OFF NET அழைப்பு
நமது BSNLEU சங்க வேண்டுகோளின் படி SE
-DOT தொலைபேசிகளில் OFF NET அழைப்புக்களை தடை செய்யபட்டதை நிவர்த்தி
செய்து மாநில பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
உத்ரகாண்ட் நிவாரண நிதி
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடும்
வெள்ள பெருக்கால் எராளமான உயிர்க்கும் ,உடமைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது .
நமது மத்திய சங்கம் உத்ரகாண்ட் நிவாரண நிதியாக ஒவ்வோர் உறுப்பினரிடமும்
ரூபாய் 200/ ஐ சம்பளத்தில் இருந்து பிடித்து கொள்ள நிர்வாகத்திடம்
வேண்டுகோள் விடுத்துள்ளது .
ஒப்பந்த ஊழியர் சம்பளம்
ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க பட வேண்டும் என மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
உத்தரவு எண்:-CVL /Con .Lab /Comp /2013 Dated 21.06.13
பிரேசிலில் மக்கள் போராட்டம்
விலைவாசி மற்றும் வரி உயர்வை எதிர்த்து
பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உலக கால்பந்து போட்டிகள் நடத்தப்பட இருப்பதில் பல லட்சம்
கோடி ஊழல் செய்யப்படுவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இதனால் அங்கு மக்கள்
கொதித்தெழுந்துள்ளனர்.பிரேசிலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்
ஆரம்பமாகிய பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதாக
தெரிவிக்கப்படுகின்றது.போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோர் குதித்துள்ளதுடன் பிரேசிலின் சுமார் 100 நகரங்களில் இவை நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்து வரும் போக்குவரத்துச் செலவு, வரி வசூலிக்கும் அரசு பொதுச்
சேவைகளை ஒழுங்காக நிதி வழங்காமல் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக்கோப்பை
கால்ப்பந்தாட்ட போட்டிகளையொட்டி பெரும் தொகை பணம் செலவிடப்படுவதாகவும்
அதில் மிக பெரிய ஊழல் மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியே போராட்டங்கள்
நடைபெற்று வருகின்றது.போராட்டங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர்
காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களைக் கட்டுப்படுத்த
போலீசார் கடுமையாக முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பல இடங்களில்
கடைகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பொதுச் சொத்துக்களும் பெரிய அளவில்
சேதமாக்கப்பட்டுள்ளன.சில காலங்களாக அரபு நாடுகளில் இது போன்ற மிக பெரிய
போராடங்கட்ங்கள்
அதிகரித்து வருகின்றன. இவை தொடர்ந்து பிரேசிலில் மக்கள்
போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Thanks by. Bsnleuvr dist blog.
No comments:
Post a Comment