2019 ஜூலை2,3,4 தேதிகளில் BSNLEU & TNTCWU மாநில சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்...
தோழர்களே..
BSNL ல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள நிலுவை என்பது 4 முதல் 6 மாதங்கள் என உயர்ந்து கொண்டே போகிறது. நிறுவனத்தின் நிதி நிலைமையை நிர்வாகம் காரணம் காட்டுகிறது. மற்றவற்றிற்கு கடன் சொல்ல முடியும். பசிக்கும் வயிற்றிற்கும், பாலுக்கு அழும் குழந்தைகளுக்கும் நம்மால் பதில் சொல்ல முடியவில்லை. அரசின் கொள்கைகளால் BSNL என்கிற பொதுத்துறை மட்டுமல்ல; அதில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் குடும்பங்களும் பசியோடும் பட்டினியோடும் பரிதவிக்க வேண்டிய நிலை. இதனை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நம் இரு சங்கங்களும் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்துவோம்.
பிரச்சனைக்கு முடிவு எட்டும் வரை போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்..
அடுத்த கட்டமாக BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU ஆகியவற்றின் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜூலை 2,3,4 தேதிகளில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..
மாவட்ட மட்ட போராட்டத்திற்கு பிறகு விரைவில் சென்னையில் சங்கமிப்போம்..
போராட்டமே நமது ஆயுதம்..வெற்றியே நமது இலக்கு..
இந்த போராட்டங்களை வலுவாக நடத்திடுவோம். ஊதியத்தை பெற்றிடுவோம்.
ஒன்றுபடுவோம்..
போராடுவோம்..
வெற்றி பெறுவோம்..
BSNLEU & TNTCWU
மாநிலச் சங்கங்கள்..
No comments:
Post a Comment