Sunday, 30 June 2013

ஒரே மாதத்தில் 3வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு மக்களை வதைக்கும் மத்திய அரசு

முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்
சென்னை, ஜூன் 29-அமெரிக்க டாலருக்கு எதி ரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி, விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கா மல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி விலைவாசி உயர்வுக்கு வழி வகுப்பதை மத்திய அரசு வாடிக் கையாகக் கொண்டிருப்பது ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயலாகும் என்று தமிழக முதலமைச்சர் ஜெய லலிதா கண்டித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:பெட்ரோல் விலையை உயர்த்தி 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசு என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உயர்த்தி இருப் பது வஞ்சனையின் உச்சகட்டம். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை களும், எண்ணெய் விலை நிர்ண யக் கொள்கைகளும் தான் பெட் ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்விற்கு காரணம். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்துவதற்கான நட வடிக்கைகளை மத்திய அரசு மற் றும் பாரத ரிசர்வ் வங்கி ஆகிய வற்றால் எடுக்க இயலும்.
ஆனால் அதைச் செய்யா மல், இந்தச் சுமையை மக்கள் மீது சுமத்துவது என்பதை எவ ராலும் ஏற்றக்கொள்ள இய லாது. ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக பெட்ரோல் விலை யை உயர்த்துவது என்பது மக் கள் உணர்வுகளுக்கு மத்திய அரசு கிஞ்சிற்றும் மதிப்பு அளிக் கவில்லை என்பதையே காட்டு கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை கட்டுப் படுத்த திறமை இல்லை என் றால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்ப தாக கூறப்படும் பணத்தை யாவது இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்திருக்க லாம்.ஆனால், கருப்புப் பணத்தை மீட்பதில் மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதோடு, கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் மீது கனிவு காட்டுகிறது, அவர் களை ஆதரிக்கிறது, அர வணைக்கிறது.
இந்த விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களும், ஆட் டோவில் செல்லும் சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப் படுவார்கள்.பெட்ரோலை எரிபொரு ளாக பயன்படுத்தும் தொழிற் சாலைகளும் கூடுதல் நிதியை சுமக்க வேண்டிய கட்டாயத் திற்குத் தள்ளப்படும். இதன் விளைவாக, அந்த தொழிற் சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகள் உயரக் கூடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தற்போ தைய பெட்ரோல் விலை உயர்வு மக்களை துன்பத்திற்கு உள் ளாக்குவதோடு மட்டுமல்லாமல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் மேலும் உயர வழி வகுத்துள்ளது. இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும். நாட்டின் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும்.எனவே, ஏழை, எளிய, நடுத் தர மக்களின் நலன்களைக் கருத் தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள் ளார்.
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கடும் எதிர்ப்பு
புதுதில்லி, ஜூன் 29-
ஒரே மாதத்திற்குள் மூன்றாவது தடவையாக பெட்ரோல் விலையை உயர்த்தியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தலைநகர் தில்லியில் மே மாதத்தி லிருந்து ஜூன் மாதத்திற்குள் பெட் ரோல் விலையை லிட்டருக்கு ரூ.63.09 லிருந்து ரூ.68.58ஆக கிட்டத்தட்ட ஐந்து ரூபாய் அளவிற்கு ஒரு மாத காலத்திற்குள்ளேயே மூன்றாவது முறையாக உயர்த்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக் கிறது. பல மாநிலங்களில் விதிக்கப் படும் உள்ளூர் வரிகளுக்கேற்ப இது சற்றே வித்தியாசப்படும்.பெட்ரோல் விலை உயர்வு போக்கு வரத்துக் கட்டணங்களை மீண்டும் ஒருதடவை உயர்த்திட வழிவகுக்கும். உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் அரசாங்கம் முழுமை யாகத் தோல்வி அடைந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை இது மேலும் உயர்த்தவே உதவும்.பெட்ரோலியப் பொருட்களுக் கான நிர்வாக விலை நிர்ணய அதி காரத்தை அரசாங்கம் கைவிட்டதன் மூலம், தன்னுடைய தவறான பொரு ளாதாரக் கொள்கைகளின் விளைவாக நாளும் உயரும் பொருள்களின் விலை உயர்வுகளுக்கான சுமையை மக்கள் மீது ஏற்றுகிறது.சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் கீழிறக்கக்கூடிய அரசின் இத்தகைய கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப் பது தொடரும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.
நன்றி  தீக்கதிர்


No comments:

Post a Comment