Monday, 19 October 2020

 இரங்கல் கூட்டம். 

----------------------------

நெல்லை மாவட்டம் 

--------------------------------

  19.10.2020  திங்கள்கிழமை, GM அலுவலகத்தில் வைத்து மதியம் 01.00 மணியளவில்,AIBDPA மாவட்ட செயலர் தோழர் D. கோபாலன்  அவர்களுக்கு BSNLEU  சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது.


          BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் N. சூசை மரியஅந்தோணி தலைமை தாங்கினார்.


          நெல்லை மாவட்ட TDM  கலந்து கொண்டு தோழர்  D.கோபாலன் அவர்கள்  படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.அதைத்தொடர்ந்து அனைத்து தோழர்களுக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


           நமது AIBDPA மாநில உதவி தலைவர் தோழர் V. S. வேம்புராஜா, BSNLEU மாநில அமைப்பு செயலாளர் தோழர் V. சீதாலட்சுமி, TNTCWU மாவட்ட செயலாளர் தோழர் P. ராஜகோபால், அகில இந்திய BSNL ஓய்வூதியர் நல சங்க மாவட்ட செயலாளர் தோழர் பரமசிவன்,SNEA மாவட்ட செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், NFTE BSNL மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சாலன், TEPU  மாவட்ட செயலாளர் தோழர் சுகுமார் உட்பட பல மாவட்ட செயலாளர்கள் அஞ்சலி உரையாற்றினர். 


             நமது AIBDPA தோழர்கள் உட்பட பல அதிகாரிகள் ,ஊழியர்கள்,தோழமை சங்க தோழர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


             நிறைவாக AIBDPA  மாவட்ட தலைவர் தோழர் ச.முத்துசாமி அஞ்சலி நிறைவுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார். 






Saturday, 17 October 2020

16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

 16.10.2020 அன்று நடைபெற்ற சம்பள வழக்கு விசாரணையும் இடைக்கால தீர்ப்பும்..

ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்திற்காக பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கிய போதும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 15% சம்பளம் கூட கிடைக்க பெறவில்லை.. 22.09.2020 அன்று நீதிமன்றம் வெளியிட்ட இடைக்கால உத்தரவின் அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் பில் தொகைக்கான பணத்தை நிர்வாகம் தயாராக வைத்திருக்க வேண்டும்..இந்த தொகை நிலுவை சம்பளத்திற்கான தொகையை விட குறைவில்லாமல் இருக்க வேண்டும்..மறு உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கும் வரை ஒப்பந்தகாரர்களுக்கு பில் தொகை கொடுக்க கூடாது என்று சொல்லப்பட்ட பிறகும் கூட இன்றைய தேதி வரை நிர்வாகம் நிலுவை சம்பளத்தை கணக்கீடு செய்யவோ சொல்லப்பட்ட தேதியில் பணத்தை செலுத்தவோ முன்வரவில்லை..மீண்டும் இந்த முறையும் நிர்வாகம் 5 கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்தார்கள்.. ஒப்பந்த தொழிலாளர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே வேலை செய்தமைக்கு சம்பளம் கிடைக்காமல் ஒப்பந்த தொழிலாளர்கள் மிக பெரிய துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.. சம்பள நிலுவை தொகை என்பது பல கோடி ரூபாய்களாக இருக்கிற காரணத்தால் ஒரு சிறப்பு எற்பாடு செய்து RLC நிலுவை தொகையை தொழிலாளர்களிடம் விசாரிக்க வேண்டும் அதற்கு பிறகு அந்த தொகையை நிர்வாகம் RLC யிடம் செலுத்த வேண்டும்.. முந்தைய இடைக்கால உத்தரவுகளும் தற்போதைய நிலைமைகளையும் கணக்கில் எடுத்து கொண்டு நிர்வாகம் நிலுவை தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மண்டல தொழிலாளர் ஆணையரிடம் செலுத்த வேண்டும்.. அதற்கு பிறகு அனைத்து தரப்பும் நிலுவை சம்பளத்தை பட்டுவாடா செய்வதற்கான செயல் முறையை கண்டறிய வேண்டும்.. இடைக்கால உத்தரவுகள் நிர்வாகம் அனைத்து ஒப்பந்தகாரர்களின் மொத்த பில் தொகையினை சரி பார்த்து அதில் 25% தொகையை மண்டல தொழிலாளர் ஆணையர் துவங்கப்பட வேண்டிய தனி வங்கி கணக்கான 'Contract Workers Wage Due WP 34513 ' என்ற வங்கி கணக்கில் 31.10.2020 குள் செலுத்த வேண்டும்.. மீதமுள்ள 25% நிலுவை தொகையை 20.11.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. 50% நிலுவை தொகையை 20.12.2020 குள் Contract Workers Wage Due W.P 34513 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.. இந்த மாதம் இறுதிக்குள் செலுத்தப்படுகிற 25% நிலுவை தொகை என்பது தீபவளிக்கு முன்பு ஒரு பகுதி சம்பளத்தையாவது ஒப்பந்த ஊழியர்களுக்கு கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும்.. நிர்வாகம் நிலுவை தொகையை நீதிமன்றம் கொடுத்த கால கெடுவிற்குள் கறாராக செலுத்த வேண்டும்.. அடுத்த விசாரணை 05.11.2020 அன்று நடைபெறும்.. TNTCWU மாநில சங்கம்


இரங்கல் செய்தி.   
------------------------------        
          அருமைத் தோழரும்      AIBDPA வின் திருநெல்வேலி மாவட்டச் செயலருமான , தோழர் D.கோபாலன்அவர்கள்  திருநெல்வேலி
யில் இன்று (17-10-20 ) காலை காலமாகி விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

BSNLEU வின் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், தற்போது பாரதிநகர் நலவாழ்வு சங்கத்தின் செயலாளராகவும் இருந்து திறம்பட செயலாற்றியவர். 

   அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

 அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 
02.00மணிக்கு சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து நடைபெற்றும்.

ஆழ்ந்த வருத்தத்துடன், 
P.ராஜகோபால் TNTCWU 
நெல்லை மாவட்டம்.

Friday, 16 October 2020

தகவல் அறியும் உரிமைக்குழுவை

தகவல் அறியும் உரிமைக்குழுக்களை மத்திய மாநில சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என செப்டம்பரில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.   BSNL நிர்வாகத்திடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல்வேறு தகவல்களை பெறுவது தான் இந்தக் குழுக்களின் பணி.  அவ்வாறு பெறும் தகவல்கள் மூலம், நமது சங்கம், நிர்வாகத்திடமும், அரசாங்கத்திடமும், பிரச்சனைகளை வலுவாக எழுப்ப இயலும்.
மத்திய செயற்குழுவின் இந்த முடிவையொட்டி, 09.10.2020ல் கூடிய அகில இந்திய மையக்கூட்டம், கீழ்கண்ட தோழர்களை கொண்ட அகில இந்திய தகவல் அறியும் உரிமைக்குழுவை உருவாக்கியுள்ளது: –
 (1)   தோழர்C.K.குண்டண்ணா, முன்னாள் கர்நாடக மாநில செயலர்.
(2) தோழர் மிஹிர்தாஸ் முன்னாள் AGS.
(3) தோழர் M.K.தவே, மத்திய சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர்.
இந்தக்குழுவின் அமைப்பாளராக தோழர் C.K.குண்டண்ணா  செயல்படுவார்.
மாநில தகவல் அறியும் உரிமைக்குழுக்களை, அனைத்து மாநிலங்களும் உடனடியாக உருவாக்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தோழர் P.அபிமன்யு
பொதுச்செயலாளர்

Wednesday, 24 June 2020

26.06.2020 அன்று நடைபெறும் சமூக இடைவெளியுடன் கூடிய தர்ணா




26.06.2020 அன்று நடைபெறும் சமூக இடைவெளியுடன் கூடிய தர்ணா தொடர்பாக மாவட்ட/ மாநில செயலாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்

26.06.2020 அன்று சமூக இடவெளியுடன் கூடிய தர்ணா போராட்டத்தை நடத்திட வேண்டும் என BSNL ஊழியர் சஙத்தின் மாநில செயலகம் முடிவெடுத்துள்ளதை ஏற்கனவே தெரிவித்து உள்ளோம்.

BSNL
நிறுவனம் 4G சேவை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக்கற்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும்,

BSNL
ன் புத்தாக்கத்திற்கான நடவடிக்கைகளை அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும்,

BSNL
நிர்வாகத்தால், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தியும்

இந்த தர்ணாவிற்கான அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் சக்தியாக நடைபெற வேண்டும். காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்திட வேண்டும். பங்கு பெறும் தோழர்கள், முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். 5 முதல் 15 தோழர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கோரிக்கை பலகைகளை வைத்திட வேண்டும். ஊடகங்களில் பிரசுரிக்கப்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்


Wednesday, 10 June 2020




BSNLEU  தமிழ் மாநில துணை தலைவர் தோழர் K. மாரிமுத்து, அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் K.மாரிமுத்து அவர்கள் தொலைதொடர்பு துறையில் ஒன்று பட்ட NFTE சங்கத்தில் மஸ்தூர்களை உறுப்பினராக சேர்ப்பதற்கான போராட்டத்தில் இருந்து அவகளுடைய தொழிற்சங்க பணிகளை நான் அறிந்தவன். . அவர் இறப்பு எங்களை ஆழ்ந்த துயரப்படுத்தியுள்ளது..அவரை பிரிந்த அவர்கள் குடும்பத்தாருக்கும் BSNLEU தோழர்களுக்கும் திருநெல்வேலி மாவட்டச் சங்கத்திதின் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, 12 May 2020

தொடர் போராட்டம்.

ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய ஒப்பந்த முறைக்கு எதிராக தொடர் போராட்டம்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக BSNL நிறுவனத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் கடுமையாக வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு விரட்டும் விதமாக புதிய டெண்டர் முறையை நிர்வாகம் அமல் படுத்தி வருகிறது. தமிழகத்தில் K.G.போஸ் அணி சங்கங்களால் உருவாக்கப்பட்ட தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்ட பின், BSNL ஊழியர் சங்கமும், தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் ஒன்றாக இணைந்து நடத்திய எண்ணற்ற போராட்டங்களால், தொழிலாளர் நல ஆணையர் நிர்ணயித்த ஊதியம், பஞ்சப்படி, EPF, ESI மற்றும் போனஸ் உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றோம். இதற்காக நாம் நடத்திய போராட்டங்கள் எத்தனை எத்தனை!

அப்படி போராடி பெற்ற பல சலுகைகளை எல்லாம் பறிக்கும் விதமாக தற்போது புதிய டெண்டர் முறை வந்துள்ளது. 

கொரோனா என்னும் பெருந்தொற்று உலைகையே அச்சுறுத்தி வரும் வேளையில், தங்கள் உயிரையும் பணயம் வைத்து, பத்து பதினைந்து மாதங்கள் ஊதியம் வராத நிலையிலும், இந்த ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றி வரும் சூழலில், சற்றும் இரக்கமின்றி அவர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் மாவட்ட மாநில நிர்வாகங்கள் செயல்பட்டு வருவதை இனியும் அனுமதிக்க முடியாது. 

பெருந்தொற்று தீரட்டும், நாம் நமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என காத்திருப்பதில் பயன் ஏதுமில்லை. பெருந்தொற்றின் தீங்கை விட நமது ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்களில் உள்ள பசிக் கொடுமையின் தீங்கு அதிகம் என்ற அடிப்படையில் இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக போராடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

எனவே நாம் இந்த போராட்டங்களை பலமாக, சக்தியாக நடத்திடுவோம். 

BSNL தமிழ் மாநில / மாவட்ட நிர்வாகங்களின்
ஆணவங்களுக்கு எதிராக.. அராஜகங்களை முறியடித்திட..

1. 14.05.2020 கோரிக்கை அட்டை அணிதல்..

2. 15.05.2020 தர்ணா (கறுப்புத்துணியால் கண்களை மறைத்து)

3. 18.05.2020 கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்..

4. 20.05.2020 ஒப்பந்த தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு..

BSNL நிர்வாகமே..

1) ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சேவை பாதிப்பு மற்றும் ஊழல் வாய்ப்புக்கு வழிவகுக்கும் OUTSOURCING டெண்டரை அமுல்படுத்தாதே.. அமுலாக்கத்தை ரத்து செய்..

2) VRS -க்குப் பின்னர் ஆட்பற்றாக்குறை நிலவும் சமயத்தில் ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்காதே..

3) 10 முதல் 15 மாதங்கள் சம்பள நிலுவையை உடனே வழங்கிடு..பட்டினி போட்டு சாகடிக்காதே..

பல்லாண்டுகளாக உழைத்திட்ட நாங்கள் அடிமைகளா..
பெற்ற உரிமைகளை பறி கொடுக்கவோ..
உழைப்பாளர்களா.. பிச்சைக்காரர்களா..

அணி திரண்டு போராடுவோம்..

இரவும் முடியும்.. பொழுதும் விடியும்..

BSNLEU TNTCWU தமிழ் மாநிலச் சங்கங்கள்