தகவல் அறியும் உரிமைக்குழுக்களை மத்திய மாநில சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என செப்டம்பரில் நடைபெற்ற மத்திய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. BSNL நிர்வாகத்திடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல்வேறு தகவல்களை பெறுவது தான் இந்தக் குழுக்களின் பணி. அவ்வாறு பெறும் தகவல்கள் மூலம், நமது சங்கம், நிர்வாகத்திடமும், அரசாங்கத்திடமும், பிரச்சனைகளை வலுவாக எழுப்ப இயலும்.
மத்திய செயற்குழுவின் இந்த முடிவையொட்டி, 09.10.2020ல் கூடிய அகில இந்திய மையக்கூட்டம், கீழ்கண்ட தோழர்களை கொண்ட அகில இந்திய தகவல் அறியும் உரிமைக்குழுவை உருவாக்கியுள்ளது: –
(1) தோழர்C.K.குண்டண்ணா, முன்னாள் கர்நாடக மாநில செயலர்.
(2) தோழர் மிஹிர்தாஸ் முன்னாள் AGS.
(3) தோழர் M.K.தவே, மத்திய சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர்.
இந்தக்குழுவின் அமைப்பாளராக தோழர் C.K.குண்டண்ணா செயல்படுவார்.
மாநில தகவல் அறியும் உரிமைக்குழுக்களை, அனைத்து மாநிலங்களும் உடனடியாக உருவாக்க வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது.
தோழர் P.அபிமன்யு
பொதுச்செயலாளர்
No comments:
Post a Comment