அங்கீகார விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென BSNLEU மற்றும் NFTE சங்கங்களின் பொதுச்செயலாளர்கள் கூட்டாக BSNL CMDஐ சந்தித்து கோரிக்கை.
டிசம்பர் 17 முதல் 20வரை மைசூருவில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் 9வது அகில இந்திய மாநாட்டில், ”முதல் சங்கம் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கியது என்றாலும் கூட இரண்டாவது சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற திருத்தத்தை அங்கீகார விதிகளில் கொண்டு வர வேண்டும்” என்கிற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அந்த மாநாடு முடிந்த உடனே நமது மத்திய சங்கம் அந்த தீர்மானத்தின் நகலை BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோரிடம் வழங்கியதுடன், அங்கீகார விதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துக் கொண்டுள்ளது. எனினும் நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் 27.05.2019 அன்று NFTEயின் பொதுச்செயலாளர் தோழர் சந்தேஸ்வர் சிங் அவர்களுடன் BSNL CMD திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா அவர்களை சந்தித்த BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் BSNL ஊழியர் சங்கம் கோரியபடி தேவையான திருத்தங்களை அங்கீகார விதிகளில் உடனடியாக கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தியதோடு அதற்கான மற்றொரு கடிதத்தையும் CMD BSNLஇடம் வழங்கினார்.
No comments:
Post a Comment