Thursday 3 October 2013

ஒ......ஒ அமெரிக்க .........ஒ.....ஒபாமா


அதிகரிக்கும் நெருக்கடி : அமெரிக்க உளவுத்துறை கடும் பாதிப்பு






-
அமெரிக்கவில் தற்போது ஏற்பட்டிருக்கம் நிதி நெருக்கடியின் காரமாக அந்நாட்டின் பெடரல் அரசின் ( மத்திய அரசின்) அலுவலகங்களில் அத்தியாவசியமில்லாத அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க உளவுத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய 70 சதவிகிதம் பேர் விடுப்பில் அனுப்பபட்டனர். அமெரிக்காவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் கடன் உச்ச வரம்பை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கான மசோதா பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டது. அப்போது குடியரசு கட்சியினர் கடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கு அனுமதிக்க முடியாது. அதற்கு பதிலாக ஒபாமா கேர் திட்டத்திற்கு கூடுதல் நிதிஒதுக்குவதை நிறுத்த வேண்டும் என கோரியது. இதனை ஒபாமாவின் ஜனநாயக கட்சி ஏற்கவில்லை. இந்நிலையில் குறிப்பிட்ட காலம் கடந்ததால் அக்டோபர் 1 முதல் அந்நாட்டில் ஷட் டவுன்( இழுத்து மூடல் ) அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா முழுவதும் உள்ளஅத்தியாவசிய அரசு நிறுவனங்களைத் தவிர மற்ற அரசு நிறுவனங்களை மூடவெள்ளை மாளிகைஉத்தரவிட்டது. இதனால் 8 லட்சம் அரசுஊழியர்கள் சம்பளம்இல்லாமல்கட்டாய விடுப்பில்அனுப்பப்பட்டனர். இப்போதுஅமெரிக்க உளவுத்துறையான தேசிய புலனாய்வு நிறுவனத்தில் பணியாற்றும் 4 ஆயிரம் கம்ப்யூட்டர் நிபுணர்கள் உள்பட 70 சதவிகிதம் பேர் கட்டாய விடுப்பில்வீட்டுக்கு அனுப்பபட்டுள்ளனர். இதனால் ராணுவத்துக்கு உதவும்உளவுப்பணி, தூதரக உளவுப்பணி, எம்.பி.களுக்கான உளவுபணிஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு நிறுவன இயக்குநர் ஜெம்ஸ் கிளப்பர் தெரிவித்தார்.இது பற்றி அமெரிக்க ராணுவதலைமை தளபதி ரே ஒர்டினோ கூறும்போது, இதே போன்ற நெருக்கடி முதன் முதலில் அமெரிக்காவில் கடந்த 1996-ம் ஆண்டுஏற்பட்டது. அதன் பாதிப்பு ராணுவத்தின்தினசரி செயல்பாட்டிலும் எதிரொலித்தது.
நீண்ட நாள்களுக்குபிறகு இப்போது மீண்டும்பட்ஜெட் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற 8 லட்சம்அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் விடுப்பில் அனுப்பப் பட்டுள்ளனர். இதனால் மனிதசக்தியும், திறமையும் வீணடிக்கப்படுகிறது. தற்போது வெளிநாடுகளில் அமெரிக்க ராணுவத்தில் உள்ள போரில் ஈடுபடாத வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.இந்த நிலையில் ஒபாமாவின் கெல்த் கேர் திட்டத்துக்கு முக்கியஎதிராளியான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெட் குரூஸ்கூறும்போது,ராணுவம் மற்றும்பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு, கட்டாய விடுப்பில் செல்வதில் இருந்து விலக்கு அளிக்க பிரதிநிதிகள் சபையில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்படும். போது மான நிதி இல்லாமல் உளவுத்துறை இப்போது நெருக்கடியில் உள்ளது. இதனால் இறைவன் தடுக்கா விட்டால் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட லாம் என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment