வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
இந்திய எல்லைக்குள் நுழைந்து பாகிஸ்தான் ராணுவத்தினரின் துணையுடன் பயங்கரவாதி கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத் தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் கொல்லப்பட் டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தகைய அத்துமீறல்களை, அட்டூழியங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்திய எல்லைக்குள் நுழைந்து நடத்தப் பட்ட தாக்குதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், அவரது அமைச்சகமும் முரண்பட்ட தகவல்களை தந்துள்ளது நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக் கையில், பயங்கரவாதிகளைப் போல உடை யணிந்து வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக அந்தோணி கூறியுள்ளார்.
ஆனால் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறி யுள்ளனர். இத்தகைய பிரச்சனைகளில் முழுமையான ஆய்வுக்குப் பிறகே கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். மாறாக அவசரக் கோலத்தில் அள் ளித்தெளிப்பது போல செயல்படுவது நல்லதல்ல. பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துள் ளது. எனினும் இந்திய-பாகிஸ்தான் நாடுகளி டையே ஒருபோதும் நல்லுறவு ஏற்படக்கூடாது, பதற்றம் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் சக்திகள் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பது உறுதி.
பாகிஸ்தானில் புதிய பிரதமராக பொறுப்பேற்ற நவாஸ் ஷெரீப் இருதரப்பு நல்லுறவுக்கு தமது அரசு முன்னுரிமை கொடுக்கும் என்று கூறி யிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அரசியலில் தொடர்ந்து ராணுவத்தினரின் ஆதிக்கம் இருந்து வருகிறது. ராணுவத்தின் ஆசியோடு பயங்கர வாதிகள் ஊடுருவுவது தொடர்ந்து நடந்து வரு கிறது. இத்தகைய அணுகுமுறைகள் எல்லை யில் அமைதியைப் பேண ஒருபோதும் உதவாது. பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பிரச்சனையை மதவெறி நோக்குடன் அணுகு வது ஆரோக்கியமானதல்ல. இந்திய எல்லை யில் நடைபெறும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பாஜகவைப் பொருத்தவரை இதற்கு ஒரு மதச் சாயம் பூசி வெறுப்பு அரசியலை வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக காலாவதியாகிப்போன பாஜகவுக்கு இத்தகையப் பிரச்சனைகள் வெறும் வாயை மெல்லுபவருக்கு அவல் கிடைத்தது போல ஆகி விடுகிறது. சீனாவுக்கு எதிராகவும் வெறுப்பைத் தூண்டும் வகையில் இத்தகைய பிரச்சாரம் ஒரு பகுதி ஊடகங்களாலும், ஒருசில கட்சிகளாலும் மேற்கொள்ளப்படுகிறது. அண்டை நாடுகளுடன் நல்லுறவையும், நட்புறவையும் பேணுவதற்கே இந்தியா முன் னுரிமை கொடுத்து வந்துள்ளது.
இதை அந்த நாடுகளும் புரிந்துகொள்ள வேண்டும். இப் போதுள்ள சூழ்நிலையில் ஆசிய பிராந்தியத்தில் அமைதி நிலவுவதே சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் உதவுவதாக அமையும். மோதல் கள், ஊடுருவல் போன்ற அணுகுமுறைகள் யாருக்கும் பயன்தராது. இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும். பயங்கர வாதிகளை ஊக்குவிப்பது அந்த நாட்டிற்கே ஆபத்தாக முடியும் என்பதே கடந்தகால அனுபவமாகும்.
No comments:
Post a Comment