Saturday, 17 August 2013

குறைந்தபட்ச ஊதியம் வழங்காததால்வழக்குப் பதிவு - தண்டனை






குறைந்தபட்ச ஊதியம் வழங்காததால்வழக்குப் பதிவு - தண்டனை 
பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்


புதுதில்லி, ஆக.17-தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதில் ஏற்றத்தாழ்வு கள் இருந்ததால் வேலை யளிப்போர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண் டனை பெற்றுத் தரப்பட் டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நட ராஜன் கேட்டிருந்த கேள் விக்கு அமைச்சர் பதிலளித் துள்ளார்.
நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் 1948ஆம் ஆண்டு குறைந்த பட்ச ஊதியச் சட்டம் மீறப்பட்டு, தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்கு வதில் ஏற்றத்தாழ்வு காட் டப்பட்டிருக்கிறதா? கடந்த மூன்றாண்டுகளில் நாடு முழுவதும் மாநில வாரியாக அவற்றின் விவரங்கள் என்ன? 1948ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட் டம் திருத்தம் முன்மொழிவு எதுவும் அரசின் பரிசீலனை யில் உள்ளதா? அதன் விவ ரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு இணை அமைச்சர் கொடிகுன்னில் சுரேஷ், குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாதது குறித்து தவறிழைத்த வேலையளிப் போர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதன் விவரங்கள் கடந்த மூன்றாண்டுகளுக்கு மாநில வாரியாகத் தனியே தரப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் குறைந்தபட்ச ஊதியச் சட் டத்தில் திருத்தங்கள் மேற் கொள்வதற்கான முன் மொழி விற்கு மத்திய அமைச்ச ரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி முறைசாராத் துறையில் பணியாற்றும் தொழிலா ளர்களும் படிப்படியாக சமூகப் பாதுகாப்புத் திட் டங்களின் கீழ் கொண்டு வரப் படுவார்கள். இந்த அடிப்படையிலேயே ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா, ஆம் ஆத்மி பீமா யோஜனா, இந்திரா காந்தி தேசிய வயது முதிர்ந்தோர் ஓய்வூதியத் திட்டம் முதலா னவற்றை அரசு கொண்டு வந்திருக்கிறது. ஸ்தாபனப் படுத்தப்பட்ட துறையில் பணிபுரிவோருக்கு அனை வருக்குமான சமூகப் பாது காப்புத் திட்டங்கள் ஏற் கனவே அமலில் இருக்கின் றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றாண்டு களில் குறைந்தபட்ச ஊதி யச் சட்டத்தை மீறியது தொடர்பாக பதிவு செய் யப்பட்ட வழக்குகளைப் பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டில் 2009-10இல் 1 லட்சத்து 52 ஆயிரத்து 84 பேர் மீதும் 2010-11-ல் 1 லட் சத்து 76 ஆயிரத்து 530 பேர் மீதும் 2011-12-ல் 1 லட்சத்து 28 ஆயிரத்து 665 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருப்பது தெரியவரு கிறது.
theekkathir

No comments:

Post a Comment