபெரும் கடலில் ஒரு அலைதான் பகத் சிங். சாதாரண அலை அல்ல. ஆழிப் பேரலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட வந்த மாபெரும் அலை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்குலாப் ஜிந்தாபாத் என்று ஓங்கி ஒலித்த பகத் சிங்கின் முழக்கத்தைப் போல ஒரு குரலை அதற்கு முன்பு அந்த நாடாளுமன்றம் கேட்டிருக்கவில்லை. 


 ம்மில் பலருக்கு ஞாபக மறதி அதிகம். அதனால்தான் ஒரு வீரனின் தியாகம் மறக்கப்பட்டு விட்டது. நாமே மறந்துவிட்ட ஒன்றைநாம் எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் ? நம் முந்தைய தலைமுறைநமக்கு இதை சொல்ல மறந்ததால்தான் நாம்   சூடு,சுரணை ,மானம் ,வெட்கம் எல்லாம் மறந்து வேடிக்கை மனிதர்களை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அவரது கதை ஆயிரமாயிரம் முறை பேசப்பட்டுவிட்டதுஎன்றாலும், அவரது தியாகத்தை நினைவு கூறும்வகையில் மீண்டும் ஒரு முறை பேசுவோம்.

ந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்.

சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்


ளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.

வரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் ” Hindustan Socialist Republican Army (HSRA)” என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார்.

வர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.
நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட்ரிபப்ளிகன் ஆர்மி’-யின் துண்டுப் பிரசுரம் இப்படிச் சொல்கிறது:
னித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.

ரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல. அது ஒரு பாடம். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு அதன்வழி நடக்கவேண்டிய ஒரு பாடம்.
ரு சேகுவேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங். 


ன்றைக்கும் இந்தியாவில், எத்தனையோ இளைஞர்களுக்கு, சமூகச் சீர்கேடுகளைக் களையப் போராடும் இளைஞர்களுக்கு பகத் சிங்தான் ரோல் மாடல் அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.


Friday 21 March 2014

BSNLEU உதயதின கொடியேற்ற கொண்டாட்டம். . . அருமைத்தோழர்களே!நமதுபகுதி,தபால்-தந்திதுறையாக,டெலிகாமாக,BSNL நிறுவன பொதுத் துறை யாக,ஊழியர்கள் விருப்பத்திற்கு எதிராக மாற்றம் செய்த போது BSNL பகுதியில் பணிபுரியும்அனைத்து  ஊழியர்களுக்கும்  விடி வெள்ளியாக மார்ச்-22ல்   விசாகபட்டினத்தில் உருவானது தான் நமது பெருமை
மிகு   BSNL EMPLOYEES UNION அமைப்பாகும்.
·                                BSNLEU-உருவானபிறகுதான் விரிந்து  பரந்த அதிகாரிகள்+ஊழியர்கள் ஒற்றுமை உருவாக்கப்பட்டது.
·                                 BSNLEU - உருவானபிறகுதான் பங்கு விற்பனைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி தடுக்கப்பட்டுள்ளது.
·                                 BSNLEU - உருவானபிறகுதான் 1 லட்சம் ஊழியர்கள் VRS என்ற அரசின் ஊழியர் விரோத திட்டத்தை தடுக்கமுடிந்துள்ளது.
·                                BSNLEU - உருவானபிறகுதான் புதிய பதவி உயர்வு திட்டம் உருவாக்கப் பட்டு அமல்படுத்தப்பட்டது.
·                                BSNLEU - உருவானபிறகுதான் புதிய சம்பள மாற்றம் உருவாக்கப்பட்டு 30% உயர்வு அமல்படுத்தப்பட்டது.....
 இப்படி பல்வேறு சாதனைகளை படைத்த நமது சங்கத்தின் அமைப்பு தினத்தை கொண்டாடும் வகையில்22.03.2014 அன்றுநமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் சங்க கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய்,நமது திருநெல்வேலி மாவட்ட சங்கம் அறைகூவல் விடுக்கிறது.


Wednesday 19 March 2014

கூட்டுறவு சங்க வேட்பாளார்கள்
 நம து சங்க கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்வீர். 
ஊழலுக்கு  முடிவுகட்டுவீர் !          . ஊழியர் நலன் காப்பீர் !