கண்காணித்துக்
கொண்டே இருக்க வேண்டும்
மத்திய தகவல்
மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் ரூ.1.76 லட்சம் கோடி
சூறையாடப் பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு, உச்சநீதிமன்றம் பல சந்தர்பங்களில்
கண்டித்தும் கூட, எந்த
அசைவுமின்றி ஆமை வேகத்திலேயே சென்று கொண்டிருக்கிறது. இது வழக்கின் மீதான
நம்பகத்தன்மையையே கேள் விக்குறியாக்கியிருக்கிறது.2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத் தில்
மத்திய அரசுக்கும், கார்ப்பரேட்
நிறுவனங் களுக்கும் அரசியல் தரகராக செயல்பட்டு வந்த நீராராடியாவின் உரையாடல்கள்
பதிவு செய்யப் பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால்
இதுநாள் வரை வருமான வரித்துறை யும், மத்திய
குற்றப்புலனாய்வுக் கழகமும் (சிபிஐ) அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க
வில்லை. நீராராடியா உரையாடல் தொடர்பான ஆவணங் களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து
உடனடியாக, விசாரணை
நடத்த வேண்டும் என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் குட்டுவைத்துள்ளது. அதே போல் 2004ம் ஆண்டு தகவல் மற்றும்
தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், ஏர்செல் நிறுவனத்தின் பங்கு களை தனக்கு
வேண்டிய மலேசியாவின் மேக் சிஸ் நிறுவனத்திற்கு கட்டாயப்படுத்தி விற்க செய்தார்.
அதன்
பிரதிபலனாக, மேக்சிஸ்
நிறு வனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ என்ற நிறுவனம், தயாநிதிமாறன் குடும்பத்திற்கு சொந்தமான
சன்குழுமத்தின் டிடிஎச் மற்றும் எப்எம் தொழிலில் ரூ.600 கோடி முதலீடு செய்தது என ஏர்செல்லின்
முதன்மை உரிமையாளர் சிவசங் கரமேனன் குற்றம் சாட்டியிருந்தார். அலைக் கற்றை
ஒதுக்கீட்டு வழக்கில் இடம் பெற்றுள்ள பல்வேறு தில்லுமுல்லுகளில் இதுவும் ஒன்று.
இந்த
விவகாரம் குறித்து ஏன் இன்னும் வழக் குப் பதிவு செய்யவில்லை? என உச்சநீதிமன்றம் சிபிஐயைக் குட்டியது.
அதன் பின்னர் பெயரள விற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2011ம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட
நிலை யில் இதுவரை இறுதியான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் தலை யிட்டு இரண்டு
மாதங்களுக்குள் விசாரணை யை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை யை தாக்கல்
செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் மத்திய
அரசு தற்போதுதான் நூறு சதவீத நேரடி அந்நிய முத லீட்டை அனுமதித்திருக்கிறது. அதற்கு
முன்பு 74 சதவீதம்
மட்டுமே அனுமதி வழங்கப்பட்டி ருந்தது.
ஆனால்
மேக்சிஸ் நிறுவனத்திற்காக 2006ம் ஆண்டே
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிமுறைகளை மீறி 99.30 சதவீதம் வரை முத லீடு செய்ய
அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகியிருக்
கிறது. உலகமயம் உள்ளூர் மயமாகி, ஊழல்மயமாக
பரிணாம வளர்ச்சியடைந்ததன் பிரதிபலனாக அரசு நிர்வாகமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து
கூட்டுக்கொள்ளையில் கொடிநாட்டி வருகின்றன. 2ஜி ஊழல்
வழக்கு முழுவதும் நவீன தாராளமயத்தின் வலைப்பின்னல் சேர்ந்தே வருகிறது. அதனால்தான்
இன்று உச்சநீதிமன் றம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண் டிய நிலை உள்ளது. நவீன
தாராளமயம் எந்த நேரத்திலும் இந்தியாவின் இறையாண்மையை யும் காவு வாங்கும் என்பதையே
இந்த வழக்கின் போக்கு உணர்த்துகிறது.
No comments:
Post a Comment