Friday 21 June 2019

இரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு



இரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு  தட்சிணா இரயில்வே எம்பிளாய் ஸ் யூனியன்  (DREU _ CITU) எதிர்ப்பு

__________
எரிவாயு மானியம் போல ரயில் மானியத்தையும் ஒழிக்கிறது மோடி அரசு....கட்டணம் கடுமையாக உயரும்

ரயில்வே தனியார்மயம் எனும் மோடியின் திட்டம் அமலானால் சாமானி யர்கள்  ரயில்களில் பயணம் செய்ய ஆம்னி பேருந்து கட்டணத்தை விட அதிகமாக கொடுத்தாக வேண்டும். மேலும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்க நடத்தப்பட்ட உஜ்வாலா பிரச்சாரம் போன்று ரயில் கட்டணத்தில் உள்ள 47 விழுக்காடு மானியத்தை விட்டுக்கொடுக்கும்படி பயணிகளிடம்  கருத்து கேட்கப் போவதாகவும் ரயில்வே அடுத்த அதிர்ச்சி யான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மானியம் ரத்து செய்யப்பட்டால் 53 ரூபாய்டிக்கெட் ரூ.100 ரூபாயாக உயரும். மோடியின்  முதலாவது அரசில் எரிவாயு மானியம்
ஒழித்துக்கட்டப்பட்டது. மோடியின்2வது இன்னிங்ஸ் ரயில்வே  மானியத்தை ஒழித்துக்கட்டப்போகிறது.   இந்த திட்டம்விவேக் தேவ்ராய் கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்றுதான். என்ன வித்தியாசம் என்றால் ரயில்வே வளர்ச்சி ஆணையம் அமைத்து  அதன் மூலம் தனியார் மயத்தை அமல்படுத்தவேண்டும் என்று அந்த கமிட்டி கூறியிருந்தது. ஆனால் தற்போது ரயில்வே வாரியம்  மூலமாகவே இதை அமல்படுத்த மோடி அரசு முடிவு செய்துள்ளது.
விவேக் தேவ்ராய்க்கு முன்பே  மற்றொரு நாசகர பொருளதார ஆலோசகரான ராகேஷ்மோகன் ரயில்வே துறையில் பல மாற்றங்களை செய்தாகவேண்டும் என்று பரிந்துரைகளை அளித்திருந்தார். ரயில்வே பணிகளில் தனியாரை ஈடு படுத்துவது, சரக்குபோக்குவரத்தை தனியாருக்கு திறந்துவிடுவது ஆகும். இந்தபரிந்துரைகள் மொதுவாகத்தான் அமல் படுத்தப்பட்டன. ஆனால் மோடி அரசு  மிக
வேகமாக தனியார் மயத்தை நோக்கிச் செல்கிறது என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்(சிஐடியு) செயல் தலைவர் ஆர்.இளங்கோவன். ஏற்கனவே பல ஆண்டுகளாக தனியாக
தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட் ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் ஒன்றாக இணைத்தபோதே தொழிற்சங்கங்கள் எச்சரித்தன.

  காரணம், ரயில்வே மிக விரைவில் தனியாரிடம் போகப் போகிறது; அப்படியிருக்கையில் பட்ஜெட் எதற்கு என்பதுதான். தற்போதுள்ள மோடி அரசின் முடிவின்படி, மிக விரைவில் உலகப்புகழ்பெற்ற பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்), கபுர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை உள்பட பல உற்பத்தி பிரிவுகளும் பொன்மலை ரயில் என்ஜின் ஆலை, சித்தரஞ்சன் லோகோ ஆலை உள்ளிட்டவையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இதில் ரயில்வே பணிமனைகளும் அடங்கும். இவை அனைத்தும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு முன்பு இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி என்ற பெயருக்கு மாற்றப்படும். ஒவ்வொரு உற்பத்தி பிரிவிலும் தனியார்நிறுவனங்களைப் போல் சிஇஓ அதவாது தலைமை செயல் அதிகாரிஇருப்பார். இவர் பணி லாபத்தை நோக்கிநிறுவனங்களை நடத்துவதே. அதற்குஅவர் ஆட்குறைப்பு உட்பட என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
இதுமட்டுமல்ல, மோடி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறிய மூன்றே நாட்களில், அதாவது 3.6.2019 அன்று  ரயில்வேக்கு சொந்த மாக சென்னை இராயபுரம் உள்பட நாடு முழுவதும் உள்ள 5  அச்சகங்களை மூடிவிடவும் அதில் உள்ள எந்திரங்களை விற்றுவிடவும் முடிவு செய்தது. ரயில்வே அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களை மாற்று இடங்களில் நியமிக்கவும் அச்சக வேலைகளை தனியார்மயமாக்கவும் உத்த ரவிட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக  ரயில்வே பள்ளிகளும் ரயில்வே மருத்துவமனைகளும் மூடப்படும் அபா யம் உள்ளது என்று எச்சரிக்கிறார் ஆர்.இளங்கோவன். ஏற்கனவே இந்த இரண்டையும் மூடும்படி விவேக் தேவ்ராய் கமிட்டி மோடி அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. பள்ளிகளில் மாணவர்களை இனி சேர்க்கவேண்டாம் என்று ஒருமுறை சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. பின்னர் ரயில்வே தொழிற் சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. ரயில்வே தனியார்மயமாகும் போது பாதி ரயில்வே ஊழியர்கள் ‘உபரி’ ஆவார்கள். இதை அமல்படுத்தும் திட்டம் இருப்பதால்தான் ஏற்கனவே மோடி அரசு புதிதாகவேலைக்கு ஆட்களை எடுக்காமல் 1லட்சம்ஓய்வூதியதாரர்களை ரயில்வேயின் பல்வேறு பணிகளில்  நியமித்துள்ளது. ஊழியர்களே உபரி ஆகும் போது, ஓய்வு பெற்றவர்களும் நீக்கப்படுவார்கள்.எனவே ரயில்வே  பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களை பாதுகாக்கவும்  மோடி அரசின் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவும் அரசியல் கட்சிகளும் ரயில்வே தொழிற்சங்கங்களும் நாட்டு மக்களும் இனி போராடவேண்டிய கட்டா யத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

;

No comments:

Post a Comment