தந்தி சேவையை
நிறுத்தாதே !
தந்தி சேவையை வரும் 15-07-2013 முதல் மூட வேண்டும் என BSNL தலைமையகம்,
11-06-2013 அன்று உத்தரவு வெளியிட்டுள்ளது.
தந்தி சேவை பாரம்பரியமிக்க சேவை,இதனை சட்ட ஆதாரமாக பயன்படுத்துகிறார்கள்,இது இன்றும் மாநில அரசு,ராணுவம்,பல பொதுத்துறைகளால் பயன்படுத்தப்படுவதால் இதனை மூடுவதை நிறுத்த வேண்டும் என நம் பொதுச் செயலர் தோழர் பி.அபிமன்யூ
BSNL தலைமையகத்திற்கு 12-06-2013 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
சம்பள
தேக்கம்
Gr D மற்றும் RM ஊழியர்களின் சம்பள தேக்கம் பற்றி திரு.R.K.கோயல்(
GM Est) அவர்களிடம் பொதுச் செயலர் பி.அபிமன்யூ அவர்களும் உதவி பொதுச்செயலர் ஸ்வப்பன் சக்ரவர்த்தி அவர்களும் 13-06-13 அன்று நீண்ட பேச்சு வார்த்தை நடத்தினர்.
நிறுவனத்தின் கீழ் மட்ட ஊழியர்கள் சம்பள தேக்கம் சம்பந்தமாக சந்திக்கும் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்தனர். சம்பள மாற்ற பேச்சு வார்த்தை நடக்கும் போதே நீண்ட ஊதிய விகிதம்…( Longer pay sacle) வேண்டும் என்று நமது சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் அதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வில்லை . அடிமட்ட ஊழியர்களான அவர்களுக்கு ஆண்டுயர்வில் தேக்கம் ஏற்படுகிறது.
பதவி உயர்வு பெற்றாலும் அதில் எந்த பணப்பலனும் கிடைப்ப தில்லை. ஏற்கனவே 27-02-2012 ல் நடைபெற்ற தேசியக்
குழுவில் (National
Council) இது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுப்பதாக நிர்வாக தரப்பில் கூறப்பட்டது. மறுபடியும் இப்பிரச்சனையை நமது அகில இந்திய சங்கம் எழுப்பியுள்ளது.
இதில் உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி கூறப்பட்டுள்ளது.
பேச்சு வார்த்தையையொட்டி 13-06-2013 அன்று கடிதமும் கொடுக்கப்பட்டுள்ளது.
BSNL / MTNL புத்தாக்கம் சம்பந்தமாக 12-06-2013 அன்று
அமைச்சர்கள் குழு(GoM ) நடைபெற்றது. அக் கூட்டத்தில் BSNL
MTNL நிறுவனங்கள் BWA ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்ததற்கு 12,846 கோடி ரூபாயை BSNL MTNL நிறுவனங்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என தொலை தொடர்பு இலாக்கா(DOT) வலுவாக கோரிக்கை வைத்தது. அதேபோல்
MTNL பகுதியில் ஓய்வூதியத்தின் பெரும் பகுதி பொறுப்பை, சுமார் Rs.7,500 கோடி ரூபாயை அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் தொலை தொடர்பு இலாக்கா (DOT) கேட்டுக்கொண்டது.
அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அமைச்சர்கள் குழுவின் (GoM ) அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment