35 உலகத் தலைவர்களை உளவு பார்த்த அமெரிக்கா
புதிய அதிர்ச்சித் தகவல் வெளியீடு
புதிய அதிர்ச்சித் தகவல் வெளியீடு
வாஷிங்டன், அக்.25-தனி மனிதர்களின் உரிமைகளுக்கான காவலன்
என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கா, உலகின் மிக முக்கியமான 35 தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்ட தகவல்கள் தற்போது வெளியாகி
உள்ளன.
பேஸ்புக், யாகூ, கூகுள் போன்ற சமூக வளையதளங்கள், இணையதளங்கள் மூலம் அமெரிக்க நாட்டின்
உளவுத்துறையான தேசிய பாதுகாப்பு முகமை (என்எஸ்ஏ) உளவு பார்த்த தகவலை அந்த உளவு
நிறுவனத்தின் ஊழியரான எட்வர்ட் ஸ்னோடேன் அம்பலப்படுத்தினார். இத்தகவல் உலகம்
முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தவே, பல்வேறு உலக நாடுகள் அமெரிக்காவிற்கு
கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக, தனிநபர் ரகசியங்களை உரிமையாக கருதும் அமெரிக்க மக்கள் என்எஸ்ஏவின் தனிநபர்
ரகசியங்கள் ஒட்டுகேட்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.இதனால், உலக நாடுகள் மட்டுமின்றி தன்நாட்டு
மக்களிடமும் கூனிக்கூறுகிய அமெரிக்க அரசு எர்வர்ட் ஸ்னோடேனை கைது செய்யும்
நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது.
இதையடுத்து
அவர் ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்திற்கு சென்று அங்கேயே தஞ்சம் புகுந்தார். அதேநேரம், அமெரிக்காவின் சுயரூபத்தை
தோலுரிக்கும் விதத்தில் பல்வேறு உளவு ரகசியங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, பிரிட்டன், பிரான்சு நாட்டு மக்களின் பல்வேறு
தொலைப்பேசி தகவல்கள் அமெரிக்க புலனாய்வுத் துறையான என்எஸ்ஏ அமைப்பால்
ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்து தகவல்கள் வெளியாகி அந்நாடுகளின் கடும் எதிர்ப்பை
அமெரிக்க சந்திக்க வேண்டியதாகியது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஜெர்மன்
நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லின் தொலைப்பேசி உரையாடல்கள் அனைத்தும்
ஒட்டுக்கேட்கப்பட்டன என்ற தகவல் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெர்மன், அமெரிக்காவின் ஒட்டுக்கேட்பு
நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. மேலும், இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க
வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இதையடுத்து, இருநாடுகளுக்கிடையேயான ராஜ்ய உறவுகள்
கடுமையாக பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவிய நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லை
தொடர்பு கொண்டு, ஒட்டுகேட்பு
நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்து, இனிமேல் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட
மாட்டோம் என உறுதியளித்தாக கூறப்படுகிறது.இந்நிலையில், உலக நாடுகளில் மிக முக்கியமான 35 நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட 200 பேரின் தொலைப்பேசி உரையாடல்களை
அமெரிக்காவின் என்எஸ்ஏ ஒட்டுகேட்டது என்ற தகவலை எர்வர்டு ஸ்னோடென் தற்போது
அம்பலப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பிரபல ஆங்கில செய்தித்தாளான கார்டின், ஸ்னோடென் தெரிவித்ததாக ஒரு செய்தியை
வெளியிட்டுள்ளது.இதில் உலகில் மிக முக்கிய நபர்களாக கருதப்படும் 35 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 200 விஐபி-களின் தொலைபேசிஉரையாடல்களை என்எஸ்ஏ
ஒட்டுக்கேட்டு தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்தது.
இதுகுறித்த
உத்தரவுகள் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை
வட்டாரங்கள் மற்றும் ராணுவ மையமான பென்டகனில் இருந்து வந்ததாக அவர்
கூறிப்பிட்டுள்ளதாக கார்டியன் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில்
கூறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்டதாக
கூறப்படும் 35 நாடுகளின்
தலைவர்களின் பெயர்கள் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment