Saturday, 12 October 2013

மாண்சாண்டாவிற்கு எதிராக உலகம் முழுவதும் பேரணி

மாண்சாண்டாவிற்கு எதிராக உலகம் முழுவதும் பேரணி

மரபணு மாற்றம் செய்யப்பட்ட நச்சுக்கொல்லி விதைகளை உலகம் முழுவதும் பரப்பி மனித இனத்திற்கு தீங்கு விளைவித்து வரும் மாண்சாண்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமையன்று 52 நாடுகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் கண்டன பேரணிகள் நடைபெற்றன.
அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், விதைகளை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் மாண்சாண்டா. இந்நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை பயன்படுத்துவதால் விளைச்சல் பன்மடங்கு அதிகரிக்கும் என கூறப்பட்டது. மேலும், இந்நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளில் உள்ள அரசு உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருந்ததால் வளர்ந்த, வளரும் நாடுகள் என்ற வேறுபாடுகளின்றி உலகின் பல்வேறு நாடுகளில் தனது சந்தையை விரிவுபடுத்தியது.இந்நிலையில், இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை விளை நிலங்களில் பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
குறிப்பாக, மாண்சாண்டா நிறுவனம் அளிக்கும் விதைகளை கொண்டு பயிரிட்ட இடங்களில் மாற்றுப் பயிரை விளைவிக்க முடியாத சூழல்ஏற்பட்டது. மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களிலிருந்து விதைகளை உற்பத்தி செய்ய முடியாது என்ற நிலையில் அடுத்த விளைச்சலுக்கு மாண்சாண்டா நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.அதேநேரம், இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களினால் பல்வேறு சுற்றுச்சுழல் சீர்கேடுகள் ஏற்பட்டன. மண்ணின் தன்மையையே மாண்சாண்டா நிறுவனத்தின் பயிர்கள் மாற்றியிருந்ததுதெரியவந்தது. மேலும், இப்பயிர்கள் மற்றும் தானியங்களை உணவாகக் கொண்ட மக்களுக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டன.
இப்பயிர்களை தொடர்ச்சியாக உண்டு வந்தவர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகினர். இவர்களின் ஆயுல்காலம் கணிசமாக குறைந்திருந்ததும் தெரியவந்தது. இவற்றிலும் மிகக்கொடூரமாக இப்பயிர்களை உணவாக பயன்படுத்தியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைபாடுகள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் பிறந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாண்சாண்டா நிறுவனத்திற்கு எதிராக உலகம் முழுவதும் கடும் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அறிவியல் அறிஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும்இடதுசாரி கட்சியினர் உள்ளிட்டோர் இப்பயிர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என தொடர்ந்துவலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்நிறுவனம் தனது உற்பத்திப் பொருட்களை உலகம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், மாண்சாண்டா நிறுவனத்திற்கு உலகம் தழுவிய எதிர்ப்பு இயக்கங்கள் சமூகவலைதளங்கள் மூலம் முன்னெடுத்து செல்லப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 25ம் தேதியன்று சுமார் 20 லட்சம் மக்கள் கலந்து கொண்ட மாபெரும் எதிர்ப்பு பேரணிகள் உலகின் 52 நாடுகளில் உள்ள 436 நகரங்களில் நடைபெற்றன. இப்போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக சனிக்கிழமையன்று 6 கண்டங்களைச் சேர்ந்த52 நாடுகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட இடங்களில் மாண்சாண்டா எதிர்ப்பு பேரணிகள் மற்றும் மாண்சாண்டா அலுவலகங்கள் முற்றுகையிடுவது உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கான ஆதரவு இயக்கங்கள் அனைத்தும் பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. மாண்சாண்டா நிறுவனத்தின் தலைமையகமான அமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டன், நியூயார்க், அலாஸ்கா, கலிபோர்னியா, வடக்கு கரோலின், நியூ ஜெர்சி, டெக்சாஸ் உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள 100க்கும் மேற்பட்ட இடங்களில் மாண்சாண்டாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள், பேரணி உள்ளிட்ட இயக்கங்கள் நடைபெற்றன. மேலும், கனடா நாட்டின் அல்பெர்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, அண்டாரியோ, கியூபெக் உள்ளிட்ட அந்நாட்டின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவில் புதுதில்லி, திருவனந்தபுரம், சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதேபோல், இங்கிலாந்து நாட்டின் லண்டன், எடின்பெர்க், நார்விச், பிரிஸ்டோல் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள பெர்த், மெல்பெர்ன், கன்பரோ, பிரிஸ்பென், அலெய்டா, விக்டோரியா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ளபல்வேறு இடங்களில் மாண்சாண்டா எதிர்ப்பு பேரணிகள் நடைபெற்றன.மேலும், அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சைபிரஸ், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஈக்வேடார், கானான, கிரீஸ், இத்தாலி, நியூசிலாந்து உள்ளிட்ட உலகம் முழுவதும் மாண்சாண்டாவிற்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


No comments:

Post a Comment