Monday, 9 September 2013

19 மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு



19 மத்திய அமைச்சர்களின் சொத்து விவரம் அறிவிப்பு

ஆண்டுதோறும் மத்திய அமைச்சர்கள் தங்களின் சொத்து விவரங்கள் மற்றும் தாங்கள் வகிக்கும் பொறுப் புக்கள் குறித்த விவரங்களை பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 2012-13ம் நிதி ஆண்டுக்கான சொத்துக் கணக்கை மொத்தம் உள்ள 76 மத்திய அமைச்சர்களில் இதுவரை 19 அமைச்சர்கள் மட்டுமே தாக்கல் செய்துள் ளனர். மீதமுள்ள 56 மத்திய அமைச்சர்கள் நடப்பு ஆண்டுக்கான சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வில்லை.
அதேசமயம் பிரத மர் மன்மோகன்சிங்கும் இந்த கணக்கை தாக்கல் செய்யவில்லை. அதன் விபரம் பின் வரு மாறு,மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.11.96 கோடியில் இருந்து ரூ.12.70 கோடியாக அதிகரித்துள்ளது. இவரது மனைவி நளினி சிதம்பரத் தின் சொத்து மதிப்பு ரூ.17.79 கோடியில் இருந்து ரூ. 19.48 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் சொத்து மதிப்பு ரூ.7.86 கோடியில் இருந்து ரூ.8.75 கோடியாக உயர்ந்துள்ளது. இவரது மனைவி பிரதீபா வின் சொத்து மதிப்பு ரூ.13.46 கோடி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெட்ரோலியஅமைச்சர் வீரப்ப மொய்லி மனைவி யின் சொத்து மதிப்பு ரூ.3.08 கோடியில் இருந்து ரூ.3.10 கோடியாக அதிகரித்துள் ளது. வீரப்ப மொய்லிக்கு ரூ.25.55 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக கணக்கு தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது. ராணுவ அமைச்சர்ஏ.கே.அந்தோணி சொத்து மதிப்பில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. மத்திய அமைச்சர் குமாரி செல்ஜாவின் சொத்து மதிப்பு ரூ.19.54 கோடியில் இருந்து ரூ.29.56 கோடியாக உயர்ந்துள்ளது.
கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொத்து ரூ.3.13 கோ டியில் இருந்து ரூ.4.78 கோ டியாக அதிகரித்துள்ளது. இவரது மனைவியின் சொ த்து ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக குறைந்துள் ளது. உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேயின் சொத்து மதிப்பு ரூ.7.42 கோடியில் இருந்து ரூ.10.83 கோடியாக அதிகரித்துள் ளது. இவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.4.53 கோடியில் இருந்து ரூ.5.77 கோடியாக உயர்ந்துள்ளது.


No comments:

Post a Comment