வெனிசுலாவின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதலை கண்டித்து நாகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்.
கோவையில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழுவில் வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியம் தொடுத்துள்ள தாக்குதலுக்கு எதிரான கருத்தரங்கங்களை தமிழகத்தில் நாகர்கோவில், சென்னை, கோவை மற்றும் மதுரையில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன் முதல் நிகழ்வாக நாகர்கோவில் 15.06.2019 அன்று அந்த கருத்தரங்கம் நாகர்கோவில் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் K.ஜார்ஜ் தலைமையில் மிகச்சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 150க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். நாகர்கோவில் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் செயலாளர் தோழர் P.ராஜு வரவேற்புரை நிகழ்த்தினார். BSNL ஊழியர் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் தோழர் N.சூசை மரிய அந்தோணி அவர்களும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் S.பன்னீர் செல்வம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
அதன் பின்னர் மாநில தலைவரும், அகில இந்திய உதவி பொதுச்செயலாளருமான தோழர் S.செல்லப்பா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது சிறப்புரையில், வெனிசுலாவின் வரலாற்றையும் தற்போது அங்கு நிலவும் சூழ்நிலை தொடர்பாகவும், தற்போது அந்நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்து வரும் தாக்குதல் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள சூழல் இந்திய தொழிலாளி வர்க்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது தொடர்பாகவும், இது போன்ற கருத்தர்ங்கங்களை ஏன் BSNL ஊழியர் சங்கம் நடத்துகிறது என்பவற்றையும் தெளிவாக விளக்கி பேசினார். கன்னியாகுமரி மாவட்ட JCTU தலைவர் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தனது சிறப்புரையில் வெனிசுலாவில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலையும், இந்திய தொழிலாளி வர்க்கம் நடத்த வேண்டிய எதிர்கால போராட்டங்கள் தொடர்பாகவும் விவரித்தார். BSNL ஊழியர் சங்கத்தின் நாகர்கோவில் மாவட்ட பொருளாளர் தோழர் ஆறுமுகம் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். வெற்றிகரமான இந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட சங்கங்களையும், சிறப்புரையாற்றிய தலைவர்களுக்கும் தமிழ் மாநில சங்கம் தனது மனமார்ந்த பாராட்டுதல்களை உரித்தாக்கிக் கொள்கிறது.

No comments:
Post a Comment