Thursday 3 October 2013

பணியிடங்களில் பாலியல் வன்முறைகள் : சட்ட விதிகளை அமுலாக்குக!



பணியிடங்களில் பாலியல் வன்முறைகள் : சட்ட விதிகளை அமுலாக்குக!
உழைக்கும் பெண்கள் மாநாடு வலியுறுத்தல்

பணியிடங்களில் பெண்களுக்குஎதிரான பாலியல் வன்கொடுமை களை தடுக்கும் விதமாக சட்டவிதிகளை முழுமையாக அமல் படுத்த வேண்டும் என அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு(சிஐடியு)வின் தேசிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.
உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழுவின் அகில இந்திய மாநாடு ஒடிசா மாநிலம் பூரியில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில், 2013 டிசம்பர் 12 அன்று அனைத்து தொழிற்சங்கமும் இணைந்து அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பது என்றும் இடதுசாரி கட்சிகளின் மூன்றாவது மாற்று அணிக்கு ஆதரவளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.மேலும், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்; பெண்களுக்கான 33சதவீத இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவர வேண்டும்;
பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; 44வது, 45வது ஐஎல்ஓ பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்;அனைவருக்கும் பயன்படும் வகையில் உணவுப்பாதுகாப்பு மசோதாவை திருத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இடதுசாரிகளுக்கு எதிராக மேற்குவங்கத்தில் நடைபெறும் திரிணாமுல் ஆட்சியின் அட்டூழியங்களைக் கண்டித்தும் வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராகவும் விவசாய நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தியும் சமூகத்தில் நிலவும் வன்கொடுமைகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு : மாநாட்டில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் அகில இந்திய அமைப்பாளராக டாக்டர் கே.ஹேமலதா, பொருளாளராக ரஞ்சனா நிருலா உறுப்பினர்களாக ஏ.ஆர்.சிந்து, எஸ்.வரலட்சுமி, ரோஜா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலருந்து மாலதி சிட்டிபாபு, டி.ஏ.லதா, எம்.பகவதி, எம்.மகாலட்சுமி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மாநாட்டில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி. பேசினார்.

No comments:

Post a Comment