Sunday, 18 August 2013

அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தினால் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடக்கும்



அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தினால் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடக்கும்
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் எச்சரிக்கை


மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 20வது பொது மாநாடு திருச்சி யில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.மாநாட்டிற்கு மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர்சங்கத் தலைவர் ஆர். ராஜேந்திரன் தலைமை வகித் தார். மாநாட்டில் வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைப்பொருளாளர் கே.வி.வி.எஸ்.என்.ராஜூ சிறப் புரையில் பேசியதாவது:மத்திய அரசு இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முத லீட்டை 49 சதவீதமாக உயர்த் தும் மசோதாவை நாடாளுமன் றத்தில் நிறைவேற்றும் பட்சத் தில் அதற்கு அடுத்த நாள் நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத் தம் நடைபெறும். இந்த வேலை நிறுத்தத்தில் 2 லட்சம் இன்சூ ரன்ஸ் ஊழியர்கள் பங்குகொள் வார்கள். மத்திய அரசின் தவ றான கொள்கையால் நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் நுகர்வு திறன் மிகவும் குறைந் துள்ளது. இதில் அதிகம் இன் சூரன்ஸ் நிறுவனங்கள் பாதிக் கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment