Thursday 19 September 2013

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏன்? எதனால்? எப்படி?




ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏன்? எதனால்? எப்படி?

இந்தியா விடுதலை பெற்று 66 ஆண்டு கள் நிறைவு பெற்ற நாளன்று டாலருக்கு நிக ரான இந்திய ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பு 66க்கு வீழ்ச்சியடைந்துள்ளது எவ்வளவு பொருத்தமானது என்பது போல கிண்டலாக ஒரு நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.ஏன் இந்த திடீர் சரிவு? இதற்கான கார ணங்கள் என்ன? இதனை தவிர்த்திருக்க முடியாதா? நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருப்பதாக உலகமயவாதி கள் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தனரே அது என்னவாயிற்று என்பது போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.
டாலருக்கு நிக ரான இந்திய ரூபாயின் பரிவர்த்தனை மதிப் பில் ஏற்பட்டுள்ள அதல பாதாள வீழ்ச்சியை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டு மானால் நாடு விடுதலை பெற்ற நாளிலிருந்து ரூபாயின் பயணத்தை பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.1947க்கு முன்னர் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாயாக இருந்தது. 1952ல் ஒரு டாலர்=ரூ4.79 என நிர்ணயிக்கப்பட்டது. 1966ல் ரூபாயின் மதிப்பை ரூ7.57 என்ற அளவுக்கு குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசே வெளி யிட்டது. உலக வங்கியின் நிர்ப்பந்ததுக்கு அடிபணிந்து அந்த அறிவிப்பை வெளியிட்ட அன்றைய நிதி அமைச்சர் சச்சின் சவுத்ரி அந்நிய முதலீடு களுக்காக இந்தியத் தாய் தனது கருவறை யைத் திறந்து வைத்துள்ளதாக வெட்கக் கேடான முறையில் குறிப்பிட்டதானது நாடு தழுவிய கண்டனத்தை ஏற்படுத்தியது.1975ம் ஆண்டில் அமெரிக்க டாலர் ஜப்பானிய யென் ஜெர்மன் மார்க் ஆகிய மூன்று நாணயங் களின் பரிவர்த்தனை மதிப்புடன் இந்திய ரூபாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. 1993ல் தாராளமயக் கொள்கையின் அடி யொற்றி பரி வர்த்தனை மதிப்பினை பணச்சந்தை தீர் மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை தவிர்க்கும் விதத்தில் தலையிடுவதற்கான உரிமை ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டது.1995ல் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 32, 42 ஆக இருந்தது. 2000 முதல் 2010 வரை இது சற்றே குறையாக ரூ.45 என்ற நிலையில் இருந்து வந்தது.2013 ஆகஸ்டில் 50 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்து ஒரு டாலர்=68 என்ற நிலையி லான கடும் சரிவை எதிர்கொண்டது. இந்திய நாட்டின் பங்குச்சந்தையில் முதலீடு செய் திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த சில மாதங்களுக்குள்ளாக சுமார் 100 கோடி டாலரைத் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்றதே இந்த வரலாறு காணாத வீழ்ச்சிக் குக் காரணமாக அமைந்தது. தங்கள் நாட்டு பணக் கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாக மே 22ந் தேதியன்று அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவர் பென் பெர்னான்கே அறிவிப்பு ஒன்றினை வெளி யிட்டிருந்தார்.
2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்க நிதிச்சந் தையில் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற் காக அமெரிக்க ரிசர்வ் வங்கி மாதந்தோறும் 8500 கோடி அளவிலான டாலர் நோட்டுகளை புதிது புதிதாக அச்சிட்டு சுற்றுக்கு விட்டு வந் தது. இதனை மொத்தமாகக் கணக்கிட்டால் இது 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு (அதாவது 2 லட்சம் கோடி டாலர்)அளவுக்கு வரும் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப் போவதாக பென் பெர்னான்கே அறிவித்திருந் தார் இந்த அறிவிப்பையடுத்து அமெரிக்கா வில் வட்டி விகிதம் அதிகரிக்கும் என்ற எதிர் பார்ப்பில் தான் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் பங்குச்சந்தைகளில் தாங்கள் செய்திருந்த முதலீடுகளை திரும்ப எடுத்துச் சென்றுவிட்டதாக சிலர் கருத்து தெரிவித்துள் ளனர். ரூபாயின் வீழ்ச்சி பற்றிக் கருத்து தெரிவித் துள்ள பொருளாதார வல்லுநரான பிரபாத் பட் நாய்க் பின் வரும் கருத்துக்களை வெளியிட் டுள்ளார். ரூபாயின் வீழ்ச்சிக்கு பென் பெர் னான்கே மே 22ந்தேதி அறிவிப்பைக் காரண மாகக் காட்டுவது சரியல்ல. ஏனெனில் ரூபா யின் மதிப்பு அதற்கு முன்னரே அதாவது 2011 செப்டம்பர் மாதத்திலிருந்தே வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முதலாளித்துவக் கட்டமைப்பு தொடர்பான சில விளக்கங்களையும் அவர் முன் வைத்துள்ளார். முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருவாய் இந்தியாவிலும் அமெரிக் காவிலும் ஒரே விகிதமாக இருந்தாலும் பணவுடைமையாளர்கள் தங்கள் செல்வத்தை இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்வதையே விரும்புவார்கள். ஏனெனில் முதலாளித்துவத்தின் தாயகமாக இருப்பது அமெரிக்காவே, அங்கே தங்கள் பணம் இருப்பதையே அவர்கள் விரும்புவார் கள், முதலாளித்துவத்தின் மையம் மற்றும் விளிம்பு நாடுகள் என்ற கோட்பாட்டை முன் வைத்துள்ள பிரபாத் பட்நாய்க் முதலீட்டின் மீது கிடைக்கும் வருவாய் இந்தியா போன்ற விளிம்பு நாடுகளில் கூடுதலாக இருக்கும் காலங்களிலும் தங்கள் முதலீட்டுக்கு பாது காப்பின்மை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அச்சமடையும் போது விளிம்பு நிலை நாடு களிலிருந்து தங்கள் பணத்தை அமெரிக்கா வுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள்.
வேறு சொற்களில் கூறினால் முதலாளித்துவ உல கில் அடிப்படையான ஒரு சமச்சீரற்ற நிலை நிலவி வருகிறது. முதலாளித்துவத்தின் மையத்தில் இருக்கும்போது பணவுடைமை யாளர்கள் தங்கள் பணத்தை மையத்திலிருந்து விளிம்பு நாடுகளுக்கு கொண்டு செல்லும் அளவுக்கு ஒரு போதும் பீதியடைவதில்லை. ஆனால் சில நேர்வுகளில் விளிம்பு நிலை நாடுகளில் பாதுகாப்பில்லை என்று பீதிக் காளாகும் போது மையத்துக்கு தங்கள் செல் வத்தை திடீரென்று மாற்றிக் கொள்வதுண்டு சொல்லப்போனால் மையம் தான் விளிம்பு நிலை என்பது விளிம்பு நிலை தான். இதனால் தான் விளிம்பு நிலை நாடுகள் தங்கள் நாட் டுக்குள் கட்டற்ற அந்நிய மூலதன நுழைவை அனுமதிக்கக் கூடாது என்று கூறி வருகிறோம்.ஆனால் பெரிய பொருளாதார வல்லுநராக அறியப்படும் மன்மோகன் சிங் என்ன கூறு கிறார்?சீர்திருத்தங்களை பின்னுக்குத் தள்ளப் போவதில்லை. மேலும் கடுமையான சீர்திருத் தங்களுக்கான பொதுக்கருத்தை எட்டுவதற்கு முயற்சிக்கப் போகிறேன் என்கிறார். 1991ம் ஆண்டில் நாடு இதேபோன்றதொரு நெருக் கடியை எதிர்கொண்டது. அப்போது இந்தியா வின் அந்நியச் செலாவணி இருப்பைக் கொண்டு சில வாரங்களுக்கான இறக்குமதி யை மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை, இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சுதந்திர வர்த்தகப் பாதை மன்மோகன் சிங்கி னால் தேர்வு செய்யப்பட்டது. இதன் பகுதியாக இறக்குமதிகளுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் இந்தியப் பங்குச்சந்தைகளில் விரும்பிய நேரத்தில் முதலீடு செய்யவும் விரும்பிய நேரத்தில் வெளியேறவும் முதலீட் டாளர்களுக்கு அனுமதி வழங்கும் கொள்கை கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மீண்டு மொருமுறை இது போன்ற நெருக்கடி வராமல் தடுப்பதற்கு இதுவே வழி என்று கூறப்பட்டது. கடந்த 22ஆண்டுகளாக இந்த உலகமய தாராளமயக் கொள்கைகள் பின்பற்றப்பட்ட பிறகு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ,இறக்குமதிக்குத் தேவையான டாலர் இருப்பில் பற்றாக்குறை போன்ற பிரச் சனைகள் மீண்டும் நம் முன் தோன்றியுள்ளன எந்த கொள்கைகள் பின்பற்றப்பட்டதால் ஒரு நெருக்கடியான சூழ்நிலை தோன்றியுள்ளதோ அதே கொள்கைகளை மேலும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் போகிறேன் என்கிறார் மன் மோகன் சிங். இது கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றுக்குள் குதிப்பது போல் ஆகாதா?இந்தியாவில் ஏற்றுமதியை விட இறக்கு மதி அதிகமாகவே தொடர்ந்து இருந்து வந் துள்ளது.
எனவே இறக்குமதியைக் குறைக்கும் வகையில் உள்நாட்டு தொழில்களை வளர்க்க கவனம் செலுத்தினார்களா? இல்லை உட்கட் டமைப்பு வசதிகளைப் பெருக்கும் வேலையை யும் தனியாரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் அதனை உருப்படியாக நிறைவேற்றினார்களா அதுவும் இல்லை, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஊக்கமளித்தார்கள். அவர்கள் உதிரி பாகங்கள் அனைத்தையும் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்து அவற்றை பூட்டுவதற்கான தொழில்களைத் தான் இங்கே துவக்கினார்கள் அல்லது ஏற்கனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களை கையகப் படுத்திக் கொண்டார்கள். பொதுத்துறை நிறு வனங்களை தனியார்வசம் ஒப்படைப்பதில் ஆர்வம் காட்டினார்களேயொழிய ஏராளமான நிதி ஆதாரங்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனங்களின் மூலதனத்தைப் பயன் படுத்தி பொதுத்துறைத் தொழில்களை மேலும் வளர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித் தார்களா இல்லையே, இன்று நடப்புக் கணக் குப் பற்றாக்குறையைப் பற்றி வாய் கிழியப் பேசும் ப.சிதம்பரம் கடந்த மூன்று ஆண்டு களாக அதைக் கட்டுப்படுத்த என்ன நட வடிக்கைகளை மேற்கொண்டார் மாறாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை அதிகரிக் கும் விதத்தில் தானே செயல்பட்டார். ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைவதற்கு அனுமதிக்கப்படுமானால் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலை மேலும் தொடர்ந்து அதிகரிக்கும். இதன் தொடர் விளைவாக அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏற்றமடையும். இதன் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறையும். உள்நாட்டு உற்பத் திப் பொருட்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற் பட்டு அவை நலிவடையும் நிலை ஏற்படும் நுகர்வுப் பொருட்களின் விற்பனை 2012ஜூன் மாதத்தில் இருந்ததை விட தற்போது சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய தர வர்க்கத்தினர் பயன்படுத்திவரும் சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்சார அடுப்புகள் போன்றவை மட்டுமின்றி கார்களின் விற்பனையும் 10 சதவீதம் குறைந் துள்ளது, இது தொழில்களின் சீரழிவுக்கும் வேலையின்மை அதிகரிப்புக்குமே இட்டுச் செல்லும். கடும் விலைவாசி ஏற்றத்தால் சாமானிய மக்களின் வாழ்க்கை நிலை பெரும் துயரமாக மாறிவிடும். ரூபாய் மதிப்பு குறைவது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.மேலும் கடுமையான சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் மூலம் இன்று ஏற்பட் டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க முடி யாது. அவசியமற்ற இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்படவேண்டும்.
பொது முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். தனியார் துறையிடமே விட்டு விடாமல் உள்கட்டமைப்பு வசதிகளை அதி கரிப்பதற்கு அரசாங்கம் போதிய அளவில் முத லீடு செய்யவேண்டும். பொதுத்துறை நிறு வனங்களிடம் குவிந்து கிடக்கும் மூலதனத் தை பயன்படுத்தி பொதுத்துறைத் தொழில் களை மேலும் வளர்க்கவேண்டும். இவை யனைத்தும் நவீன தாராளமயக் கொள்கைகளி லிருந்து விலகிச்செல்வதாக இருக்குமே என்று அவ்வாறு செயல்படத் தவறினால் இன்று நாடு சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர முடியா

No comments:

Post a Comment