Thursday 29 August 2013

78.2விழுக்காடு பஞ்சப்படி கேட்டு பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர்கள் தர்ணா





78.2விழுக்காடு பஞ்சப்படி கேட்டு பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர்கள் தர்ணா


சென்னை, ஆக. 29 -
ஓய்வூதியர்களுக்கும் 78.2 விழுக்காடு பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண் டும் என்று வலியுறுத்தி அகில இந்திய
 பிஎஸ்என்எல்- டெலிகாம் துறை (டிஓடி) ஓய்வூதியர் சங்கம் சார்பில் வியாழனன்று (ஆக.29) தமிழ கம் முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.புதிய பென்சன் மசோ தாவை திரும்ப பெற வேண் டும், டிஓடி ஓய்வூதியர் களுக்கு மாதம் 1200 ரூபாய் மருத்துவப்படி வழங்க வேண் டும், பிஎஸ்என்எல் ஓய்வூதி யர்களுக்கு நிறுத்தப்பட்ட மருத்துவப்படியை மாதந் தோறும் திரும்ப வழங்க வேண்டும்; ஆண்டு வரம்பு, புதிய சம்பளத்தில் 30 நாட் களாக உயர்த்த வேண்டும்.
பிஎஸ்என்எல்-லில் இருந்து 1.10.2000 முதல் 31.7.2011 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு உள்ள ஓய்வூதியக் குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.இறுதியாக பெற்ற ஊதியத்தில் 60 விழுக் காட்டை ஓய்வூதியமாக வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை குறைந்தபட் சம் 3880 ரூபாயாக உயர்த்த வேண்டும், இறுதிச்சடங்கு நிதியாக 15ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், டிஓடி ஓய்வூதியர்களுக்கு பிராட் பேண்ட் சலுகை நீட்டிக்க வேண்டும், ஓய்வூதியர் களுக்கு குடியிருப்பு வாடகை, அடிப்படை ஊதியத்தில் 10விழுக்காடு என நிர்ண யிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற் றது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, ஈரோடு, வேலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, காரைக் குடி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் தர்ணா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலையில் உள்ள பிஎஸ்என்எல் தமிழ்மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு டி.கோதண்டம், பி.சுப்பிர மணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளர் சி.கே. நரசிம்மன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
அகில இந்திய அமைப்புச் செயலா ளர் கே.ஆறுமுகம், பிஎஸ் என்எல்இயு மாநிலச் செய லாளர்கள் எஸ்.செல்லப்பா (தமிழ்மாநிலம்), கே.கோவிந் தராஜ் (சென்னை தொலை பேசி), அகில இந்திய துணைத் தலைவர் புனிதா உதய குமார், மத்திய அரசு பொதுத் துறை ஓய்வூதியர் சங்க ஒருங் கிணைப்பாளர் ஏ.சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். ஏ.சாய்ராம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment