Tuesday 13 August 2013

திக்கெட்டும் எட்டட்டும் சமநீதி


திக்கெட்டும் எட்டட்டும் சமநீதி
- பி. சுகந்தி மாநில பொதுச் செயலாளர், ஜனநாயக மாதர் சங்கம்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கெதிராக மாதர் சங்க மாநிலச் செயலாளர் கே.வனஜா, கோவை மாவட்டச் செயலாளர் ஏ. ராதிகா, நாகை மாவட்டச் செயலாளர் ஜி.கலைச்செல்வி, தலைவர் டி.லதா உள்ளிட்டோர் தலைமையில் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து புறப்பட்ட பிரச்சார பயணக்குழுவிற்கு மயிலாடுதுறை, குத்தாலம், ஆழம்பாடி, சங்கரன்கோவில், சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பங்கேற்றனர்.
உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத 5 நாடுகளில் இந்தியா 4ம் இடத்தில் இருக்கிறது என்பது வெட் கக்கேடான விஷயம். சமீபத்தில் ஜனநாயக மாதர் சங்கம் இளம் பெண்களிடம் நடத்திய ஆய்வில் திருமணமானவர்களில் 33 சதவீதம் பேர் காதல் மணம் புரிந்து கொண்டவர்கள். ஆனால் இதில் ஏராளமானோர் தன் பெற் றோரின் சம் மதம் கிடைக்காமல் தங்கள் காதல் வாழ்க்கையைத் துவங்கியுள்ளார் கள். பெண் குடும்பம், மற்றும் சாதி கௌர வத்தை பாதுகாப்பவளாக பார்க்கப்படுகி றாள். பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வ தை ஏற்றுக் கொள்ள முடியாத சில ஆணாதிக்க அரசியல் சக்திகள் கொலை வெறி அரசியலை தமிழகத்தில் நடத்தி வருகின்றன.
அரசியல் நாடகம் நடத்தும் இவர்கள் அனைத்து காதலையும் நாட கக் காதல் என கூப்பாடு போடுகிறார் கள். திவ்யா-இளவரசன் காதலையும் நாடகக்காதல் எனக் கூறி மூன்று கிரா மங்களை எரித்தனர். அன்று அவர்கள் பற்றவைத்த ஜாதிய “தீ” இளவரசனை கொன்று திவ்யாவையும் அணு அணுவாகச் சித்ரவதை செய்கிறது. மற்றொரு புறம் காதலிக்க மறுக்கும் இளம் பெண்கள் தாக்கப்படுவது, படு கொலை செய்யப்படுவது முகத்தில் அமிலம் வீசி சிதைப்பது. வினோதினி... வித்யா... லட்சுமி இப்படி பட்டியல் நீள் கிறது. அமிலம் பெண்களுக்கு எதிரான ஆயுதமாக மாறி இருப்பது ஆபத்தானதே. அமில விற்பனையை நெறிப்படுத்தவும், அமில வீச்சில் இருந்து பெண்களை பாதுகாக்கவும் வலுவான சட்டங்கள் தேவைப்படுகிறது.
குடும்பமே வன்முறைக் களமாய் : திருமணமான பெண்களில் 37 பேர் கணவனால் உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறையை சந்திக்கிறார் கள். என கூறுகிறது ஒரு ஆய்வு. 10 பெண்கள் கணவனால் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். குடி போதை பெரும்பான்மையான குடும்ப வன்முறைகளுக்கு வித்திடுகின்றன. ஆனால் அரசே அதை லாபம் தரும் தொழிலாக செய்து கொண்டிருக்கிறது.மனைவியை அடிப்பது, எலும்பை முறிப்பது, முடியை இழுத்து அடிப்பது இதைத்தாண்டி அவளதுஉறவினர்களை இழிவாக பேசுவது, பலர் முன்பு கிண்டல் செய்வது போல் இழிவுபடுத்துவது. குடும்ப பராமரிப்புகக்கு பணம் தர மறுப்பது இவையெல்லாம் கூட வன் முறைகளாக உணர முடியாதவர்களாக பெண்கள் சகித்து கொள்கின்றனர். திருமணம் என்ற பந்தம் கணவனை பிரிந்து வாழ் வதை இழிவாக பார்க்கிறது. எனவே குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்க சட்டங்கள் வந்தாலும் சமத்துவபார்வையில்லை யெனில் இதை பயன்படுத்துவது சாத்தியமில்லை.
பாதுகாப்பற்ற பணியிடங்கள் : 1997 விசாகா தீர்ப்பின் வழிகாட்டுத லுக்குப்பின் பணியிடங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்கும் சட்டம் 15 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் கிடைத்துள்ளது. இதில் பணியிடமாக கல்விநிலையங்களும் இணைக்கப்பட் டுள்ளது. பணியிடங்களில் பாலியல் வன்முறைகளை சந்திக்கும் பெண்கள் அவற்றை புகார்களாக்க முனைவதில் லை. அப்படி புகாராக்கும் பெண்கள் ஒரு குற்றவாளியைப் போல இழிவாக பார்க் கப்படுகிறார்கள்.

ஆண்கள் எதிரியா? : பெண்களை பாதுகாக்கும் சட்டங் கள் எல்லாம் ஆண்கள் மீது பாய்வதாக சிலர் கூக்குரல் இடுகின்றனர். சட்டங் கள் காகிதத்தில் மட்டும் இருந்தால் போதாது, சமூகம் அதை பயன்படுத்த வேண்டும். காவல்துறை அதை முறை யாக பயன்படுத்த வேண்டும். பணியி டங்களில் பாலியல் வன்றையை தடுக் கும் சட்டம் குறித்து எத்தனை பேருக் குத் தெரியும்?எனவே தான், பெண்களையும், பெண் குழந்தைகளையும் வன்முறையி லிருந்து பாதுகாக்கவும், போதை பழக்க வழக்கத்திற்கு எதிராகவும் அனைவ ருக்கும் உணவு, சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் ஜன நாயக மாதர் சங்கம் ஆகஸ்ட் 13 முதல் 17 வரை தமிழகத்தில் குமரி, தேனி, நீலகிரி, நாகை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என 7 இடங்களில் இருந்து பிரச்சாரப் பயணம் புறப்பட் டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மூலை முடுக்குகளிலும் வன்முறைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கட்டும், ஆணாதிக்கம் அடியோடு தகரட்டும். வன்முறையற்ற சமூகம் படைக்க ஆணும் பெண்ணும் இணைந்து கரம் கோர்போம்.

No comments:

Post a Comment