Monday, 14 October 2013

அமெரிக்காவில் ஒபாமாவுக்கு எதிராகப் போராட்டம் வலுக்கிறது




அமெரிக்காவில் ஒபாமாவுக்கு எதிராகப் போராட்டம் வலுக்கிறது
வெள்ளை மாளிகையை நோக்கி ஊர்வலம் - தடியடி


-அமெரிக்காவில் ஒபாமாவுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. வெள்ளை மாளிகையை நோக்கிஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள் .இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அதிபர் ஒபாமா, அத்தியாவசியமான அரசு அலுவலகங்களை தவிர மற்ற அரசு அலுவலகங்களை மூட உத்தரவிட்டார். கடந்த 1-ம் தேதி முதல் அவற்றில் வேலை பார்த்த லட்சக்கணக்கான ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.அவர்கள் கோபம் இப்போது போராட்டமாக உருவெடுத்துள்ளது. அவர்கள் ஒபாமாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.தலைநகர் வாஷிங்டனில் அதிபர் ஒபாமா மாளிகை அருகில் உள்ள 2-வது உலக போர் நினைவு திடல் அருகில் போராட்டக்காரர்கள் கடந்த திங்கள்கிழமை திரண்டனர். அவர்கள் வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பேரணியாக புறப்பட்டனர். அவர்கள் ஒபாமாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி முன்னேறினார்கள். அவர்கள் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் சிலர் காயம் அடைந்தனர்.
ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இது பற்றி வெள்ளை மாளிகை முன்புபோராட்டக்காரர் ஒருவர் கூறும்போது, இது ஜனநாயக கட்சிகாரர்களுக்கும்,குடியரசு கட்சிகாரர்களுக்கும் இடையிலான பிரச்சனை. இதில் அரசு ஊழியர்களான நாங்கள் சிக்கி வேலையில்லாமல்,பணத்தை இழந்து தவிக்கிறோம். இந்த நிலையை மாற்ற இரு கட்சியினரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment