மர்மச் சுரங்கத்தில்மறைந்த கோப்புகள்
நிலக்கரிச் சுரங்கத்தைத் தோண்டினால் நிலக்கரிதான் கிடைக்க வேண்டும். ஆனால் நிலக்கரிச் சுரங்கங்களுக்கான உரிமங்கள்
ஒதுக் கீடு விவகாரத்திலோ தோண்டத்தோண்ட விவ காரங்களாகவே வருகின்றன. முறைகேடுகளின் இன்றைய கட்டமாக,
அந்த ஒதுக்கீடுகள் தொ டர்பான முக்கிய கோப்புகள் “காணாமல் போய் விட்டன” என்ற செய்தி வந்தது.
நிலக்கரித் துறை அமைச்சரை விட்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வைத்து, எதிர்க்கட்சிகள் அதை ஏற்க மறுத்த
நிலையில் இப்போது மத்திய அரசு பிடிவாதத்தைக் கைவிட்டுள்ளது. இப்பிரச்சனை குறித்த விவாதங்களின்போது பிரதமர்
தலையிட்டு பதிலளிப்பார் என்று அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதை முதலிலேயே செய்திருந்தால் இந்தப் பிரச்சனையில்
நாடாளு மன்றம் இத்தனை நாட்கள் முடக்கப்பட்ட நிலைமை ஏற்பட்டிருக்காது.
பிரதமர் மன் மோகன் நிலக்கரித்துறை அமைச்சகப் பொறுப் பையும் ஏற்றிருந்த 2006 முதல் 2009ம் ஆண்டு வரையிலான
காலகட்டத்தில் ஒப்புதல் அளிக் கப்பட்ட உரிமங்கள் தொடர்பான கோப்பு கள் கணிசமாக மாயமாகிவிட்டன என்பதால் தான்
பிரச்சனையே எழுந்தது. ஆகவேதான் நாடாளு மன்றத்தில் அவரே பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள்
வலியுறுத்தின.ஆனால், கோப்புகள் எதுவும் காணாமல் போகவில்லை, இடம் மாறியிருக்கக்கூடும், ஒரு சாதாரணப்
பிரச்சனையை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பெரிதுபடுத்துகின்றன என்றே காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தார்கள்.
ஒன்று மில்லாத பிரச்சனை என்றால் அதை நாடாளு மன்றத்தில் வந்து சொல்வதில் பிரதமருக்கு என்ன தயக்கம்?
எதிர்க்கட்சிகளின் உறுதி யான நிலைப்பாட்டினால் இப்போது பிரதமர் தலையிடுவார் என்று அறிவிக்க வேண்டிய நிலை
ஏற்பட்டிருக்கிறது. முதலிலேயே இந்த நிலைப்பாட்டிற்கு அரசு வந்திருக்குமானால் நாடாளுமன்ற நேரம் வீணாகியிருக்காது.
தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) இந்த மெகா ஊழல் பற்றிய அறிக்கையை வெளியிட்டபிறகு,
உச்சநீதிமன்றம்தான் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டது. அமைச்சகத் திடமிருந்து குறிப்பிட்ட சில ஆவணங்களை சிபிஐ
கடந்த மே மாதமே கேட்டிருந்தது. ஆனால் அமைச்சகம் பதிலளிக்காமலே இருந் தது. மொத்தம் 225 வகையான
ஆவணங்களை கேட்டிருந்தது. அமைச்சகம் கொடுத்திருப்பதோ 68 ஆவணங்கள்தான். ஆக, எந்த ஆவணங் களைக் கொடுப்பது
எவற்றைக் கொடுக்காமல் இருப்பது என்று முடிவு செய்வதற்குத்தான் இழுத்தடிக்கப்பட்டதோ என்ற நியாயமான ஐயம்
எழுகிறது. இன்றைய டிஜிட்டல் பதிவு யுகத்தில், பழைய கோப்புகள் ‘காணோம்’ என்று சொல் லப்படுவதை யார் நம்பு வார்கள்?
ஆவணங் களை “மறுகட்டுமானம்” செய்ய - அதாவது திருத்தியமைக்க - அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக வந்த
செய்தியோடும் இதை இணைத்துப் பார்க்காமல் இருக்க முடி யாது.இந்த விவாதத்தில் பிரதமர் தலையிடுவார் என்று
இப்போதாவது அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான். அந்தத் தலையீடு “காணாமல் போன” ஆவணங்களை மீட்பது
தொடர்பாகத் திட்டவட்டமான நிலைகளைச் சொல்வதாக, வழக்கில் சரியான தீர்ப்பு வர உதவுவதாக இருக்க
வேண்டுமேயன்றி, பூசி மழுப்புகிற வேலையாகிவிடக்கூடாது.
No comments:
Post a Comment