Sunday, 30 June 2019


BSNL க்கு 4G அலைக்கற்றை ஒதுக்க்டு செய்க, ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை ஊதியங்களை உடனே வழங்குக மற்றும் ஆட்குறைப்பு செய்யாதே என CITUவின் பொதுச்செயலாளர் தோழர் தபன் சென் மத்திய தொலை தொடர்பு அமைச்
BSNLன் நிதி நிலைமை தொடர்பாக மீடியாக்களில் வரும் செய்திகள் கவலையடையச் செய்துள்ளதாக தெரிவித்து CITU வின் பொதுச்செயலாளர் தோழர் தபன் சென் அவர்கள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 4G அலைக்கற்றையை உடனடியாக BSNLக்கு வழங்க வேண்டும் என்றும் அந்நிறுவனத்தின் வலைத்தள விரிவாக்கத்திற்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தர வேண்டிய ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அவர்களை ஆட்குறைப்பு செய்வதை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதிகப்படியான பணி ஓய்வுகள் தொடர்ந்து வருவதால், விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைப்பது ஆகிய முன்மொழிவுகளை கைவிட வேண்டும் என்றும் CITUவின் பொதுச்செயலாளர் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment