Thursday, 20 June 2019

GM(Rectt) உடன் BSNL ஊழியர் சங்கம் சந்திப்பு




GM(Rectt) உடன் BSNL ஊழியர் சங்கம் சந்திப்பு
BSNL ஊழியர் சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் தோழர் சுவபன் சக்கரவர்த்தி அவர்கள் 17.06.2019 அன்று GM(Rectt) திருமிகு சமிதா லூத்ரா அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தார். 

JTO LICE தேர்வு முடிவுகள்:- 26.05.2019 அன்று நடைபெற்ற 2017-18ஆம் ஆண்டிற்கான JTO LICE தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்து, தவறான/ பல சரியான மற்றும் குழப்பமான பதில்களை கொண்டிருக்கும் கேள்விகளுக்கும், பாடப்பகுதிக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் முழுமையான மதிப்பெண்களை அனைவருக்கும் வழங்க வேண்டும் என நமது சங்கத்தின் சார்பில் கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த GM(Rectt) அவர்கள் STANDARD OPERATION PROCEDURE படி கேள்வித்தாள் குறித்த ஊழியர்களின் குறைகள் தொடர்பாக பரிசீலிக்க நிபுனர் குழு ஒன்றை ஏற்கனவே அமைத்து விட்டதாக தெரிவித்தார். BSNL ஊழியர் சங்கம் கொடுத்துள்ள விவரங்களை அந்த நிபுனர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு குறைந்த கால அளவிற்குள் இந்தப் பணிகள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

TT LICE தேர்விற்கான கட்டணம் திரும்ப பெற வேண்டும்:- 08.09.2019 அன்று நடைபெற உள்ள TT LICE தேர்விற்கு நிர்வாகம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும், கடந்த காலங்களில் இம்மாதிரியான தேர்வு கட்டண முறை இருந்ததில்லை என்றும் நமது சங்கத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த பிரச்சனையில் தலையிட்டு கவனிப்பதாக GM(Rectt) உறுதி அளித்துள்ளார்.

JE இலாகா தேர்விற்கான தேதியை அறிவிக்க வேண்டும்:- JE இலாகா தேர்வினை OFF LINE மூலமாக நடத்த வேண்டும் என்கிற BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையினை நிர்வாகம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டது. எனினும் தேர்விற்கான தேதியினை கார்ப்பரேட் அலுவலகம் இன்னமும் இறுதி செய்யாமல் உள்ளது. இந்த பிரச்சனையை நமது சங்கத்தின் சார்பாக முன் வைத்த போது, அதற்கன பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அனேகமாக ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேர்வு நடைபெறும் என்றும் GM(Rectt) தெரிவித்தார். 

No comments:

Post a Comment